குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.8.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்க
இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். ”மொபைல் இல்லாது எவறும் இல்லை” எனும் நிலை வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை
இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற விடுவதும் அதிகமாகிறது .

இவ்வாறு திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது . அதுதான் 360 SECURITY,

இதை GOOGLE PLAY STORE இல் அல்லது இங்கே கிளிக் செய்து தரவிரக்கிகொள்ளவும் .
இதை உங்கள் போனில் நிறுவிக்கொள்ளவும் .
அதில் உள்ள மெனுவில் ANTI-THEFT என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும் .
அதில் உங்கள் விருப்பமான கடவு சொல்லை (PASSWORD) அமைக்கவும் . இதுக்கு ANTI-THEFT CODE என பெயர்.
ENABLE ANTI-THEFT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
உங்கள் மொபைல்லில் சிம் மாற்றபட்டால் எந்த எண்ணுக்கு SMS வரவேண்டும் என செட் செய்யவும் .( உங்கள் வீட்டு எண்ணை அல்லது நண்பர்கள் என்னை கொடுக்கவும்
).அவ்வளவுதான் ,
உங்கள் மொபைல் காணாமல் போய் யாராவது அதில் வேறு சிம் கார்ட் போட்டால் அந்த என்னில் இருந்து நீங்கள் செட் செய்த எண்ணிற்கு ஒரு SMS வரும் . இதன் மூலம் யார் உங்கள் போனை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடிக்கலாம் .

இதன் பயன்கள் :

நீங்கள் SMS மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்களை உடனே அழிக்கலாம் .
SMS மூலம் போனை லாக் செய்யலாம் .
GOOGLE MAP மூலம் போனின் இடத்தை கண்டுபிடிக்கலாம் .
போனில் அலாரத்தை உடனே செயல்படவைக்கலாம் . இதனால் எடுத்தவர்கள் அருகே இருந்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம் .
இதில் தேவையில்லாத கால் , SMS பிளாக் செய்யமுடியும் .
வைரஸ் எதிர்ப்பு புரகிராம் உள்ளடங்கியது .
தேவையில்லாத JUNK FILE, TEMP FILE ஆகியவற்றை அழிக்க வசதி உண்டு .
போனின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது .

, ,