குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

3.7.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நல்லெண்ணெய்-ஹீலர் பாஸ்கர்
நல்லெண்ணெய் குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியங்களை வழங்குகிறது.

இதில் உள்ள லினோலிக் அமிலம் இரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.



நல்லெண்ணெய்யில் உள்ள சத்துக்கள்

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.

இது உடலில் கொழுப்புச்சத்தை குறைத்து உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.

நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் செய்யும் முறை

சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.

பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

நன்மைகள்

தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.

கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.

தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும்.

Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி தீரும். பொடுகு தொல்லை தீரும்.

பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.

உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணர முடியும்.
, ,