குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.12.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

pen drive format


நிறைய நேரங்களில் வைரஸ் வந்த நம் பென் டிரைவை நம்மால் Format இயலாமல் போய் விடும். என்ன தான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்காது. இதனால் புதிய பென் டிரைவ் வாங்கக் கூடிய நிலை கூட வரலாம். அது போன்ற சமயத்தில் Command Prompt மூலம் Format செய்ய முயற்சிக்கலாம். எப்படி என்று பதிவில் காணலாம். 

1. முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் சொருகவும்


2. Start >> Run சென்று cmd என்று டைப் செய்து Command Prompt வரவும். 

3. இதில் formatDrive Letter: கொடுத்து விட்டு, இரண்டு முறை Enter  கொடுக்கவும். 

உதாரணம்: format g:

[மேலே படத்தில் Benny என்பது என் பென் டிரைவ் பெயர், பக்கத்தில் உள்ள G தான் Drive Letter. உங்களுக்கும் இது போலவே. ]

4.  இப்போது கீழே உள்ளது போல, ஒரு விண்டோ வரும், 



5. இதில் கேள்விக் குறிக்கு அடுத்து உங்கள் பென் டிரைவ்க்கு ஒரு பெயர் தர சொல்லும். உங்களுக்கு விருப்பமான பெயர் தந்து Enter கொடுங்கள். 

6. இப்போது பின் வரும் விண்டோ வரும். 



7.அவ்வளவு தான் இப்போது உங்கள் பென் டிரைவை செக் செய்து பாருங்கள், அது Format ஆகி இருக்கும். 

thanks karpom.com
, ,