- டிரம்ப் வரி: இந்திய பொருட்களுக்கு 26 சதவிதம் வரி; அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவிப்பு! - ETV Bharat
- மியன்மார் நிலநடுக்க பலி 3,000ஐ கடந்தது - Tamil Murasu
- வக்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கலானது; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரை - Daily Thanthi
- தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் - Hindu Tamil Thisai
- மூன்று "சி".. அண்ணாமலைக்கு எதிராக திரும்பிய விஷயமே இதுதான்.. கண்கள் சிவந்த டெல்லி.. என்ன நடந்தது? - Oneindia Tamil
பதிவுகளில் தேர்வானவை
20.7.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
தேடியதில் கிடைத்த முத்து
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
காற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
எந்த விந்தணுவால்
உடைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
எத்தனை விந்தணுவால்
சிதைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
இச்சைக்கு பிறந்தாயோ
எச்சையென ஆனாயோ
பிச்சையெல்லாம் மறந்து
இம்சையெல்லாம் மீள்வாயோ
பிற்காலம் நீ ஆள்வாயோ!
வறுமை கோடு தாண்டி வர
32 ரூபாய் கூடவா கிடைக்கவில்லை
உன் தாய்க்கு!
கர்ணனோடு சேர்ந்து
கருணையையும் உடன்கட்டை
ஏற்றிவிட்டமோ!
இவையெல்லாம் மறந்து
நானும் அவருடன் சேர்ந்து
கனவு காணவோ
வல்லரசு ஆகிவிடுமென்று!
பச்சைவிளக்கு ஒளிர்கிறது
எனக்கான பயணம்
தொடர்கிறேன்!
என் மகளுக்கு
ஹைஜெனிக் டையப்பர் வாங்கி வரசொல்லி
அவள் தாய் கொடுத்தனுப்பிய
500-ரூபாயையும் உனக்கு கொடுத்திவிட்டேன்!
எப்படியும் கணக்கு
சொல்லியாக வேண்டும்
அந்த 500-ரூபாய்க்கு.
தொலைத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால்
நீ ஒரு ஏமாளி
உருப்படவே மாட்டாய் என்று
விட்டுவிடுவாள்....
பிச்சைபோட்டுவிட்டேன் என்றால்
தலைக்கனம் தான் ஏறிவிட்டது
புத்தியும் கெட்டுவிட்டது
பைத்தியமே புடித்துவிட்டதென
முடிவுகட்டி மொத்தியும் விடுவாள்....
பொய் சொல்லவா
மெய் சொல்லவா
தொடர்கிறது பயணம்
மீண்டும் அடுத்த சிக்னல்.....
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
எந்த விந்தணுவால்
உடைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
எத்தனை விந்தணுவால்
சிதைக்கப் பட்டதோ
உனக்கான கருமுட்டை!
இச்சைக்கு பிறந்தாயோ
எச்சையென ஆனாயோ
பிச்சையெல்லாம் மறந்து
இம்சையெல்லாம் மீள்வாயோ
பிற்காலம் நீ ஆள்வாயோ!
வறுமை கோடு தாண்டி வர
32 ரூபாய் கூடவா கிடைக்கவில்லை
உன் தாய்க்கு!
கர்ணனோடு சேர்ந்து
கருணையையும் உடன்கட்டை
ஏற்றிவிட்டமோ!
இவையெல்லாம் மறந்து
நானும் அவருடன் சேர்ந்து
கனவு காணவோ
வல்லரசு ஆகிவிடுமென்று!
பச்சைவிளக்கு ஒளிர்கிறது
எனக்கான பயணம்
தொடர்கிறேன்!
என் மகளுக்கு
ஹைஜெனிக் டையப்பர் வாங்கி வரசொல்லி
அவள் தாய் கொடுத்தனுப்பிய
500-ரூபாயையும் உனக்கு கொடுத்திவிட்டேன்!
எப்படியும் கணக்கு
சொல்லியாக வேண்டும்
அந்த 500-ரூபாய்க்கு.
தொலைத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால்
நீ ஒரு ஏமாளி
உருப்படவே மாட்டாய் என்று
விட்டுவிடுவாள்....
பிச்சைபோட்டுவிட்டேன் என்றால்
தலைக்கனம் தான் ஏறிவிட்டது
புத்தியும் கெட்டுவிட்டது
பைத்தியமே புடித்துவிட்டதென
முடிவுகட்டி மொத்தியும் விடுவாள்....
பொய் சொல்லவா
மெய் சொல்லவா
தொடர்கிறது பயணம்
மீண்டும் அடுத்த சிக்னல்.....
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!