இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

08/06/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தலைமுடி நரை ஆகாமல்..!


முள்ளங்கியின் நன்மைகள்..........!!

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.


முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம் :

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தசிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது

மிக முக்கியமானது தலைமுடி வெள்ளை (நரை )ஆகாமல் பாதுகாக்கும் 

முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் 100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம்,கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கல்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.

முள்ளங்கியை வழக்கம்போல் சமைக்காமல் இந்த புதுவகையான சாப்ஸ் போல் செய்தால் முள்ளங்கி பிடிக்காது என சொல்பவர்கள்கூட வேண்டுமென்று கேட்டு சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

முள்ளங்கி - 3

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6 பல்

மிளகு - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மிளகை வெறும் கடாயில் வறுக்கவும்.

அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தோல் நீக்கி, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
, ,