இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

16/02/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நல்ல கொழுப்பை அதிகரிக்க பிஸ்தா
மூடப்பட்ட திண்ணமான ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ’ என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.
30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும். இதனை பருப்புகளின் ராஜா என்று கூட அழைக்கலாம்.
ரஷ்ய நாட்டினர் கோடைகாலத்தில் பீர் குடிக்கும்போது, அதற்கு சைடு டிஷ் ஆக பிஸ்தா உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரித்துக் கொள்வதற்காக மதுபானத்துடன் சிறிதளவு பிஸ்தாவையும் எடுத்துக்கொள்கிறார்கள்.சரி நமக்கு எந்த வகையில் இது உதவுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதால் இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனைகொடுக்கிறது.
வைட்டமின் “பி6” ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் ஒரு மனிதனுக்கு வைட்டமின் பி6குறைவாக இருந்தால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைந்து எளிதில் நோய் தொற்றுஏற்படுகிறது.
அழகான சருமம்
பிஸ்தாவில் வைட்டமின் “ஈ” மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது.
மேலும் வைட்டமின் “ஈ” ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதிற்கும் உதவுகிறது.
ஆரோக்கியமான பார்வை
பிஸ்தா பருப்பில் சியாசாந்தின் (Zeaxanthin) மற்றும் லூட்டின் (Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது.
இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின்விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது.
மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய ஆரோக்கியம்
பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது.
பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல்(றீபீறீ) கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல்(லீபீறீ) கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும்.
நீரிழிவு நோய்
பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.
மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.
மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
ஆரோக்கியமான இரத்தம்
பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
புற்றுநோய்
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.

, ,