குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.1.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹிஜாப்
ஹிஜாப் : பெண்களைப் பாதுகாக்கும் அரண்

நிச்சயமாக வழிகேட்டாளர்களும் குழப்பவாதிகளும் ஹிஜாப்பை  சீர்குழைப்பதற்காகவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக ஹிஜாபானது பெண்ணின் மாற்றத்திற்குக் காரணமாகும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். நிச்சயமாக அது அவளை மறைத்து அவளது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அழகை வெளிக்காட்டுவதிலும் கட்டுப்பாடின்மையை ஹிஜாபின் மூலம் அவளுக்கு உணர்த்துகின்றது.
இதுவே அவளது நாகரீகத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஆதாரமாகும். ஒழுக்க நெறி தவறிய சில பெண்கள் உறுதி கொள்வது போன்று அவர்கள் பெண்ணின் சீர்திருத்தத்தைக் கருதவில்லை. அவர்கள் கருதியதெல்லாம் பெண்ணின் சீர்கேட்டையும், அவளது வெட்கம், கற்பு (போன்றவற்றை) ஒழித்துக் கட்டுவதையும் தான்.



என் முஸ்லிம் சகோதரியே..! இப்பேச்சினைப் போன்றதொன்றினால் நீ ஏமாற்றப்படுவதையிட்டு நான் உன்னை எச்சரிக்கின்றேன்.

நீர் உன் மார்க்கத்தில் மேன்மையானவளாகவும் உன் ஹிஜாபினில் பற்றுள்ளவளாகவும் இருக்க வேண்டும். ஹிஜாபானது அல்லாஹுத்தஆலாவின் வணக்கமும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் ஆகும். பெண்ணுக்கு அவள் நாடும் போதெல்லாம் விட்டு விட அது ஓர் வழக்கமல்ல. அது ஒரு கற்பு, சுத்தம், வெட்கம் ஆகும். நிச்சயமாக அல்லாஹ் இதனைக் கொண்டு ஏவிய போதெல்லாம் அவன் கருதியது என்னவென்றால், நீ பரிசுத்தமானவளாகவும், ஒருவனுடைய இழிந்த செயல்களாலும் கெட்ட வார்த்தைகளாலும் நீ வேதனைப்படுவதிலிருந்து உன் அனைத்து உறுப்புக்களையும் உன் உடம்பையும் பேணிக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதையே. இன்னும் அவன் உனக்கு உறுப்புக்களையும் அமைத்திருக்கின்றான். அது உனக்கு சிறப்பும் கௌரவமுமே தவிர வீணானவை அல்ல. அது அழகான ஆபரணமும் பூரணமான பண்பும் ஆகும். இன்னும் அது உன் ஈமானுக்கும் ஒழுக்கத்திற்கும் மற்றும் உன் குணங்களை இனங்காட்டக் கூடியதுமான மகத்தானதொரு ஆதாரமம் ஆகும். கெட்ட செயல்களை விட்டும் அது உனக்கொரு பரிசுத்தமும் ஆகும்.

அதனை விட்டு நீ பொடுபோக்காகவோ அல்லது அதனை வெறுப்பதையோயிட்டு உன்னை நான் மிகவும் விசாரிக்கின்றேன். ஏனெனில், அல்லாஹ்வின் கோபத்திற்காகவும் அவனது தண்டனைக்காகவுமே ஒரு பெண் தனது ஹிஜாப் வெறுத்து அதில் பொடுபோக்காகவும் இருக்கின்றாள். அல்லாஹ்வின் திருப்தியையும் நெருக்கத்தையும், மக்களிடமிருந்து கௌரவத்தையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதற்காகவே ஒரு பெண் தனது ஹிஜாபை; பேணிக் கொள்கின்றாள்.

ஹிஜாபின் நிபந்தனைகள்

நிச்சயமாக ஹிஜாபானது ஒரு முஸ்லிம் பெண்ணுக்குக் கடமையாகும். அது என்னவெனில்,

நீளமானதாக இருக்க வேண்டும்

கவர்ச்சியமானதாக இருக்கக் கூடடாது

ஒடுக்கமானதாக இருக்கக் கூடாது

பிரபல்யமானதாகவோ அத்தர் பூசப்பட்டதாகவோஇருக்கக் கூடாது.

ஏனெனில் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தர் பூசிக் கொண்டு அந்நிய ஆடவர்களுள்ள இடத்துக்கு செல்வதை பெண்கள் மீது ஹராமாக்கியுள்ளார்கள்.

''ஒரு பெண் அத்தர் பூசிக் கொண்டு அவளுடைய வாடையை அவர்கள் உணர்ந்து கொள்வதற்காக கூட்டத்தாரிடையே நடந்து சென்றடைய அவள் விபச்சாரியாவாள்'' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஆணின் ஆடையை ஒத்திருக்கக் கூடாது.

ஹிஜாபானது முழு உடலையும் மறைக்கக் கூடியதாக இருப்பது கடமையாகும்.

முகம் அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) அல்ல என்று கூறி சில பெண்கள் அதில் பாராமுகமாயிருக்கின்றனர். என்ன ஆச்சரியம்!! எவ்வாறு அத்தர் இல்லாமல் இருக்கக் கூடும்? பெண்ணிலுள்ள மிகப் பெரிய குழப்பமே இதுவாகும். அது அவளுடைய அழகையெல்லாம் ஒருமித்துக் காட்டக் கூடிய ஓர் அழகு சாதனம் ஆகும்.

பெண்ணின் முழு உடலையும் மறைப்பது கடமை என்பதை அறிவிக்கக் கூடிய ஆதாரங்கள் அல்குர்ஆனிலும், இன்னும் நபிமொழித் தொகுப்புகளில் வந்திருக்கின்றன. ஏனெனில் பெண்ணின் உடல் முழுவதுமே அவ்ரத் மறைக்க வேண்டிய பகுதியாகும். அவளுக்கு மஃரமில்லாத ஆண்கள் எவரும் அவளை ஹிஜாப் இன்றிப் பார்ப்பது கூடாது. மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

''அவர்கள் தம் முந்தானைகளால் தங்கள் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும்''. இவ்வசனம் இறங்கிய போது அன்சாரிப் பெண்கள் தங்களது சால்வையையே அணிந்து கொண்டிருந்தார்கள். பின்பு அதனைப் பிரித்து அதன் மூலம் தங்களை மறைத்துக் கொண்டார்கள்'' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். 'அவர்கள் மறைத்துக் கொண்டார்கள்', அதாவது அவர்கள் தங்கள் முகங்களை மூடிக் கொண்டார்கள்'' என்று இந்த ஹதீஸின் விளக்கத்திலே பார்க்க முடிகின்றது.

இன்னுமொரு ஆதாரப்பூர்வமானதொரு நபிமொழியில் வருகின்றது, அதாவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவதூறு கூறப்படட் சம்பவத்திலே, அவர்கள் அவர்களது இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடத்தில், ஸஃப்வான் பின் முஅத்தல்(ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நான் முந்தானையால் மறைத்துக் கொண்டேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறிதொரு அறிவித்தலில், 'எனது முந்தானையால் என் முகத்தை மூடிக் கொண்டேன்' என்று வருகின்றது. எனவே அனைத்து ஆதாரங்களுமே முகத்தை மூடிவது கடமை என்றே வருகின்றது.

இவ்வாறே ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கும் தன் உள்ளத்தால் இறைவனைப் பயப்படுவதும் பூரணமான ஹிஜாப் கடைபிடிப்பதும், தன் மணிக்கட்டையோ அல்லது முழங்கையையோ திறப்பதிலும் அல்லது 'நிகாப், லிஸாம்' போன்ற ஆடைகளை அணிவதிலும் அல்லது முகத்தின் பெரியதோர் பகுதியை வெளிக்காட்டுவதும் அல்லது மெல்லிய துண்டினால் மூடிக் கொள்வது போன்றவற்றால் பிறரது பார்வையில் படாதவாறு மறைவாக இருப்பதும் அவசியமாகும்.

இவ்வாறு மெல்லிய துண்டினால் தம்மை மறைத்துக் கொண்டு, அது தான் பூரண ஹிஜாப் என உறுதி கொண்டு, உடம்பை திறந்திருக்கும் நிலை என்பது சாதாரணமானது, அது ஒரு ஃபித்னா வாகவோ, அழகை வெளிக்காட்டுவதாகவோ கணிக்கப்படாது என்றெண்ணுகின்றார்கள். ஆனால் இது தவறு. இன்னும் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கும் அதற்கு நல்ல முறையில் சிறப்பளிப்பதும், அவை ஒவ்வொன்றும் தடுக்கப்பட்டவை என்றும் அது இழிவாக்கப்பட்ட அழகை வெளிக்காட்டுவதன் ஒரு பகுதியாகும் என்றும் அறிந்து வைத்திருப்பதும் அவள் மீது அவசியமாகும். இன்னும் அவளது ஹிஜாப் க்கு எதிராக ஏற்படும் தாக்கங்களை அல்லது அவளது வெட்கத்தை அழிக்கக் கூடிய ஒவ்வொன்றை விட்டும் தூரமாகுவதும் அவள் மீது கடமையாகும். இவ்வாறு அவள் நடந்து கொண்டால் அல்லாஹ்வின் கோபமோ அவனது தண்டனையோ அவளை அணுகாது. மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கூற்றிலே, ''இரு கூட்டத்தார் நரகத்திற்குரியவர்கள், அவர்களிருவரும் சுவனத்தைக் காண மாட்டார்கள் என்று ஆண்கள், மற்றது பெண்கள், (அவாகள் எத்தகையவரென்றால்) அரைநிர்வாணமாகவும், அவர்களது தலையிலே ஒட்டகத்தின் திமிழ் போன்று (முடி உயர்த்தப்பட்டிருக்கும்) நிரப்பப்பட்டிருக்கும். அவர்கள் சுவனத்தில் நுழையவும் மாட்டார்கள். அதனுடைய வாடையை நுகரவும் மாட்டார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

சில அறிவாளிகள் கூறுகின்றனர் : அரை நிர்வாணம் என்பதன் கருத்து, அவர்கள் ஆடை அணிந்திருப்பார்கள் என்றாலும் அது ஒடுக்கமானதாகவோ அல்லது மெல்லியதாகவோ அல்லது முழு உடலையும் மறைத்ததாகவோ இருக்கும்.

ஹிஜாப் ன் பண்பைப் பற்றி முஹம்மது ஸாலிஹ் பின் உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறிய பதிலைப் பார்ப்போம் :

சட்ட ரீதியான ஹிஜாப் எவ்வாரெனில், ''தம் பார்வையினால் ஆண்கள் குழப்பமடையும் பொழுதெல்லாம் ஒரு பெண் தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானதொன்றே முகமாகும். ஒவ்வொரு அநிநய ஆடவனிடமிருந்தும் தன் முகத்தை மறைத்துக் கொள்வது அவள் மீது கடமையாகும். ஆனால் அவளது மஃரமியாக (திருமண முடிக்க தடுக்கப்பட்டவர்கள்) இருந்தால் அவளது முகத்தை திறந்திருப்பது கூடும்'' என்பதே உறுதியான கருத்தாகும்.

இன்னொரு அறிஞர் இவ்வாறு கூறுகின்றார் :

(ஒரு பெண்) தன் முடியை மறைத்து தன் முகத்தைத் திறந்திருப்பதைச் சட்டபூர்வமான ஹிஜாப் என்று கருதுகின்றாள். இது என்ன ஆச்சரியமான கூற்று?! குழப்பத்துக்கே மிகப் பெரிய வழி பெண்ணின் முடியா? அல்லது அவளது முகமா? ஒரு பெண்ணிடம் ஒருவனுக்கு ஆசை வருவது அவளது முகத்தைப் பார்த்தா? அல்லது அவளது முடியைப் பார்த்தா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை முகம் தான். இவ்விசயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு மனிதன் பெண்ணின் முகம் அழகாயிருந்து அவளது முடியில்லா விட்டாலும் அவளை விரும்புகின்றான். ஆனால் அவளது முகம் இழிவானதாக இருந்து, முடி அழகானதாகவும் இருந்தாலும் அவன் அவளை விரும்புவதில்லை. இதில் உண்மையாதெனில், (முடியுடன் சேர்த்து) முகம் மறைக்கப்பட வேண்டியதொன்று என்பதில் சந்தேகமோ குழப்பமோ அடையாத போதெல்லாம் அது பூரணமான சட்டரீதியான ஹிஜாபாக அமைகின்றது.

அழகை வெளிக்காட்டுவது கெடட செயலுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கின்றது.

நிச்சயமாக ஒரு பெண் ஆடவர்களுக்குத் தன் அழகை வெளிக்காட்டினால், அவளது முகத்திலுள்ள செழிப்புக் குறைந்து அவளது வெட்கம் அழிந்து மக்களின் பார்வையிலே அவள் விழுந்து விடுவாள். இன்னும் அவளது இந்த செயல்கள் அவளுடைய மடமை, அவளது ஈமானின் பலவீனம், அவளது ஆளுமையின் குறைவு என்பனவற்றையே எடுத்துக் காட்டுகின்றது. இதுவே அவளது வீணுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகும். இவ்வழகை வெளிக்காட்டுவதன் மூலம் அல்லாஹ்வால் கௌரவிக்கப்பட்ட மனிதன் என்ற (உயர்ந்த) ஸ்தானத்திலிருந்து இழிந்த அந்தஸ்துக்கு அவள் தன்னை இட்டுச் செல்கின்றாள். இஸ்லாத்தின் விரோதிகளும், வழிகேட்டாளர்களும் உறுதி கொள்வது போன்று நிச்சயமாக அழகை வெளிக்காட்டுவதானது நாகரீகத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஆதாரம் அல்ல. எனினும் இதில் உண்மை என்னவெனில், அது கெட்ட செயலுக்கும், குழப்பத்திற்கும் வழிகோலக் கூடிய ஒரு சமூகக் குழப்பமும், இழிவும், வீழ்ச்சியும் ஆகும். இன்னும் இஸ்லாமிய ஒழுக்கங்களையும் நற்குணங்களையும் மாற்றக் கூடியதொரு செயலுமாகும். இந்தச் செயலை வெட்கமோ நற்குணங்களோ இல்லாத ஒரு மடப் பெண்ணால் தான் செய்ய முடியும். ஏனென்றால் ஒரு புத்திசாலியான பத்தினிப் பெண்ணால் தனதுள்ளத்தையும் தன்னழகையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

சில பெண்கள் மக்களுக்கு அழகை வெளிக்காட்டிக் கொண்டும், அவளது முகத்தைத் திறந்து கொண்டும் வெளியேறினால் மக்களின் கௌரவத்தையும், அவர்களது விருப்பத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். இது தவறானதாகும். யார் இவ்வாறான நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கின்றாளோ அவள் தனது நம்பிக்கை தவறு என உறுதி கொள்ளட்டும். ஏனெனில் இவ்வாறான விசயங்களை செய்பவர்களை மக்கள் ஒரு போதும் கௌரவிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை ஓர் இழிந்த கண்ணோட்டத்திலே தான் நோக்குவார்கள். அவள் அவர்களது கண்ணோட்டத்திலே நற்குணங்களோ கௌரவமோயின்றி ஒரு கெட்ட பெண்ணாகவே தென்படுவாள். எனவே, ஒரு புத்திசாலிப் பெண்ணால் அவை ஒவ்வொன்றின் மூலமும் எவ்வாறு தன் மனதைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடியும்? இழிந்த ஒன்றுக்கு அவளை அழைத்தது எது? அவள் எதன் மூலம் இவ்வித்துக்கு இறங்கினாள்? அவளது புத்தியும் வெட்கமும் எங்கே சென்றன??

அழகை வெளிக்காட்டுவதன் மூலம் ஷைத்தானால் ஏமாற்றப்பட்டவளே..! நீ அல்லாஹ்வைப் பயந்து கொள். உன் செயல்களிலிருந்து மீண்டு அவனிடம் மன்னிப்புக் கேள். உனக்கு என்ன நேர்ந்திருக்கின்றத என்பதை அறிந்து கொள். உன் நடத்தை என்னவென்று நினைத்துப் பார். கொடுமை செய்யப்படக் கூடிய நரகினில் தனிமையான உன் இருப்பிடத்தை நினைத்துப் பார். மறுமை நாள் நிலையை நினைத்துப் பார். இன்னும் கேள்வி கணக்கு, மீஸான் என்னும் தராசு, நரகம் ஆகியவற்றையும் நினைத்துப் பார். இன்னும் அதில் அவனது கட்டளைகளுக்கு மாற்றம் செய்கின்றவர்களுக்கு கொடுமையான வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான் என்பதையும் நினைத்துப் பார். இச் செயல்களைப் போன்றதொன்றினை நீ முற்படுத்து முன் அவை அனைத்தையும் நினைத்துப் பார். இன்னும் அல்லாஹ்வின் வேதனை ஒன்றைக் கூட உன்னால் சுமப்பதற்கு முடியாது. எனவே உனக்கு இது போன்ற கைசேதங்கள் ஏற்படும் முன் நீ இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டு விடு சகோதரியே..!

உம்மு ஸைனப்
, ,