குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.4.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -22
almighty-arrahim.blogspot.com
தலைமைத்துவம் [Leadership] என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம்
என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி நடக்க ஆரம்பித்தவுடன் 'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம்.

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.



இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால் கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.


இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.


Qualities of Good Leaders.


வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள்.

Leadership by ACTION, not by Position:


எங்கும், எதிலும் இப்போது உள்ள சமுதாயம் தனக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்கிறது. இதை விட்டு'பெரியவங்க செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்ற கி.மு வில் உள்ள விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எப்படி சரியாக இருக்கும் என்ற விளக்கமும் இப்போது உள்ள சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும். அப்படியானால் தலைமைத்துவம் என்பது "எனக்கு தெரியாததா...எத்தனை வருசங்களை கடந்து வந்திருப்பேன்" என்ற ஸ்டேட்மென்ட் அவ்வளவு எடுபடாமல் இன்றைவரை அதற்காக உங்கள் செயல்பாடு என்பது என்ன என்பதில்தான் இருக்கிறது.அதனால்தான் தொடர்ந்து செயலிழந்து போன தலைவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி,நிறுவனமாக இருந்தாலும் சரி இயற்கையாகவே ஓரங்கட்டப்படுகிறார்கள்.


கற்றுக்கொள்ளும் அறிவுத்தாகம் என்பது ஒரு நல்ல தலைவனின் தரம் சார்ந்தது. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் தலைவரா...சாதாரண ஊழியரிடம் கூட ஒரு நல்ல விசயத்தை கற்றுக்கொள்ள தயங்கவேண்டாம். அப்படியே கற்றுக்கொண்டாலும் உங்கள் இமேஜ் உயரும், அதைவிட டாப் மேனேஜ்மென்ட்டுக்கும் ,கடை நிலை ஊழியருக்கும் உள்ள உறவு இன்னும் பலப்படும். இதனால்எதிர்காலத்தில் வரும் விரிசல்கள் சரி செய்ய இந்த உறவுப்பாலம் உதவியாக இருக்கும். இதற்குத்தான் ஒரு மிகப்பெரிய மந்திரச்சொல் என்று ஒன்று உண்டு அது. I need your help?.... எவ்வளவு பெரிய கோபக்காரனையும் உங்களுக்கு சாதகமாக்க இந்த ஆரம்ப வார்த்தைகள் உதவியாக இருக்கும். குடும்பங்களிலும் அப்படித்தான்,வெகுநாட்களாக ஒத்துவராத அண்ணன் , தம்பி பிரிவில் கூட மனசங்கடங்கள் வரும் சூழ்நிலையில்' எனக்கு ஏன் நீ உதவி செய்யக்கூடாது ? ' என்று கேட்டு விட்டால் இன்னும் உறவு கெடாமல் காப்பாற்றப்படலாம்.


ஒரு சிறந்த தலைமத்துவத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்போதும் நிஜத்தோடு ஒன்றியிருப்பான் [Being relevant] எப்போது பார்த்தாலும் பழையபுராணம், டெலிஃபோன் எக்ஸேஞ்சில் ஒயரை கழட்டி மாட்டி கனெக்சன் கொடுத்த டெலிபோன் காலத்தில் சாதித்தையெல்லாம் இப்போது உள்ள கேலக்ஸி நோட் சமுதாயத்துடன் கதைத்துகொண்டு [ அதையும் அவர்கள் காது கொடுத்துதான் கேட்கிறார்கள் என்று நம்பி] தன்னை ஒரு தலைவராகவே கற்பனையில் வளம் வருவது அரசியல் கட்சிகள் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று சொல்வதுமாதிரி 'ஒட்டாத உண்மை".


ஒரு சிறந்த தலைவருக்கான தரங்களில் ஒன்று எப்போதும் பொறுப்பு எடுத்துக்கொள்வது. 'நான் உண்டு என்வேலை உண்டுனு இருப்பேன் பேர்வழிகள்' இந்த லிஸ்டில் வராது. காரணம் இப்படி தன்வேலையை மட்டும் பார்த்து, தன் குடும்பம் என்று மட்டும் வாழ்ந்தவர்களால் மற்றவர்களின் கஷ்டங்களை ஆழமாக புரிந்து கொள்ள முடியாது.


ஒரு நிறுவனத்தில் ஒரு சேல்ஸ்மேனின் கஷ்டம் எது என்று தெரிந்தால்தான் அந்த தலைவர் விற்பனையை எப்படி அதிகரிக்க முடியும் என யோசிக்க முடியும். இல்லாவிட்டால் பண்டிகை நேரங்களில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் பொருள்களை அனுப்ப அட்டு ஐடியா கொடுக்க நேரிடலாம்.


ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது , ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் என்ற சொல்லே இருக்கிறது. சிலர் ஒரு நாக்கை வைத்து , அதற்குள் பிளேடு,அரிவாள் எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் செய்து பல குடும்பத்தில் குழப்பத்தையும், பல ஆட்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் வேலையை செவ்வனே செய்துவருகிறார்கள். பின் காலத்தில் கஷ்டம் என்று வந்தவுடன்.."எனக்கு ஏன் இப்படி?" என்று யோசிக்கும் இவர்கள். 'நான் எப்படி?" என்று யோசிப்பதே இல்லை. சரியாக காது கொடுத்து கேட்காமல் தான் வைத்ததுதான் சட்டம், அறிந்தது அறியாதது அனைத்தும் அறிவோம் என்று நடந்தால் சீக்கிரம் படமாக தொங்கிவிடுவோம்.


உங்களிடம் சரியான தலைமைத்துவம் இருக்கிறதா என்பதின் முதல் படிகளில் ஒன்று . "கெளரவம்" இது அகந்தை அல்ல.'இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் இந்த ஆள் செய்ய மாட்டான்" என்று சமூகம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் நடத்தை இருந்தால் அதற்கு கிடைப்பதுதான் கெளரவம்.


தலைமத்துவத்தில் உங்களுக்கென்று தனிவழி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது தேவைப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் அந்த தனிவழியை காரணம் காட்டியே நிறைய 'துப்பு" வாங்களாம். பெரிசா கிழிக்கிறதா சொன்னே" யிலிருந்து நீங்கள் கஷ்டப்பட்டு படித்த டிகிரியை முதற்கொண்டு உங்களின் ஃபைலை திறக்காமல் எடுத்து வந்து துப்புவார்கள். இதன் அளவு ரிசல்ட்டை பொறுத்து...நீங்கள் சொன்ன தனிவழி குறைவாக ரிசல்ட் தந்தால் திட்டோடு அட்வைசும்,எதிர்மறையான ரிசல்ட்டுக்கு எக்கச்சக்கமான துப்பும் கிடைப்பது கியாரன்டி.


தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.


இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்று,தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது.


மேற்ச்சொன்ன அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும். தெரிந்து கொள்வதை விட நாம் எப்படி என்று Self Analysis செய்து கொள்வது நல்லது. தொழிலிலும் / குடும்பத்திலும்.


ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்
, ,