குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.1.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண்ட்ராய்டு கைபேசி செயலிகள் காப்பு
almighty-arrahim.blogspot.com
கூகுள் ப்ளே ஸ்டோர் தரும் பல கவர்சிகரமான செயலிகளை பார்க்கும் போது அதன் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கும் கூட அதனை பயன்படுத்த ஆசை ஏற்பட்டுவிடும்.


அந்த வகையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் குறைந்தது ஒரு 5 செயலிகளையாவது நிறுவியிருப்போம். சிலர்கள் 50 தொடக்கம் 100 வரையான செயலிகளை நிறுவி பயன்படுத்துவதும் உண்டு.


எது எப்படியோ எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகளை Backup செய்து சேமித்து வைத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு:

நாம் புதியதொரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது எமது முன்னைய ஸ்மார்ட் போனில் இருந்து சேமிக்கப்பட்ட செயலிகளை புதிய ஸ்மார்ட் போனுக்கு மிக இலகுவில் நிறுவி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பல்வேறு காரணங்களுக்காக ஒரு செயலியை நீக்கிவிட்டு மீண்டும் நிறுவ வேண்டிய தேவை இருப்பின் அதனை மீண்டும் நிறுவிக்கொள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் Backup செய்தவற்றை கொண்டு மீள நிறுவிக்கொள்ளலாம்.

ஏதாவது ஒரு சந்தர்பத்தில் மாத்திரம் பயன்படுத்தும் செயலிகளை நிறுவி வைத்திருப்பதால் எமது ஸ்மார்ட் போன் இயங்கும் வேகம் குறைவடைவதுடன் பேட்டரியும் மிக விரைவில் தீர்ந்துவிடும் சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு. எனவே அவற்றை Backup செய்து வைப்பதன் மூலம் தேவையான சந்தர்பங்களில் மாத்திரம் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் நாம் Backup செய்த செயலிகள் எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகளை மிக இலகுவாக Backup செய்து கொள்ள உதவுகிறது App Backup & Restore எனும் செயலி,  பதிவிறக்க


இதனை எந்த ஒருவராலும் இதனை மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த செயலியை திறந்தவுடன் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள அனைத்து செயலிகளையும் இது பட்டியல்படுத்தும்.


பின் உங்களுக்குத் தேவையானவற்றை தெரிவு செய்து Backup என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த அனைத்து செயலிகளையும் ஒரே நேரத்தில் Backup செய்துகொள்ள முடியும். Backup செய்யப்பட செயலிகளை ARCHIVED எனும் பகுதி மூலம் அறிந்துகொள்ளலாம்.


பின் உங்களுக்குத் தேவையானவற்றை தெரிவு செய்து Backup என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த அனைத்து செயலிகளையும் ஒரே நேரத்தில் Backup செய்துகொள்ள முடியும். Backup செய்யப்பட செயலிகளை ARCHIVED எனும் பகுதி மூலம் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு Backup செய்யப்பட அனைத்து செயலிகளும் மீள பயன்படுத்திக் கொள்ளும் வகையில் APK கோப்புகளாக உங்கள் மொபைலில் சேமிக்கப்படும். குறிப்பிட்ட செயலியின் செடிங்ஸ் பகுதியில் Backup path என்பதன் மூலம் அவைகள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிந்து கொள்ளலாம்.

தேவைப்படின் அவற்றை Copy செய்து உங்கள் கணினியிலும்சேமித்துக் கொள்ள முடியும்.

இது தவிர உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை தெரிவு செய்து அவற்றை வை-பை, ப்ளூடூத் போன்றவற்றின் ஊடாக ஏனைய ஸ்மார்ட் போன்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

, ,