குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

26.10.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸலாம் சொல்லும் முறை
ஸலாம் சொல்லும் முறை


முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி கொள்வது அனைவரும் அறிந்ததே.


நபி முஹம்மது (ஸல்) அவர்களும் இவ்வாறே நடைமுறை படுத்தி


14 நூற்றாண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக்கபட்டு வருகிறது.



ஆனால் திருகுரனில் சில வசனங்களை கவனிக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று இல்லாமல் ஸலாமுன் அலைக்கும் என வழி காட்டபட்டிருக்கிறது.


திருக்குரானில்7:46,13:24,16:32,39:73 ஆகிய வசனங்கள் சொர்க்கத்தில்


நல்லோருக்கு வானவர்கள் ஸலாமுன் அலைக்கும் என சொல்வார்கள் என தெரிவிக்கபடுகிறது.


அது போல 6:54 வசனத்தில் ஸலாமுன் அலைக்கும் என்று சொல்வீராக


எனவும். 28:55 வசனத்தில் நல்லவர்கள் ஸலாமுன் அலைக்கும் எனவும்


வேறு சில வசனங்களில் ஸலாமுன் அலைக்கும் என சொல்லாமல் ஸலாம் என்று மட்டும் சொல்லபட்டுள்ளது (10:10,11:69,14:23,15:52,19:32,25:63,25:75,33:44,36:58,37:79,37:109,37:120,37:130,37:181,43:89,51:25,56:26) ஸலாம் என்பதுதான் அதிகமான இடங்களில் குறிபிட்டபடுகிறது.


ஸலாம் என்ற சொல்லுடன் அஸ் என்ற சொல்லை இணைத்து அஸ்ஸலாமு என சொல்லவும் சான்று உள்ளது (19:33)


ஒருவருக்கு ஒருவர் ஸலாம் சொல்லும்போது திருகுரனில் சொல்லபடுவது போல் ஸலாம் என்று மட்டும் சொன்னாலும் ஸலாமுன் அலைக்கும் என சொன்னாலும் மார்க்கத்தில் அது குற்றமில்லை
, ,