இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

14/03/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அமெரிக்காவும், மந்திரவாதியும் ?
கடந்த சனிக்கிழமை 08.03.14 அன்று காணமல் போன 239 பயணிகள் அடங்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை 5நாட்களாகியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதன் மூலம் உலகில் விடப்பட்ட இரண்டு பெரும் சவால்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த சம்பவம் பல உன்மைகளை நமக்கு உணர்த்தியுள்ளது.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் உலகத்தையே கண்காணிப்பில் வைத்திருக்கின்றோம் என்று பயங்காட்டி வந்த அமெரிக்காவின் பூச்சாண்டி இந்த சம்பவத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த சவால் முறியடிக்கப்பட்டுவிட்டது.
அதுபோல உலகில் நடக்கும் அத்தனை விஷயங்களும் எங்களுக்குத் தெரியும்; நாளை என்ன நடக்கப்போகின்றது என்பதும் எங்களுக்குத் தெரியும்; எங்களுடைய ஞானக்கண்ணை வைத்து அனைத்து விஷயங்களையும் பார்த்து சொல்லி விடுவோம் என்று சொல்லிக்கொள்ளும் சாமியார்கள்;
வெற்றிலையில் மை போட்டுப்பார்த்து மறைவானதை சொல்வதாக புருடா விடும் மந்திரவாதிகள்;
கிளியையும், எலியையும் வைத்து ஜோசியம் பார்த்து மறைவானதை சொல்வதாகபொய் சொல்லும் ஜோசியக்காரர்கள்;
பரிசுத்த ஆவி உந்துதலின் காரணமாக அனைத்து செய்திகள் குறித்தும் முன்னறிவிப்புச் செய்யும் ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று சொல்லும் பாதிரிமார்கள்; கிறித்தவ போதகர்கள்;
இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி குறி சொல்லி காசு பார்க்கும் போலி முரீதுகள், ஷேகுகள், பீர்கள் என அனைவரது போலி முகமும் இந்த சம்பவத்தின் மூலம் கிழிந்து தொங்கிவிட்டது.
பெரும் சவாலாக இருந்த இவர்களது புருடாக்களும், சவால்களும் முடிவுக்கு வந்துவிட்டன.
இவர்களுக்கு உண்மையிலேயே மறைவானதை அறியும் ஆற்றல் இருந்திருக்குமேயானால் மாயமான மலேசிய விமானம் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்க வேண்டியது தானே!
மறைவான ஞானம்படைத்த இறைவனைத்தவிர வேறு எவருக்கும் இல்லை என்ற இஸ்லாத்தின் ஏக இறைக்கோட்பாடு இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, இஸ்லாம்தான் இறைவனுடைய மார்க்கம் என்பதும் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
, ,