குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

31.5.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பூகம்பங்கள் ஏன் ?
திருமறையின் பார்வையில் - உலகை அச்சுறுத்தும் பூகம்பங்கள் ஏன் ?

இன்று விஞ்ஞானத்தின் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில், யாருமே சாதித்திடாத சாதனைகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சாதனைகள் ஒரு புறத்தில் இருந்தாலும், இன்று இவ்வுலகை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கும் அபாயங்கள் மறுபுறத்தில் இருந்து கொண்டு இவ்வுலகை நிம்மதியின்றி இருக்கச் செய்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கின்ற அளவுக்கு ஆபத்துக்கள் நம்மை ச10ழ்ந்து இருப்பதை நாம் அவ்வப்போது உணர்ந்து வருகிறோம்.

உலகின் துருவ பிரதேசங்களான ஆர்டிகா, அண்டார்டிகா போன்ற பனி பிரேதசங்களிலிருந்து பனி மலைகள் உருகி வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பாதிப்பால் கடலின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 7 மீட்டருக்கு மேல் உயரக் கூடிய நிலையும், இதனால் பல நாடுகளின் நகரங்கள் நீரில் மூழ்கக் கூடிய அபாயங்களும் இருப்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறி வருகிறார்கள். இதோடு ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, பாதுகாப்பற்ற பயணங்கள், இதைவிட இன்று எல்லோரையும் பீதியடையச் செய்து கொண்டிருக்கின்ற பூகம்பங்கள், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கின்ற அச்சம் இன்று உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்று
இந்த பூகம்பங்கள் பற்றியும், இது எப்படி ஏற்படுகின்றது என்பதையும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும், எந்த இடத்தில் எப்பொழுது ஏற்படும்? என்ற அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் மாற்றமாகவே அமைகின்றன. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருந்தது. இன்று தமிழகத்திலும் ஆங்காங்கே நில அதிர்வுகள் ஏற்பட்டவுடன் எதிர்காலத்தில் பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்று திரும்ப கூறியிருப்பதை நாம் பார்கின்றோம்.
மேலும் பூகம்பத்திலிருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்வது, அதற்க்காக எப்படி வீடுகளை அமைத்துக் கொள்வது, இது போன்ற யோசனைகளை புவியியல் வல்லுநர்கள் தந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலும் இவை எல்லாம் சாத்தியமற்றதே என்பதை எல்லோரும் பரவலாக அறிவர். பூகம்பங்கள் திடீரென ஏற்படுவதும், இதனால் உண்டாகும் அழிவுகளும் மனித சக்தியை தாண்டிய ஒரு சக்தியால் தான் நடைபெறுகிறது என்பதை அறிவுடைய, சிந்திக்கக் கூடிய அனைவரும் உணர்வார்கள்.
இப்படிப்பட்ட ச10ழ்நிலையில் எல்லாவற்றிற்கும் வழிகாட்டக் கூடிய திருக்குர்ஆனின் பார்வையில் இருந்து இந்த அழிவுகளைப் பற்றியும், இந்த அழிவில் இருந்து நம்மைத் தற்காப்பது எப்படி? என்பதையும் நாம் ஆராய்வோம்.

உலகத்தின் ஒழுங்கமைப்பு
நாம் இதை ஆராய்வதற்கு முன் முதலில் இவ்வுலகத்தின் ஒழுங்கமைப்பைப் பற்றி ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. அல்லாஹ் இந்த உலகத்தை வீணாகப் படைக்கவில்லை, அவன் படைத்த அத்தனை படைப்புகளும் ஒரு ஒழுங்கமைப்போடு இயங்கி வருகின்றது. கோடான கோடி வருடங்களாக நிலைபெற்று வரும் இந்த பூமியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சூரியன், சந்திரன் எந்த கட்டளைக்கு உட்பட்டு உள்ளதோ அதன்படி அவைகள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த பூமியை நிலைபெறச் செய்ய உயர்ந்து நின்று கொண்டிருக்கின்ற மலைகள், அதிலிருந்து உற்பத்தியாகக் கூடிய ஆறுகள், வானத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற மேகங்கள், அதிலிருந்து மழைத் துளிகள் வெளிப்பட்டு இறந்து கிடக்கின்ற பூமியை உயிர்ப்பித்து அதிலிருந்து விதவிதமான உணவு பொருட்களை உற்பத்தியாக்கி தருவது போன்ற எத்தனையோ சான்றுகளை நாம் நம் கண்ணெதிரே காணும் பொழுது இதன் உண்மை நமக்கு புலனாகிறது.
இவ்வாறு இந்த உலகத்தை அல்லாஹ் வீனாகப் படைக்கவில்லை என்றால் எந்த காரணத்திற்காகப் படைத்தான்? என்று பார்ப்போமாகின், இந்த உலகத்தில் அல்லாஹ் படைத்த அத்தனை படைப்பினங்களும் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றது, மனிதர்களுக்கு சேவை புரிகின்றது, வாழ்வாதாரங்களை மனிதன் இவற்றின் மூலம் அடைந்து கொண்டிருக்கின்றான். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனிதனுக்காகவே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த மனிதன் எதற்காக படைக்கப்பட்டுள்ளான் என்பதைப் பற்றித் தான் முதலில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
'மனித வர்க்கத்தையும், ஜின் வர்க்கத்தையும் படைத்தது என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்குமில்லை'.
அல்லாஹ் மனிதனை பிரதிநிதிகளாக இவ் உலகத்தில் படைத்தான்.
'அவனே உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கின்றான்'. (அத்:35:39)
முதன் முதலில் அல்லாஹ் ஆதத்தை களிமண்ணிலிருந்து படைத்து, மலக்கு மார்களையும், சைத்தானையும் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டான். மலக்குமார்கள் ஸஜ்தா செய்தார்கள். iஷத்தான் கர்வம் கொண்டான், அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணித்து, களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு ஸஜ்தா செய்ய மறுத்துவிட்டான். இதனால் iஷத்தான் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான். மேலும் தான் வழிபிறழ்ந்து விட்டதால் மனிதர்களையும் வழிபிறழ வைப்பதற்கு இறுதி தீர்ப்பு நாள் வரை அவகாசம் வாங்கிக் கொண்டான்.
'என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால் திண்ணமாக நானும் இம் மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்க்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு அவர்களின் முன்னும், பின்னாலும், வலது புறமாகவும், இடது புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும் அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துபவராக நீ காண மாட்டாய். அதற்க்கு அல்லாஹ் கூறினான். நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும், இங்கிருந்து வெளியேறிவிடு. (உன்னையும்) அவர்களில் இருந்து பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன்.' (அத் 7:16-8).
மேலும்,
'(ஷைத்தான்) அல்லாஹ்வை நோக்கி கூறினான். உன் அடிமைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கினை திண்ணமாக நான் வாங்கியே தீருவேன். மேலும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். ஆசைகளில் அவர்களை உழல வைப்பேன். இன்னும் நான் அவர்களுக்கு கட்டளையிடுவேன் (அதன்படி) அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும் நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன் (அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் மாற்றம் செய்வார்கள்' (அத் 4:118-9).
இதிலிருந்து இறைவன் விதித்த இறுதித் தீர்ப்பு நாள் வரை மனிதனை நேர்வழியினை விட்டு பிறழவைப்பதற்கும், எந்த நோக்கத்திற்காக இறைவன் மனிதனை படைத்தானோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவிடாமல் அவனை தடுத்து வழிகெடுப்பதற்க்கும் ஷைத்தான் தன் முழு சக்தியை திரட்டி நிற்ப்பது ஒரு புறமிருக்கட்டும்.
அல்லாஹ் ஆதத்தை பூமிக்கு அனுப்பி 'என்னுடைய வழிகாட்டுதல்கள் உங்களுக்கு வந்து கொண்டிருக்கும் அதனை பின்பற்றி நேரான வழியில் நடந்தீர்கள் என்றால் நிலையான தங்குமிடமான சுவர்க்கத்தில் நுழைவிப்பேன்' என்று வாக்களித்ததோடு, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிகாட்ட தூதர்களை அவர்களிடமிருந்தே தோற்றுவித்து அத் தூதர்களுக்கு அல்லாஹ் தன்னிடமிருந்து சான்றுகைளை வழங்கி வழிகாட்டுவதற்கு அனுப்பினான். அந்த தூதர்கள் இறைவனின் சான்றுகளை (அற்புதங்கள்) மக்களுக்கு காட்டினார்கள். மேலும் வேதத்தை ஓதிக்காட்டி நேர்வழி காட்டினார்கள். இறுதி தீர்ப்பு நாளை குறித்து மக்களுக்க எச்சரிக்கை செய்தார்கள். இப்படியாக இறைத் தூதர்களை அல்லாஹ் எல்லா சமுதாயத்திற்கும் அனுப்பியிருந்தான். எந்த அளவிற்கு என்றால் இறைத் தூதர்கள் அனுப்பப் படாத சமுதாயமே இல்லை என்கின்ற அளவிற்கு இந்நிலையில்,,,
ஒரு புறம் சைத்தானிய சக்தி (மக்களை தீய வழியில் செலுத்தக் கூடியது) மற்றொரு புறம் இறைவழிகாட்டுதல் (மக்களை நேர்வழியில் செலுத்தக் கூடியது) இவை இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க மனிதனுக்கு சுகந்திரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இதில் மனிதன் எதை ஒன்றை தேர்ந்தெடுத்தாலும் அதற்குண்டான தீர்ப்பை மறுமையில் (இறுதி தீர்ப்பு நாளில்) இறைவன் வழங்குகின்றான். இது தான் இவ்வுலகின் ஒழுங்கமைப்பின் ரகசியம், இதிலிருந்து நாம் ஒவ்வொன்றையும் அணுக வேண்டி இருக்கிறது.
அல்லாஹ் இந்தத் தூதர்களை தன் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு சமுதாயத்தாரிடமும் அனுப்பிய பிறகு, பெரும்பாலான சமுதாயத்தினரிடையே என்ன நடந்தது என்றால்? சிலர் இறை தூதர்;களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டார்கள், சிலர் பகிங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். சிலர் இறைத் தூதர்களையும், அவரை பின்பற்றிய இறை நம்பிக்கையாளர்களையும் தொல்லையும், கொடுமைகளையும், இழைத்தார்கள். சிலர் தூதர்;களைக் கொலையும் செய்தார்கள். இறைத் தூதர்;களை கூ10னியக்காரர்கள், பைத்தியக்காரர்கள் போன்ற அவதூறுகளை அள்ளி வீசினார்கள் மேலும் இறைத் தூதர்களை புறக்கணித்து இறை நிராகரிப்பிலே மூழ்கி. சிலைகளையும், ஜின்களையும், ஷைத்தான்களையும் வழிபட்டு மன இச்சைப்படி வாழ்ந்தார்கள்.
இப்படி அநியாயம் விளைத்த சமுதாயத்தினர்கள் மத்தியில் அல்லாஹ் அவர்களின் செயல்களை திருத்துவதற்க்கு ஒவ்வொரு தடவையும் சில சோதனைகள் மூலம் குறிப்பிட்ட அவகாசத்தை கொடுத்தே வந்திருக்கின்றான், அதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் தன் செயல்களிலிருந்து மீளாமல் தொடர்ந்து கொடுமைபுரிகிறவர்களாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் அவனது தூதர்களையும், இறை நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி, இறை நிராகரிப்பாளர்களை கொடுமைபுரிந்த அந்த சமுதாயத்தினரை முற்றிலும் அழித்திருக்கின்றான்.
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து மன இச்சைகளை பின்பற்றி, இறைத் தூதர்களுக்கு கொடுமையிழைத்து, அநியாயம் செய்ய தழைப்படுகிறார்களோ, அவர்களுக்கு இறைவன் தன் செயல்களை திருத்திக் கொள்வதற்க்கு குறிப்பிட்ட அவகாசம் அளிக்கின்றான். அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்றால் அழிவு அவர்கள் மீது சாட்டப்படுகின்றது. இது இறைவனின் நியதியாகும்.

உதாரணத்தி;ற்கு திருகுர்ஆனிலிருந்து சில சமுதாயங்கள் அடைந்த கதியை பார்ப்போம்
நூஹ்(அலை) அவர்களை அல்லாஹ் தன் வழிகாட்டுதலின் படி அவர் சமூகத்தினரிடம் அனுப்பினான். அந்த சமூகத்தினர்கள் நூஹ்(அலை) அவர்களை பொய்யரென்று தூற்றிவிட்டார்கள். இறுதியில் நூஹ்(அலை) அவர்களையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். அநியாயம் செய்த அந்த சமூகத்தினரை நீரில் மூழ்கடித்து அழித்தான்.
ஆத்(து) சமூகத்தினரிடம் ஹுது நபியை அல்லாஹ் சத்தியத்துடன் அனுப்பினான் அந்த சமூகத்தினர் ஹுது நபியை நிராகரித்து, கொடுமை புரிகிறவர்களாக இருந்த காரணத்தால் ஹுது நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். நிராகரித்த அந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்களை அல்லாஹ் வேருடன் களைந்து, தூக்கி எறிந்தான்.
லூத் சமூகத்தினரிடம் அல்லாஹ் தன் தெளிவான சான்றுகளுடன் அம் மக்களுக்கு நேர்வழிகாட்ட லூத் நபியை அனுப்பினான். அவர்கள் லூத் நபி அவர்களை நிராகரித்ததுடன், உலகில் இதுவரை யாருமே செய்யாத அநியாயத்தை செய்து வந்தார்கள். ஆண், பெண்களை விடுத்து, ஆணுடனே தன் இச்சைகளை தீர்த்து வந்தார்கள். இதன் விளைவாக அல்லாஹ் அவர்கள் மீது சுட்ட களிமண் பொழிவை ஏற்படுத்தி அந்த ஊரை தலைகீழாக புரட்டிவிட்டான். லூத் நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான்.
மத்யன்வாசிகளிடம் அல்லாஹ் ஷுஐபை தன் நேர்வழிகாட்டுதலின் படி அனுப்பினான். அம் மக்கள் அவரை பொய்யரென்று கூறி இறை நிராகரிப்பில் மூழ்கி இருந்த காரணத்தால் அழிவு அவர்கள் மீதும் சாட்டப்பட்டது. அல்லாஹ் மாபெரும் நில நடுக்கத்தை ஏற்படுத்தினான். அவர்கள் வீடுகளில் தலைகுப்பற வீழ்ந்து கிடந்தார்கள். மேலும் ஹுஐபையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான்.
மேலும் மூஸா(அலை) அவர்களை தன் சான்றுகளுடன் பிர்அவுனிடமும் அவனது மக்களிடமும் நேர்வழிகாட்ட அனுப்பினான். ஆனால் பிர்அவுனும், அவனைச் சார்ந்தவர்களும் கர்வம் கொண்டார்கள், மூஸா(அலை) அவர்களை நிராகரித்ததுடன் அவரை மாபெரும் சூனியக்காரர் என்று கூறி அவரது சான்றுகளை மறுத்ததுடன், அவரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அழிக்க புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ் மூஸா(அலை) அவர்களையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றினான். மேலும் பிர்அவுனையும் அவனது கூட்டத்தார்களையும் கடலிலே மூழ்கடித்து அழித்தான்.
இந்த வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக இறைவன் அமைத்து தந்துவிட்டான். அதோடு அல்லாமல் இன்றைக்கும் சில சமூகத்தினரின் அழிவுச் சின்னங்கள் மறையாமல் நம் கண் முன்னே காணக் கிடக்கின்றன. இந்த உண்மைகளை சிந்;தித்து நாம் படிப்பினை பெறவேண்டும் என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.
முன்ப வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா-? (அது யாதெனில்) நாம் நாடினால் இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களை தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். (அத் 7:100).
இதிலிருந்து ஒரு பேருண்மை நமக்கு தெரியவருகிறது.
இந்த உலகத்தில் எப்பொழுது எல்லா மக்களும் இறை நிராகரிப்பை மேற்க்கொண்டு அநியாயங்கள் செய்து, கொடுமைகள் புரிந்து, தீமைகளின் எல்லையைத் தாண்டும் போது அம் மக்களை இறைவன் அழித்திருக்கின்றான். அதே சமயத்தில் இறைவனை முற்றிலும் நம்பிக்கை கொண்டு, அவனையே சார்ந்து வாழ்ந்த மக்களை ஒவ்வொரு தடவையும் அல்லாஹ் காப்பாற்றி வந்திருக்கின்றான். அல்லாஹ்வை முற்றிலும் சார்ந்திருப்பவர்களுக்கு அவனே அவர்களுக்கு முற்றிலும் பாதுகாவலனாக இருக்கின்றான், அவர்களை பாதுகாப்பது அல்லாஹ்வுடைய கடமையாகிறது.
இந்த கருத்தை மனதில் கொண்டு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இறுதி நபித்துவத்தைப் பற்றிய உண்மையை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இறுதி நபித்துவம்
அல்லாஹ் மக்களுக்கு நேர்வழிகாட்டிட அனுப்பிக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களை ஒட்டு மொத்த உலக மக்கள் அவைருக்கும் வழிகாட்டக் கூடியவராககவும், ஒரு அருட் கொடையாகவும் அனுப்பினான்.
பெரும் பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்து காட்டும்) இந்த புர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தான், அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராகத் திகழ வேண்டும் என்பதற்க்காக (அத் 25:1).
இதற்கு முன்பு வந்து சென்ற நபிமார்கள் எல்லோரும் ஒவ்வொரு சமூகத்திற்க்கும் மட்டுமே வழிகாட்டக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை உலகம் முழுவதும் உள்ள அத்தனை மக்களுக்கும், எல்லா சமூகத்தினருக்கும் வழிகாட்டக் கூடியவராக இறைவன் ஆக்கினான்.
(நபியே) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அத் 21:107).
அது மட்டுமல்ல முஹம்மது(ஸல்) அவர்களுக்கு பிறகு இறைச் செய்தியை சமர்பிக்க எந்த ஒரு இறைத்தூதரும் வரமாட்டார்கள். முஹம்மது நபி அவர்களே இறுதித் தூதர் ஆவார் என்பதை அல்லாஹ் அறிவித்து விட்டான்.
அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதி நபியாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். (அத் 33:40).
நபி(ஸல்) அவர்களளை இறுதி தூதர் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இறைவன் எச்சரித்த இறுதி தீர்ப்பு நாள் (கியாமத் நாள்) வரை நமக்கு நேர்வழியாக இருப்பது இறைவனின் வாக்கியமாகிய திருகுர்ஆனும், நபி அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையும் தான். அது மட்டுமல்ல இந்த இஸ்லாத்தை அல்லாஹ் பரிபூரணமாக்கி விட்டதாகவும், அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமும் இஸ்லாம் தான் என்பதை இறைவனே அறிவித்து விட்டான். இதை தவிர்த்து வேறு எந்த மதமும் அவனால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த இஸ்லாம் தான் உலகம் முடியும் வரை ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் மேலும் மக்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும் எனபதில் ஐயமில்லை.
ஆகவே இந்த ஆதாரங்களை வைத்து பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் உறுதியாக நமக்கு புலனாகிறது, இறைத் தூது முடிவுப் பெற்றுவிட்டதாலும், இஸ்லாமே இறுதி நாள் வரை அல்லாஹ்வால் ஒத்துக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்பதாலும் இறைவன் எச்சரித்து வந்த இறுதி முடிவு நாளை சந்திப்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய உம்மத்துகளாகிய நாம் தாம் என்பது திட்டவட்டமாக தெரிகின்றது. எனவே நாம் கியாமத் நாளை நோக்கி சென்று கொண்டிருப்பது முற்றிலும் உண்மை.
இப்படியிருக்க நம்மை வந்து அடைய இருக்கின்ற இந்த இறுதி நாள் எப்பொழுது வரும்.
இறைவன் கூறுகின்றான்.
இறுதி தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்பொழுது (நிகழும்) வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள், (நபியே) நீர் கூறும் அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது, அவனே அதற்க்குரிய நேரத்தில் அதை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும், அது திடீரென்று தான் உங்களை வந்தடையும்'. (அத் : 7:187).
மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்பொழுது நிறைNறும் என்று அவர்கள் கேட்கின்றார்கள். (நபியே) நீர் கூறும்! எனக்கு நானே பயனளித்து கொள்ளவும், நஷ்டம் விளைவித்து கொள்ளவும் கூட எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இந்த தவனை பூர்;த்தியாகிவிட்டால் அவர்கள் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (நபியே) நீர் கேளும்! நீங்கள் என்றைக்காவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ, பகலிலோ தீடீரென்று உங்களிடம் வந்துவிட்டால் (அப்பொழுது உங்களால் என்ன செய்ய முடியும்?) (அத் 10:48-50).
கியாமத் நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கின்றது, அதை அவன் மறைக்கப்பட்ட விசயமாக்கி விட்டான். அதே சமயத்தில் அது திடீரென நாம் எதிர்பார்க்கா ச10ழ்நிலையில் நம்மை வந்தடையும் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான், அந்த நாளின் நிகழ்வு எப்படியிருக்கும் என்றால்:-
அல்லாஹ் கூறுகிறான்,
நிகழ வேண்டிய அந்த நிகழ்ச்சி நிகழ்ந்து விடும்போது, அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்க மாட்டார், அது தலை கீழாக புரட்டக் கூடிய ஆபத்தாயிருக்கும். அந்த நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும், மேலும் மலைகள் பொடி பொடியாக்கப்பட்டு பரத்தப்பட்ட புழுதியாகிவிடும். (அத் 56:1-6).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்,
எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ, அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும். அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்து விட்டிருக்கும் (அத் 79:6-9).
மேற்கண்ட வசனத்திலிருந்து பின்னால் நாம் மாபெரும் பூகம்பத்தை எதிர்நோக்க வேண்டியிருப்பது உணர்த்தப்படுகிறது. முஹம்மது நபி(ஸல்) அவர்களும் மூன்று மாபெரும் பூகம்பத்தைப் பற்றி அறிவித்துள்ளார்கள். அது பெரிய அளவில் நடக்க இருப்பவை இதுவும் உலக அழிவிற்குண்டான காரணங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் இந்த உலகத்தை அழித்திட கையாளுகின்ற எத்தனையோ வழிமுறைகளில் முக்கியமாக இந்த பூகம்பத்தை ஏற்படுத்துவான் காரணம் இவைகள் முற்றிலும் இறை வலிமையால் ஏற்படக் கூடியது.
ஆனால் இன்று உலகெங்கும் ஆங்காங்கே ஏற்படுகின்ற நில நடுக்கங்களும் அதனால் ஏற்படுகின்ற உயிர்சேதங்களும், பொருட் சேதங்களும் எதனை உணர்த்துகின்றன? கருணையின் வடிவான இறைவன் தக்க காரணமின்றி எதையும் அழிக்கக் கூடியவனா? உலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் தான் இவைகள் எல்லாம் நடை பெறுகின்றதா? அப்படியானால் எந்த காரணத்திற்காக இவைகளை நம்மீது காட்டுகின்றான்? என்பதை சிந்திப்போமாகின் இன்றைய உலகத்தினர்களுடைய நிலையினை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகத்தினர்களின் நிலை
இன்றைய உலகத்தினர்களுடைய நிலைகளை பார்ப்போமாகின் அவர்களிடம் தீமைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை அடைந்து வருவதை பார்க்கிறோம்.
(ய) இறை மறுப்பு
அல்லாஹ் எந்த பாவங்களையும் அவன் நாடினால் மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான். ஆனால் இறைவனை நிகாரித்து அவனுக்கு இணை கற்பிப்பவர்களை ஒரு போதும் மன்னிப்பதில்லை. படைத்து, காத்து வரும் இறைவனை மறுப்பது ஒரு மாபெரிய மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். காரணம் தன் சான்றுகளை அவன் இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் பரப்பி வைத்திருக்கின்றான். ஆனால் மனிதன் தனக்கு தந்த பகுத்தறிவின் மூலம் சிந்திப்பதில்லை.
இறைவன் கூறுகிறான்,
உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான், அளவிலா கருணையும் இணையில்லா கிருபையும் உடையோனுமாகிய அவனை தவிர வேறு இறைவன் இல்லை. (இந்த உண்மையை அறிந்து கொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவு, பகல் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருபவற்றை சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக் கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர் கூட உயிர்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும், பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. (ஆனால் இறைவன் ஒருவனே என்பதை தெளிவு படுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர் அல்லாஹ்வை தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். (அத் : 163-165).
இன்று உலகத்தைப் படைத்து, பரிபாலித்து வரும் இறைவனை மறந்து. அவனுடைய சான்றுகளை மறுத்து, தானே உருவாக்கிய சிலைகளையும், கற்களையும் கடவுளாக்கி கொண்டார்கள். மேலும் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத பாம்பு, பசு, மரம், இன்னும் சூரியன், சந்திரன் இவைகளையும் கடவுளாக்கி கொண்டு வாழக் கூடியவர்களையும்,
இறைத் தூதரை 'இறைவனின்' மகன் என்றும் அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் என்று பொய்யைக் கூறிக் கொண்டும் இறைத் தூதர், அவரது தாயார் இவர்களையே கடவுளாக்கி இறைவனுக்கு இணை கற்பித்து வாழக் கூடியவர்களும்,
மன இச்சைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழக் கூடியவர்களும் நிறையக் காணப்படுகிறார்கள். முந்தைய சமுதாயத்தினர் செய்த அதே தவற்றை ஏன் அதைவிட அதிகமாக இவர்கள் செய்துவருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்.

(டி) விபச்சாரம்
இன்று உலக அளவில் விபச்சாரம் பெருகிவிட்டது. எந்த அளவுக்கெனில் விபச்சாரத் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று விபச்சாரிகள் கோரிக்கை எழுப்புகின்ற அளவுக்கு ஆகிவிட்டது. அது மட்டும் அல்ல இறைவன் கண்ணியமாக்கிய உறவுகளில் தகாத முறையில் உடலுறவு வைத்திருக்கின்றவர்களையும் மேலை நாடுகளில் பார்க்கிறோம்.
நான்கு சுவர்களுக்குள் நடக்கின்ற உறவுகளை வெளியில் சொல்ல தடை விதித்தார்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். ஆனால் இன்று நான்கு சுவர்களுக்குள் நடக்கின்ற விசயத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். அதை சினிமா டி.வி. என்ற பெயரில் உலகத்துக்கே சிறியவர் முதல் பெரியவர் வரை அதை பார்க்கக் கூடிய நிலையை கொண்டு வந்துவிட்டார்கள். அது மட்டுமல்ல,,
லூத் சமூகத்தினர்கள் ஆண், ஆணிடமிருந்து தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள கூடிய கொடுமை புரியும் சமுதாயமாக இருந்தார்கள், அதனால் தான் அல்லாஹ் அவர்களை அழித்தொழித்தான். ஆனால் இன்று பெண், பெண்ணிடம் இச்சைகளை தீர்த்துக் கொண்டு ஆணில்லாமல் எங்களால் தனித்து வாழமுடியும் என்றும் இதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் மேலை நாட்டு பெண்கள் அதிசயமான கோரிக்கைகளையும், வழக்குகளையும் தொடுத்து வரக்கூடிய நிலைiயும் பார்த்து வருகின்றோம்.
இன்று விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்து கொண்டு வருகிறதோ அதன் மாயைகளில் மனிதன் சிக்கி தன்னை மறந்து ஒழுக்க சீர்கேடுகளிலும் வளர்ந்து கொண்டு வருகிறான் என்பது உண்மை.

(உ) வலியவர், எளியவருக்கு கொடுமையிழைத்தல்
இன்று பணம் படைத்தவன், மக்கள் பலம் கொண்டவன், அதிகாரம் உள்ளவன், தனக்கு கீழே உள்ள பலம் குன்றியவர்கள் மீது கொடுமைகள் புரிவது அதிகமாகிவிட்டது. இது ஒரு தனிப்பட்ட மனிதனிலிருந்து ஒவ்வொரு குழுக்கள், நாடுகள்வரை இது நடந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் வலிமை குன்றிய நாடுகளின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது, கட்டுப்பாட்டை விதிக்கிறது, பொருளாதார தடையை விதிக்கிறது. தன்னிடம் உள்ள பலத்திலும், தன்னை எதிர்ப்பவர் யாருமில்லை என்ற கர்வத்திலும் தேவையில்லாமல் குண்டுகள் வீசி மக்களை அழிக்கின்றது. இதைப் போல் பலம் கொண்ட மதங்கள் பலம் குன்றிய சிறுபான்மை மதத்தினர் மீது கொடுமை புரிகின்றது. அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் மதச் சண்டை, ஜாதிச் சண்டை இப்படியாக ஒருவருக்கொருவர் இரத்தம் சிந்திக் கொண்டும், கொடுமை புரிந்து கொண்டும் இருக்கக் கூடிய ச10ழ்நிலையை நாம் பார்க்கின்றோம்.
விஞ்ஞான் வளர்ச்சிகளை அழிவுக்கு பயன்படுத்தி வருகிறார்கள், வலியவர்கள் எளியவர்களை தாக்கி கொடுமையிழைக்கும் பொழுது தான் அவர்களிடையே தீவிரவாத அமைப்புகளும் உறுவாகின்றது, உலகம் முழுவதும் இப்படியொரு அமைதியின்மையே நம்மால் காணமுடிகிறது.

(ன) கேளிக்கை அரங்குகள்
இன்று மனிதன் தன்னுடைய வளர்ச்சிக் கேற்ப்ப தன்னை மறந்து, தான் எதற்காகப் படைக்கப் பட்டுள்ளோம் என்பதையும் மறந்து இவ்வுலகத்தில் உள்ள அனைத்து சுகங்களையும், இன்பங்களையும் அனுபவித்திட துடிக்கின்றான். உலக வாழ்க்கையில் மோகம் கொண்டவனாக திரிகின்றான். இதனால் எந்த கீழ்தரமான செயல்களை கூட செய்யத் தயங்குவதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்.
இவ் உலக வாழ்வென்பது ஏமாற்றக் கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை. (அத் 3:185)
ஆனால் இன்று அற்ப இன்பத்தை அனுபவிக்க வித விதமான கேளிக்கை அரங்குகளை மனிதன் உருவாக்கிவிட்டான். இன்னும் இது போன்ற எத்தனையோ விசயங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முற்காலத்தில் எந்த தீமைகள் மக்களிடத்தே பரவிக் கிடந்தனவையோ அதை விட அதிகமாகவே இன்று உலக மக்களிடம் தீமைகள் மலிந்து கிடப்பது முற்றிலும் உண்மையான விசயமாகும்.

இஸ்லாமியர்களின் நிலை
இஸ்லாத்தை அல்லாஹ் பரிபூரணமாக்கி இஸ்லாமியர்களை சிறந்த சமுதாயத்தினராக ஆக்கினான்.
அல்லாஹ் கூறுகின்றான்.
'மனித இனத்தை சீர்படுத்துவதற்க்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள், தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அத் 3:110).
மனித இனத்தை சீர்படுத்துவதற்க்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற உயர்ந்த சமுதாயத்தினராகிய நாம் இன்று எந்த நிலையில் இருக்கின்றோம். உலகம் முழுவதும் இன்று முஸ்லிம்கள் பரவி விட்டார்கள், இஸ்லாம் நுழையாத நாடுகளே இல்லை. இஸ்லாம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்க்கு நிறைய நாடுகள் வளர்ந்துவிட்டன, இருப்பினும் எந்த நோக்கத்திற்காக அல்லாஹ் நம்மைப் படைத்தானோ அந்த நோக்கத்தை நிறைவு செய்பவர்கள் குறையாகவே இருக்கின்றார்கள்.
ஒரு பிரிவினர் மேலை நாட்டு மோகத்தில் ஆர்வப்பட்டவர்களாகவும், அவர்களை பின் தொடரக் கூடியவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.
ஒரு பிரிவினர் வல்லரசாகிய அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இறை நிராகரிப்பாளர்களை தங்களது பாதுகாவலர்களாகவும், ஆதரவாளர்களாகவும் ஆக்கிக் கொண்டுள்ளனர். அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்றுக் கொள்ளாமல் இறை நிராகரிப்பாளர்களை ஏற்றுக் கொண்டதால் இன்று அவர்களுக்கு பணிந்து போகக் கூடிய ச10ழ்நிலையும், அவர்களுடைய சில ஏவல்களுக்கு தலை ஆட்டிக் கொண்டு சுய கௌவுரவத்தை இழந்து நிற்கின்றன.
இன்னும் ஒரு பிரிவினர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக திரிகின்றனர் அவர்களிடம் எந்த இறைவணக்கமும் இல்லை.
இந்திய நாட்டின் நிலையை எடுத்துக் கொண்டாலும் இதே ச10ழ்நிலை தான் நிலவுகிறது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்றுக் கொள்ளாமல் இன்றைய மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்களை பாதுகாவலர்களாக நினைத்து அவர்கள் பின்னால் ஒடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படிப் பட்ட நிலையே இன்று உலக இஸ்லாமியர்கள் இடத்தில் காணப்படுகின்றன.
இதுவரையில்,
அல்லாஹ் படைத்த இந்த உலகத்திலன் ஒழுங்கமைப்பைப் பற்றியும் நோக்கத்;தைப் பற்றியும் ஆராய்ந்தோம்.
இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனை படைத்தானோ அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்க்கு தன் இறைத் தூதர்கள் மூலம் நேர்வழி காட்டி வந்ததையும், அதே சமயத்தில் சைத்தானும் மனிதனை நேர்வழியில் இருந்து தீய வழிக்கு அழைத்துச் செல்ல நாலாபுறமும் ச10ழ்ந்து இருப்பதையும் பார்த்தோம்.
இறுதி நபித்துவத்தைப் பற்றியும் இறுதி தீர்ப்பு நாளுக்குண்டான உலக அழிவுகளை நம்மவர்களே சந்திக்க இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக ஆராய்ந்தோம்.
முன்பு வாழ்ந்த சமுதாயத்தினர்களின் நிலையையும், அவர்கள் எதற்க்காக அழிக்கப்பட்டார்கள் என்பதையும் திருக்குர்ஆன் மூலமாக ஆராய்ந்தோம்.
அதேபோல் இன்றைய உலகத்தினருடைய நிலை, இஸ்லாமியர்களின் நிலை ஆகியவற்றையும் ஆராய்ந்தோம்.
இவை ஒன்றோடு ஒன்றை சம்பந்தப்படுத்தி சிந்தித்து ஆராய்ந்தும் பார்த்தால் இறைவன் ஏற்படுத்தும் இந்த பூகம்பத்தைப் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியும்.
அல்லாஹ் மாபெரும் கருணையாளன் தன் படைப்புகளின் மீது அளப்பரிய அன்பும், பரிவும் கொண்டவனாக இருக்கின்றான். அவன் எந்த தேவையும் அற்றவன், நாம் தான் அவனிடத்தில் தேவையுள்ளவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ் பொருமையாளன் அதனால் தான் மனித குலம் புரியும் கொடுமைகளுக்கு உடனுக்குடன் தண்டிக்காமல் தனக்கென்று ஒரு நியதியை வகுத்துக் கொண்டு பொறுமையுடன் இருக்கின்றான் அதோடு சிறந்த பாதுகாவலனாகவும், மன்னிக்க கூடியவனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்,
வானங்கள் மற்றும் பூமியால் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும் (அவை அனைத்தையும் பராமரித்து பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவன். (அத் 4:171).
இப்படி படைப்பினங்களை பாதுகாக்கக்கூடிய இறைவன் மக்களை காரணமின்றி அழிப்பது அவனது நியதில் இல்லை. தக்க காரணமின்றி அல்லாஹ் எதையும் படைப்பதும் இல்லை. அது போல் தக்க காரணமின்றி அல்லாஹ் எதையும் அழிப்பதும் இல்லை.
மேலும் கூறுகின்றான்.
எத்தனையோ ஊர்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம், இரவு நேரத்தில் அல்லது நன்பகல் நேரத்தில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்த போது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களை தாக்கியது. அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களை தாக்கிய போது அவர்களால் எதையும் கூற இயலவில்லை. உண்மையிலே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத் தான் இருந்தோம் என்று கூக்குரலிட்டதைத் தவிர.
மேற்கண்ட இறைவசனத்தில் 'அவர்களால் எதையும் கூற இயலவில்லை. உண்மையிலே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத் தான் இருந்தோம் என்று கூக்குரலிட்டதைத் தவிர. என்ற வார்த்தையிலிருந்து அக்கிரமக்காரர்களைத் தான் இறைவன் அழித்திருக்கின்றான் என்ற பேருன்மை தெரிகின்றது.
இரண்டாவது, கியாமத் நாளும் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. இந்த கூ10ழ்நிலையில் முன்பு வாழ்ந்து சென்றவர்கள் முன்பு எந்த தவற்றை செய்து வந்தார்களோ, அதே தவற்றை இன்று உள்ளவர்களும் செய்து வருகிறார்கள்.
அன்று அவர்கள் இறைவனை முற்றிலும் நிராகரித்து, இறைவனால் படைக்கப் பட்டவைகளை வணங்கி கண்மூடித்தனமாக வாழ்ந்து வந்தார்கள். அதே நிலமை இன்று இங்கும் நிலவி வருகிறது. இறைவனை சிந்திக்காமல் கற்களையும், சிலைகளையும், இன்னும் iஷத்தான்களையும் வணங்கிக் கொண்டு உண்மையான நோக்கத்தை மறந்து வாழ்ந்து வருகிறார்கள்.
அன்று அவர்கள் எப்படி ஒழுக்கக் கேடுகளில் வீழ்ந்து மன இச்சையின் படி வாழ்ந்தார்களோ, இன்று இவர்கள் விஞ்ஞான வளர்ச்சிக் கேற்ப ஒழுக்க வீழ்ச்சியிலும் முன்பு வாழ்ந்தவர்களை விட முந்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அன்று வலிமை பெற்றவர்கள் எழியவர்களை அடிமைப்படுத்தி கொடுமை இழைத்து வந்தனர். குறிப்பாக இறை நம்பிக்கை கொண்டவர்களை துன்புறுத்தினார்கள், அவர்களை அல்லாஹ்வை நம்பியதை விட்டும் தடுத்தார்கள். நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கும் இங்கேயும் அதே நிலையைத் தான் காண்கிறோம். இஸ்லாத்தை முற்றிலும் நசுக்க திட்டம் தீட்டப் படுகிறது, பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகின்றது, இஸ்லாமிய நாடுகள் நசுக்கப்படுகின்றது இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம்.
அன்று இறைவனால் அழிக்கப்பட்ட மக்களிடத்தில் எந்தந்த தீமைகள் காணப்பட்டனவோ அதை விட எவ்விதத்திலும் குறைவில்லாது இன்று இங்கும் தீமைகள் காணக்கிடக்கின்றன, கொடுமைகள் நடந்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அன்று மக்களை இதன் காரணமாக அழித்தான் என்றால் இன்று இங்கும் அதுபோல் நடப்பது சாத்தியமே.
அல்லாஹ் சிலருக்கு சிலரைவிட உயர்வையும், அந்தஸ்தையும் சிறப்பையும் தந்திருக்கின்றான். அந்த அடிப்படையில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உம்மத்தாகிய நமக்கு அல்லாஹ் சிறப்புகளை வழங்கியிருக்கின்றான். காரணம் முன்பு வாழ்ந்த சமூகத்தினர்கள் இறைத் தூதர்களின் மத்தியிலே வாழ்ந்தார்கள். இன்று நாம் இறைத் தூதரையும், இறைத் தூதர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களையும் நாம் பார்த்ததில்லை நபி அவர்கள் காட்டித் தந்த வழிமுறைபடியும், இறை மறையின்படியும் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்வதால் தான். இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் தண்டனைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த அடிப்படையில் இன்று அல்லாஹ் அழிவுகளை தந்து எச்சரிப்பது நம்முடைய சீர்கேடுகளை சீர்தூக்கிப் பார்த்து அதை திருத்திக் கொள்வதற்குரிய அவகாசம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இறைவன் கூறுகின்றான்.,,
அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காக (இவ்வுலகிலேயே) தண்டிப்பானேயானால், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக அல்லாஹ் தம் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான். (அத் : 35:45).
இன்னொரு வசனத்தில் கூறுகிறான்,,,
இதற்க்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது. எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது, பின்பு வாழவும் முடியாது. (அத் : 15:4-5).
ஆகவே இன்று ஆங்காங்கே நடக்கும் பூகம்பங்கள் நம்முடைய தீயச் செல்களை திருத்திக் கொண்டு வாழ ஒரு அவகாசம் தான். இதை நாம் உணர்ந்து நம்முடைய செயல்களை சீர்திருத்திக் கொள்ளவில்லையென்றால் பின்னால் ஒரு மாபெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும். இது குறிப்பிட்ட சமூகத்தினர் மீதோ, குறிப்பிட்ட நாட்டின் மீதோ இல்லை உலகம் முழுவதிலுமோ ஏற்படலாம்.
நடந்து முடிந்திருக்கின்ற பூகம்பங்கள் நம்முடைய செயல்களை திருத்திக் கொள்ள ஒரு அவகாசம் என்றால் நாம் இதிலிருந்த நிறைய படிப்பினைகள் பெறவேண்டியுள்ளது. காரணம் நாம் மறுமையின் வெற்றியை அடைய இங்கு சோதனைக்காக அனுப்பப் பட்டவர்கள்.
அல்லாஹ் கூறுகிறான்,,,
உலக வாழ்க்கை என்பது விளையாட்டும், வேடிக்கையுமே அன்றி வேறில்லை. உண்மையில் எவர்கள் தீய நடத்தையை தவிர்க்க விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு மறுமை இல்லமே மிகவும் நலமுடையதாயிருக்கும். அவ்வாறிருக்க நீங்கள் பகுத்தறிவை பயன்படுத்த மாட்டீர்களா? (அத் : 6:32).

நடந்து முடிந்த பூகம்பத்தினால் நாம் பெறும் படிப்பினைகள்
நேற்றுவரை வாழ்விலும், பொருளாதாரத்திலும் செழித்துக் கொண்டிருந்த சமுதாயம், ஒரு வினாடியில் அவர்கள் நினைத்துக் கூட பார்த்திராத அளவுக்கு அவர்களுடைய தலையெழுத்து மாற்றப்பட்டது என்றால். நம்முடைய செல்வம், நமக்கிருக்கும் வசதிவாய்ப்பு இதெல்லாம் இறைவன் நாடினால் ஒரு வினாடியில் பறிக்கப்பட்டு விடும் எனவே அவர்களைப் பற்றி பூரிப்பு அடையாமலும், பெருமை கொண்டு அழையாமலும், இறைவன் கொடுத்த வசதி வாய்ப்புகளை நினைத்து அவனுக்கு நன்றி சொல்லி வாழ வேண்டும் என்ற உணர்வும் இந்த உலகத்தில் நமக்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்ற படிப்பினை பெறுகிறோம்.
அதிகார செருக்கோடும், செல்வச் செருக்கோடும் நடந்து வந்தவர்கள் இன்று பிச்சைக்காரர்களாக வெளியில் வந்து நிற்கும் பொழுது, பூமியில் பெருமை கொண்டு அழையாமல் பணிவோடு நடக்க வேண்டும், இறைதந்த செல்வத்தையும், அதிகாரத்தையும் தவறாக பயண்படுத்தக் கூடாது என்ற படிப்பினை பெறுகிறோம்.
அல்லாஹ் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதில்லை தண்டனை எல்லோருக்கும் ஒன்று தான்.
'உங்களில் சிறந்தவர் ஒழுக்கத்தால் சிறந்தவரே' என்ற நபிமொழி பிரகாரம் ஒழுக்கத்தில் சிறந்து வாழ்பவர்கள் தான் சிறந்தவர்கள் என்ற படிப்பினை பெறுகிறோம்.
கணவன்! மனைவி, பிள்ளைகளை காப்பாற்ற முடியாத சுழ்நிலை, மனைவி! கணவனை, பிள்ளையை காப்பாற்ற முடியாத ச10ழ்நிலை இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு இப்படி ஒரு ச10ழ்நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று ஒவ்வொருவரும் அல்லாஹ்வுக்கு பயந்து தம் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் இதிலிருந்து எந்த நிலையிலும் இறைவனின் உதவிதான் நம்மை காப்பாற்றக் கூடியது என்ற படிப்பினை பெறுகிறோம்.
அல்லாஹ்வின் தண்டனை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏறபடலாம், அதை தடுத்து நிறுத்துபவர் யாருமில்லை. இதிலிருந்து அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த புகலிடமும் இல்லை என்ற படிப்பினை பெறுகிறோம். இப்படியாக எத்தனையோ படிப்பினைகள் இறைவன் கொடுத்த பகுத்தறிவு பயன்படுத்தும் போது நாம் பெறமுடிகிறது.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது என்றால் ஓரிடத்தில் பூகம்பம் ஏற்பட்டால் அதன் அழிவுகளை கண்டு மனிதன் பரிதாபம் கொள்கிறான். அதைப் பற்றி இரண்டு நாள் கவலையடைகிறான். பிறகு திரும்பவும் அவன் பழைய நடவடிக்கைக்கே திரும்பி விடுகிறான். இதனால் அவன் எந்த படிப்பினையும் பெறுவதில்லை.
நாம் இது போன்ற அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் நாம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்பதினை கருத்தில் கொண்டு நம்முடைய நிலைகளை சரிசெய்து கொண்டு அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வாழக் கூடிய இறை நம்பிக்கையாளராகத் திகழ வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்.,
உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் போது அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும் அவர்கள் தங்களுடைய இறைவனையே சாந்திருப்பார்கள். (அத் 8:2).
இப்படி உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக, இறை வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம்மை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொள்கிறான். முன்பு வாழ்ந்து சென்றவர்களில் எப்படி ஒவ்வொரு தடவையும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர்களை காப்பாற்றினானோ, அதே மாதிரி நம்மையும் காப்பாற்றுவான் அவனை முற்றிலும் சார்ந்திருக்கும் பட்சத்தில்,
அல்லாஹ் கூறுகின்றான்.,
எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்க்கொள்பவராய் இருக்கின்றாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் (அத் 2:12).
ஆகவே முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்திருப்பது தான் இந்த பூகம்பத்தின் அழிவிலிருந்து நம்மை காத்துக் கொள்ள கூடிய தீர்வாகும்.
அப்படி அவனை சார்ந்திருக்கும் பட்சத்தில் எப்படிப்பட்ட அழிவு வந்தாலும் நாம் சிறிதும் கவலையோ, அச்சமோ படவேண்டிய அவசியமில்லை. ஆகவே நாம் நம் கடமைகளை சரிவர நிறைவேற்றி முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்து வாழ்வோமாக!
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்து நிற்க்க வேண்டும். (அத் 5:11)
, ,