குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

2.1.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய் (ரலி)
உம்முல் முஃமினீன் ஷஃபிய்யா பின்த் ஹுயைய் (ரலி)

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்து முடிந்த நேரம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய படையணியை கைபரை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த தருணம். ஏனெனில் கைபரில் வாழ்ந்த பனூ நதீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள்
முஹம்மது (ஸல்) அவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்திருந்த காரணத்தினால் அவர்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தவர்களாக கைபரை நோக்கி இறைத்தூதர் (ஸல்)

அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் படையெடுத்துச் சென்றார்கள்.

அகழ் யுத்தத்தின் பொழுது, தங்களுக்கு எதிராக அரபுக் குலங்களை

முஸ்லிம்களின் படையணி கைபரை அதிகாலை நேரத்தில் வந்தடைந்திருந்தது, ஆனால் படையணிகள் ஊருக்குள் நுழையாமல் நன்கு பொழுது புலரும் வரை காத்திருந்தது. அதிகாலை நேரத்தில் வயல்வேலைகளுக்காக தங்களது வீடுகளை விட்டு மண்வெட்டி சகிதம் வந்த யூதர்கள், தங்களது வயல் வெளிகளின் பக்கம் முஹம்மது (ஸல்) அவர்களது படையணியைப் பார்த்து விட்டு;, நம்மைத் தாக்க முஹம்மது அவர்களின் படை வந்திருக்கின்றது என்று கத்திக் கொண்டே ஊருக்குள் விரைந்தார்கள்.

யாருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதோ, அவர்களது அன்றைய காலைப் பொழுது கெட்ட பொழுதாகவே புலர்ந்தது. இறைத்தூதுர் (ஸல்) அவர்கள் பனூ நதீர் கோத்திரத்தாரின் ஒவ்வொரு கோட்டையாகக் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள். அவர்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களையும் கைப்பற்றினார்கள். அத்தகைய பெண்களில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர் தான் அன்னை ஷஃபிய்யா பின் ஹுயைய் (ரலி) அவர்கள்.

யூதக் குலத்தில் பிறந்திருந்தாலும் மிகவும் கண்ணியமிக்க அழகு மிக்க பெண்மணியாகத் திகழ்ந்த அன்னையவர்கள், முந்தைய தூதரான ஹாரூன் (அலை) அவர்களது வழித்தோன்றல்களில் வந்தவர்களாகவும் இருந்தார்கள். அன்னையவர்களின் முந்தைய கணவர் கினானா இந்த கைபர் போரில் கொல்லப்பட்டதோடல்லாமல், அவர்களது ஒன்று விட்ட சகோதரியும் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இவர்களை பிலால் (ரலி) அவர்கள் யூதர்கள் கொல்லப்பட்டுக் கிடந்த வயல் பரப்பின் வழியாக நடத்திக் கூட்டி வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் நிறுத்தினார்கள். இறந்து கிடந்தவர்களைப் பார்த்த ஷஃபிய்யா பின் ஹுயைய் அவர்களின் ஒன்று விட்ட சகோதரி விறிட்டுக் கத்தியவர்களாக முகத்தில் அறைந்து கொண்டும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டும் கத்த ஆரம்பித்தார்கள்.

இந்த அலங்கோலக் காட்சியைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தப் பெண் ஷைத்தானை இந்த இடத்தை விட்டும் அப்புறப்படுத்துங்கள் என்று கூறினார்கள். ஆனால் ஷஃபிய்யா பின் ஹுயைய் அவர்களோ தனது ஒன்று விட்ட சகோதரி நடந்து கொண்டதைப் போன்று நடந்து கொள்ளவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபிய்யா அவர்களின் துன்பத்தை உணர்ந்து கொண்டார்கள்.

பின்னர் பிலால் (ரலி) அவர்களை நோக்கி, ஓ பிலால் அவர்களே! இறைவன் உங்களது இதயத்திலிருந்து இரக்கத்தை எடுத்து விட்டானா? தங்களது ஆண்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் நிலையில் அவர்களுக்கு மத்தியில் இரண்டு பெண்களை நீங்கள் இவ்வாறு அழைத்து வந்து கொண்டிருக்கின்றீர்களே? என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

ஷபிய்யா பின்த் ஹுயைய் அவர்களை பிலால் அவர்களுக்கு பின்னால் நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை அவர்களை நோக்கி தனது மேலாடைத் துண்டை எறிந்தார்கள். ஷபிய்யா பின்த் ஹுயைய் அவர்களை தனது மனைவியாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேர்வு செய்து கொண்டார்கள் என்பதை, அப்பொழுதே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் புரிந்து கொண்டார்கள்.

ஷஃபிய்யா அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த ஆறுதல் வார்த்தைகளையும் தன்னை அவர்களது மனைவியாகத் தேர்வு செய்திருப்பதையும் எண்ணி அவர்கள் ஆச்சரியமடையவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்து முடிந்த நேரம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய படையணியை கைபரை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த தருணம். ஏனெனில் கைபரில் வாழ்ந்த பனூ நதீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்திருந்த காரணத்தினால் அவர்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தவர்களாக கைபரை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் படையெடுத்துச் சென்றார்கள்.

, ,