பதிவுகளில் தேர்வானவை
19.1.12
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
பெண் ஸஹாபி
பெண் ஸஹாபிகளும் அவர்களைப்பற்றிய முக்கிய குறிப்புகளும்
1.உம்மு உமாரா(ரலி)
இவரது பெயர் - நுஸைபா பின்த் கஅப்(ரலி)
இவரது கோத்திரம் - பனூநஜ்ஜார்
முதல் கணவர் - ஜைத் இப்னு ஆஸிம்
பிள்ளைகள்; - அப்துல்லாஹ்(ரலி)ரூபவ் ஹபீப்(ரலி)என 2 ஆண் மக்கள்
2வது கணவர் - அரபா இப்னு அம்ர்(ரலி)
பிள்ளைகள் - தமீம் என்று ஒரு ஆண் கௌலா என்று ஒரு பெண் பிள்ளை.
கலந்து கொண்ட போர்கள் - இரண்டாவது கணவாய் உடன்படிக்கைரூபவ் அபூபக்கர்(ரலி)அவர்களின் காலத்தில் ஏற்பட்ட ஒரு போர்.
இவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் கேள்வி கேட்க பதிலாக இறங்கிய இறைவசனம் 33:35
உஹது போரின் போது அனைவரும் புறமுதுகிட்டு ஓட நபியவர்களை பாதுகாக்க இருந்த 10ரூபவ்13 பேர்களில் முன்னனியாக நின்றவர்கள் இரண்டு பேர்
ஒருவர் - அபூ துஜானா(ரலி)
மற்றவர் - உம்மு உமாரா எதிரிகளின் அம்புகளுக்கு நெஞ்சை நிமிர்த்தியவர்
இந்தப்போரில் இவர் வாள் எடுத்தும் சண்டை போட்டுள்ளார்.
இப்னு ஹிஷாம் தமதுஸீராவில் எழுதியது அதில் உம்மு உமாரா கூறியதாக:
எதிரிகளின் குதிரைப் படையினர் தான் எங்களை அதிகமாகத் தாக்கினார்கள். எங்களைப் போன்று அவர்களும் வாகனமின்றி வந்திருந்தால் இன்ஷா அல்லாஹ் அவர்களை ஒரு கை பார்த்திருப்போம் ஒருவன் குதிரை மீது வந்து என்னைத் தாக்கினான். நான் கேடயத்தின் மூலம் அவனது தாக்குதலிலிருந்து என்னைத் தற்காத்தேன். அவன் தனது வாளால் எதையும் சாதிக்க முடியாமல் திரும்;பினான். அப்போது அவனது குதிரையின் குதிங்கால் வெட்டினேன். குதிரை கீழே விழுந்தது. உடனே நபி(ஸல்)அவர்கள் என்னுடைய மகனை அழைத்து அப்துல்லாஹ்வேரூபவ் உன்னுடைய தாயைப்பார்ரூபவ் உனது தாயைப் பார் என்று சப்தமிட்டார்கள். என்னுடைய மகன் வந்து எனக்கு உதவினார்.
நபியவர்களின் பாராட்டு :
(1) உம்மு உமாராவே உமக்குள்ள ஆற்றல் யாருக்குத்தான் வரும்
(2) உம்மு உமாராவே உன்னுடைய மகன் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கி விட்டீர்
(3) தோளில் படு காயமுற்ற உம்மு உமாராவுக்கு நபியவர்களே காயத்தில் மருந்து வைத்துக் கட்டிய வண்ணம் இன்று சில வீரர்களின் பெயரை வரிசையாக சொல்லி இன்று இவர்கள் அனைவரை விடவும் உம்மு உமாரா அதிக வீரத்தைக் காட்டினார்கள் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபுபக்கர்(ரலி)அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொடியவன் முஸைலமாவை (தன்னை நபி என்று கூறித்திரிந்தவனை) எதிர்த்து போர்க்களத்தில் குதித்து ஒரு கையை முழுவதுமாக இழந்தவர். படைத்தளபதியான காலித் இப்னு வலீத் இவருக்கு ஒலிவ எண்ணெயின் மூலம் சிகிச்சை அளித்தார்.
உமர்(ரலி)அவர்கள் பொன்னிழை கலந்து நெய்யப்பட்ட மிகமிக விலையுயர்ந்த இரு பட்டுப்புடவைகளை யாருக்கு அளிப்பது என்று பங்கிடுகையில் உமர்(ரலி)அவர்கள் கூறியது:
உம்மு உமாரா தான் இதற்கு தகுதியானவர் ஏனெனில் உஹதுப் போருக்குப்பிறகு நபி(ஸல்)அவர்கள் உம்மு உமாராவின் வீரம் குறித்து இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்: உஹதுப்போரில் வலது பக்கம் இடது பக்கம் எங்கு நோக்கினும் உம்மு உமாராவே போரிட்டுக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.

2. உம்மு ஐமன் (ரலி)
இவரது பெயர் - பரகத் மக்கள் இவரை உம்முல் லிபா என்று அழைப்பது பழக்கம்;
தந்தை பெயர் - தஃலபா இப்னு அம்ர் இவர் அபீஸீனியா நாட்டுக்காரர்
முதல் கணவர் - கஜ்ரஜ் கோத்திரத்தை சேர்ந்த உபைத் இப்னு ஜைத்
பிள்ளை - ஐமன் (ரலி)
2வது கணவர் - ஜைத் இப்னு ஹாரிஸா(ரலி)
பிள்ளை - உஸாமா (ரலி)
நபியவர்கள் பிறக்கும் முன்பு இவர் விவரம் அறியும் பருவம் உடையவராய் இருந்தார். இவரது தந்தையை நபியவர்களின் தந்தை தத்தெடுத்ததாலும் அவரின் மறைவுக்குப்பின் இவர் அன்னை ஆமினாவுக்கு பணியாளராய் இருந்தார். ஹலீமா ஸஃதிய்யா எனும் செவிலித்தாயிடம் 6 அல்லது 7 ஆண்டுகள் வரை வளர்ந்த நபியவர்கள் பின்னர் தன் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட கொஞ்ச நாட்களுக்குப்பின் அன்னை ஆமினா அவர்கள் குழந்தை முஹம்மதையும் உம்மு ஐமனையும் மதீனாவுக்கு அழைத்துச் சென்றார். இது நபியவர்களின் முதல் பிரவேசமாகும்.
ஒரு மாதம் தங்கியிருந்து விட்டு மக்கா திரும்பும் வழியில் அபுவா எனுமிடத்தில் அன்னை ஆமினா நோய் வாய்ப்பட்டு இறந்துபோக இந்த உம்மு ஐமன் அன்னை ஆமினாவின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு நபியவர்களை பத்திரமாக தைரியமாக மக்கா கொண்டு வந்தார்கள். மக்கா வந்ததும் அப்துல் முத்தலிப் தன் பேரக்குழந்தையைக் கண்காணித்துப் பேணி வரும்படி உம்மு ஐமனைப் பணித்தார்.
நபியவர்களின் சிறு வயது முதல் உடனிருந்தவர். நபித்துவத்தின் 6ஆம் ஆண்டுக்குப்பிறகு அபிசீனியாவுக்குச் சென்று அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். நபி(ஸல்)மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து விட்டார்கள் எனும் செய்தி கிடைத்தபோது உம்மு ஐமன்(ரலி)அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். இவ்வாறு அவர்களுக்கு இரு ஹிஜ்ரத்களின் சிறப்பும் கிட்டியது.முதல் கணவர் இறந்ததும் பால்குடி மறந்த மகனை தூக்கிக்கொண்டு சோகமே உருவாக நபி(ஸல்)அவர்களிடம் வந்தார்கள். நபியவர்கள் தம் தோழர்கள் கூட்டத்தில் கூறியது:
எவரேனும் சுவனத்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்.
இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா(ரலி)அவர்கள் மணந்தார்கள்.
நபித்துவத்தின் 5ம் ஆண்டில் ஹிஜ்ரத் செய்தவர்கள் (முதல் ஹிஜ்ரத்)
ஆண்கள் - 11
பெண்கள் - 4
நபித்துவத்தின் 6ம் ஆண்டில் ஹிஜ்ரத் செய்தவர்கள் (2வது ஹிஜ்ரத்)
ஆண்கள் - 83
பெண்கள் - 13
2வது பிரிவில் உம்மு ஐமன் கலந்து கொண்டார்கள்.
நபியவர்களின் மரணத்தின்போது அழுது துடித்த உம்மு ஐமனை ஆறுதல் படுத்தும் வகையில் அபூபக்கர்(ரலி)மற்றும் உமர்(ரலி)அவர்கள் பேச அதற்கு உம்மு ஐமன் அவர்கள் நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ)நின்று விட்டதே என்பதற்காகத்தான் என்றார்கள். இதைக்கேட்டதும் அவர்கள் இருவரும் அழலானார்கள். --ஆதாரம் (முஸ்லிம்)
உம்மு ஐமன் நபியவர்களை குழந்தையாய் இருந்தபோது கண்காணித்து வளர்க்கும் பாக்கியத்தை பெற்றவர்கள். நபியவர்களின் தாய் தந்தை பாட்டனார் போன்ற பெரியோர்கள் அனைவர்க்கும் அறிமுகமாயிருந்தார்கள். எனவே நபியவர்கள் இவர்களை அதிகம் கண்ணியம் செய்து வந்தார்கள். அவர்களின் வீட்டிற்கு நபியவர்கள் அடிக்கடி செல்வார்கள். என்னுடைய தாய்க்கு பிறகு உம்மு ஐமன் எனக்குத் தாயாக இருந்தார்கள் என்று கூறுவார்கள். அவர்களிடம் பேசும் போது தாயே என்று அழைத்துப் பேசுவது வழக்கம். உம்மு ஐமன்(ரலி)அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களின் ஆட்சிக்காலம் வரை உயிரோடு இருந்தார்கள் என்று தெரிகிறது. இதுவே நம்பகமான வரலாறு ஆகும். உம்மு ஐமன்(ரலி)மூலமாக சில நபிமொழிகளும் அறிவிக்கப்படுகின்றன. அவற்றின் அறிவிப்பாளர்களில் அனஸ் இப்னு மாலிக்(ரலி)ரூபவ் ஹனஷ் இப்னு அப்துல்லாஹ்(ரலி)மற்றும் அபூயஜீத் மதனி(ரஹ்)ஆகியோரின் பெயர்கள் உள்ளன.