குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

19.9.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுவனத்திற்கான பத்து நபித்தோழர்கள்
சுவர்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட 10
இறை மார்க்கம்
நபித்தோழர்கள்

அப்துர்ரஹ்மான் பின் அல் அக்னாஸ் கூறியதாவது:



(ஒரு நாள்) அப்துர்ரஹ்மான் பின் அல் அக்னாஸ் அவர்கள் மஸ்ஜிதில் இருந்தபோது , ஒரு மனிதர் அலி பின் அபூ தாலிப் ரதியல்லாஹு அன்ஹுஅவர்களை குறைகூறிப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஸயீத் பின் ஜைத் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மனிதரைப் பிடித்துக் கூறினார்.பத்து நபர்கள் சுவனம் செல்வார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறினார்கள் என்று நான் சாட்சியம் கூறுகின்றேன் என்று கீழ்கண்ட ஒன்பது ஸஹாபிகளின் பெயர்களை கூறிவிட்டு,நீங்கள் விரும்பினால் பத்தாவது நபரை சொல்கிறேன் என்றார்கள்.மக்கள் அந்த நபர் யார்? என்று வினவினர்.அவர் அமைதியாக இருந்தார்.மக்கள் திரும்பவும் அந்த நபர் யார்?என்று வினவினர். அவர் ஸயீத் பின் ஜைத் என்று தன்னை குறிப்பிட்டார்கள்.மேலும் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தோழமையினால் ஒருவருக்கு (அல்லாஹ்வின் பாதையில்) அவரது முகத்தில் புழுதிப்படுவது என்பது மற்றொருவர் தன்னுடைய ஆயுட்காலம் முழுவதும் நற்செயல்கள் செய்வதைவிட சிறந்ததாகும்.ஒருவேளை அவருக்கு நூஹ் நபியின் ஆயுட்காலம் வழங்கப்பட்டால் கூட…

(அபூ தாவூத் ஹதீஸின் கருத்தாக்கம் (பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.அல்லாஹ் எங்களை மன்னிப்பதற்கு போதுமானவன்

அபூ பக்ர் அஸ்ஸித்தீக் ரதியல்லாஹு அன்ஹ் Abu Bakr As-Siddiq

உமர் பின் அல் ஃஹத்தாப்ரதியல்லாஹு அன்ஹ் Umar bin Al-Khattab

உஃஸ்மான் பின் அஃப்ஃபான் ரதியல்லாஹு அன்ஹ் Uthman ibn Affan

அலி பின் அபூ தாலிப் ரதியல்லாஹு அன்ஹ் Ali ibn Abi Talib

தல்ஹா பின் உபைதுல்லாஹ்ரதியல்லாஹு அன்ஹ் Talha ibn Ubayd-Allah

ஜுபைர் பின் அல் அவ்வாம் ரதியல்லாஹு அன்ஹ் Zubayr ibn al-Awwam

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரதியல்லாஹு அன்ஹ் Abd al-Rahman ibn Awf

 சஅத் பின் அபீ வக்காஸ் ரதியல்லாஹு அன்ஹ் Sa’ad ibn Abi Waqqas

அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் ரதியல்லாஹு அன்ஹ் Abu Ubaida ibn al-Jarrah-

ஸயீத் பின் Zஜைத் ரதியல்லாஹு அன்ஹ் Said ibn Zayd

9:100. ஹிஜ்ரத்460 செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது.

அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார்

(இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூபக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ’தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே தேபருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர்அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும் இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர” என்று கூறினார்கள்.

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்‘எனும் போருக்கான 21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று ’மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் ’ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான் ’ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ’ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள

உமர் இப்னு கத்தாப்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.

உமரின் நாவிலும் இதயத்திலும் அல்லாஹ் உண்மையை போடுகிறான்.

உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகின்றான்(ஹதீஸ்-அஹ்மத்,அபூதாவூத்)

அபூஹ{ரைரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள் ‘நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உ@ச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்) ‘இந்த அரண்மனை யாருக்குரியது?’என்று கேட்டேன். அவர் ‘உமர் அவர்களுக்குரியது‘ என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால் எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு ‘தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன் இறைத்தூதர் அவர்களே!”என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சும்மாயிருங்கள் கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால் அவன் உங்கள் தெருவைவிட்டு வேறொரு தெருவில் தான் சொல்வான்” என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில் (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.

Uthman ibn Affan

”வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தித்தருகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான்(ரலி) அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்

அபூ பக்ர்உமர் உஸ்மான்(ரலி) ஆகியோர் தம்முடனிருக்க நபி(ஸல்) அவர்கள் உஹ{து(மலை) மீது ஏறினார்கள். அது (அவர்களுடன்) நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உஹ{தே! அசையாமல் இரு! ஏனெனில் உன் மீது ஓர் இறைத்தூதரும் ஒரு ‘சித்தீக்‘கும் இரண்டு உயிர்த்தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள். (இதைக் கூறியபோது) நபியவர்கள் தம் காலால் மலையை (ஓங்கி) அடித்தார்கள் என எண்ணுகிறேன்.

நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை) நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (ஜாதுல் மஆது)

Ali ibn Abi Talib

நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் ‘நீங்கள் என்னைச் சேர்ந்தவர்;நான் உங்களைச் சேர்ந்தவன்” என்று கூறினார்கள

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் ‘(நபி) ஹாரூன் அவர்களுக்கு (அவர்களின் சகோதரர் – நபி) மூஸா அவர்களிடம் எந்த அந்தஸ்து இருந்தோ அதே அந்தஸ்தில் நீங்கள் என்னிடம் இருப்பதை விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”நான் அறிவின் பட்டிணம் ஆவேன்.அதனுடைய வாசல் அலி ஆவார்(ஹதீஸ்-திர்மிதீ)

Talha ibn Ubayd-Allah

தல்ஹா(ரலி) அவர்களும் ஸஅத்(ரலி) அவர்களும் கூறினார்கள்

நபி(ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹ{துப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.

அபூஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்

(உஹ{துப் போரின் போது) நபி(ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா(ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக பார்த்தேன்.

Zubayr ibn al-Awwam

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் இப்னு ஸ{பைராவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரின் வாய்க்குள் நுழைத்தார்கள். அவரின் வயிற்றினுள் முதலாவதாக நுழைந்து நபி(ஸல்) அவர்களின் உமிழ் நீரேயாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸ{பைர் இப்னு அவ்வாம் ஆவார்.

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸ{பைர்(ரலி) கூறினார்

அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் (நபி – ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸ{பைர்(ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி åதர்களான) பன} குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு… அல்லது மூன்று முறை… முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது ‘என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள்‘என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் ‘பன} குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து ‘என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்‘ எனக் கூறினார்கள்” என்று கூறினார்கள்.

உர்வா இப்னு ஸ{பைர்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) ஸ{பைர்(ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின்போது‘நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். எனவே ஸ{பைர்(ரலி)இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸ{பைர்(ரலி) அவர்களின் தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸ{பைர்(ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன்.

(தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்ட தேயில்லையே! ஏன்?” என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி)அவர்களிடம் நான் கேட்டதற்கு, “இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் “என் மீது இட்டுக் கட்டிச் செல்பவ! ர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்” (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)” என்றார்கள்” எனஅப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

(பகுதி : 1,அத்தியாயம் : 3 , எண்: 107)

Abd al-Rahman ibn Awf

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரி(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களுக்கு இரண்டு துணைவியர் இருந்தனர். எனவே ஸஅத்(ரலி) தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!” என்று கூறினார்கள்.

பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு ‘என்ன இது அப்துர் ரஹ்மானே?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான்(ரலி) ‘நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்தேன்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?’ என்று கேட்க ‘ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து கொடு!” என்று கூறினார்கள்.

Sa’ad ibn Abi Waqqas

ஸஅத் இப்னு அபீ ‘ வக்காஸ்(ரலி) இஸ்லாத்தை ஏற்றது.

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாள்கள் (வரை) இருந்தேன்” என்று சொல்லக் கேட்டேன்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் அஸ் ஸ{ஹ்ரீ(ரலி) அவர்களின் சிறப்புகள். (அவர்களின் குலமான) பன} ஸ{ஹ்ரா குலத்தார் நபி(ஸல்) அவர்களின் தாய் வழி உறவினர்கள் ஆவர். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களே ஸஅத் இப்னு மாலிக்(ரலி) ஆவார்கள்.

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்

(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி(ஸல்) அவர்கள் உஹ{துப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்‘ எனச்) கூறினார்கள்” என்று ஸஅத்(ரலி) சொல்ல கேட்டேன்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

இறைவழியில் அம்பெயத் அரபுகளில் நானே முதலாமவன் ஆவேன். எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போர் புரிந்து வந்தோம். எனவே நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) ‘பன} அஸத்‘ குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படியானால்இது வரை) நான் செய்து வந்த வழிபாடு வீணாம் நான் இழப்புக்குள்ளாம் விட்டேன். (போலும் என்று வருந்தினேன்.) அதைக் குறித்து அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள்” என்று (உமர் – ரலி – அவர்களிடம்) கூறினார்கள்.

Abu Ubaida ibn al-Jarrah

அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் – ரலி அவர்களின் சிறப்புகள்.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

என அனஸ்(ரலி) மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஹ{தைஃபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம் ‘நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த ‘அமீன்‘ என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூஉபைதா(ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

Said ibn Zayd

ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்

”அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதைக் கண்டித்து அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நடந்து கொண்டதைக் கண்டு (மனம் தாளாமல்) உஹ{து மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே” என்று ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) கூஃபாவின் மஸ்ஜிதில் வைத்துக்கூற கேட்டேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹ{து மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது

என அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
, ,