இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

17/08/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மனமே தொட்டாசினுங்கிதானே
ஒரு நினைவூட்டல்: இது லைட் ரீடிங் அல்ல

மனமே தொட்டாசினுங்கிதானே.....

'மனசு"ன்னு ஒன்னு இல்லாட்டா எப்படி இந்த உலகம்இருக்கும் நினைக்க
ரொம்ப ரோபோட்டிக்கா போயிருக்கும்ல?....


எந்த கண்டுபிடிப்பும் இருக்காது, குழந்தைகள்தொழிற்சாலையில் செய்யப்படும் பொருள் மாதிரிமதிக்கப்படும். பிச்சைக்காரர்கள் தட்டில் காசு இருக்காது. கவிஞர்கள், இலக்கியம்சிலாகிப்பவர்கள் வழக்கொழிந்து போவார்கள். நானும் இதை எழுத மாட்டேன். நீங்களும் படிக்க போவதில்லை.

எல்லா கண்டுபிடிப்பும், வாழ்வியல் ரசனையும், எதையும் அசைபோட்டுசந்தோசப்படும்மனசைத்தான் நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதின் மீள்பார்வை இந்த ஆர்டிக்கிள் எழுதஏற்படுத்திய சின்ன வெளிச்சம்.

நாளைக்கு உள்ள பிரச்சினைகளை அல்லது வேலையை டென்சனோடு அணுகும் மனப்பான்மைஉள்ளவரா நீங்கள்... கவனிக்க உங்கள் மனது மட்டுமல்ல உடம்பும் ஒரு கான்ஸ்டான்ட்டென்சனில் இருந்து சுரக்க வேண்டிய சில அமிலங்களை அளவுக்கு அதிகமாக சுரந்து உங்கள்பணத்தில் கணிசமான அளவு கரந்து டாக்டரிடம் கொடுத்துவிடும். [அமிலம்னா ஏதோவெஸ்டர்ன் யூனியன் மாதிரி எழுதியிருக்கேனு நினைக்க தோன்றினால்.. பொறுமைகாக்க].

மனிதனின் மனசு எப்படி மாறுகிறது...எப்படி அது ஒரு “சின்ன மூட்” மாற்றம் ஏற்படுத்துகிறதுஅதனால ஏற்படும் கெமிக்கல் ரியாக்சன் என்ன உடம்பில் என எழுத ஆரம்பித்தால் மக்கள்தொலைக் காட்சியின் மருத்துவ நேரம் மாதிரி ஆகிவிடும்.

மனதை சரியாக பயன்படுத்துவதில் தவறு ஏற்படும் தருணம்தான் உலகில் முதன் முதலில்துரோகம், பொய், ஏமாற்று வேலை எல்லாம் உருவானது. இதில் எல்லாமதமும் சொல்லும்விசயம் கர்மவிதி..நாம் செய்த நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்கும் சரியான விதமாகதண்டனையோ அல்லது நன்மையோ கிடைக்கும்.. இது பொது விதி.

நான் சந்த்தித்த சிலரின் பிரச்சினைகள் வித்யாசமானவை, அதிலும் அவர்கள் அதைஞாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வித்யாசமானவை.

ஒருவர் தனது மனைவியுடன் சண்டை பல வருடம் பேசவில்லை, சொல்லும் காரணம் எல்லாம் "என்னை மதிக்கவில்லை... நான் டீ கேட்டபோது உடனே தரவில்லை, என் பெற்றோரிடம் சரியானஉறவு இல்லை, டீசன்சி பத்தாது, எனது கஸ்டத்தில் அவளின் வீட்டிலிருந்து பண உதவிசெய்யவில்ல.... இப்படி அடிக்கினார்.

இதற்கும் மனசுதான் காரணம் நம் பெற்றோர்கள் நமக்கு நல்லவர்கள் தான் அதை அப்படியேமற்றவர்களும்உங்கள் மனைவியும் ]ஆமோதிக்க வேண்டும் என்பது ஒரு பிடிவாதம் தான்.அப்படி என்றால் உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே.. உலகம் நல்லவர்கள் மட்டும் வாழும்இடமா? அது முடியுமா? [

மனசு “பிடிவாதம்” எனும் ஆயுதம் ஏந்தியதால் அவர் இழந்தது அவரது இளமைக் காலம்முழுவதையும்... இனிமேல் அந்த காலம் திரும்பிவரப் போவதில்லை,

“உங்களின் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையில் உங்களோடு அதிகம் வாழ சாத்தியம் உள்ள உங்கள்மனைவியுடன் என்ன பேசப்போகிறீர்கள்?.. அமைதியாக உட்கார்ந்து பேச உங்கள் வாழ்க்கையில்சம்பவங்களே இல்லையே?? பிள்ளைங்க அவங்க வேலை, குடும்பம்னு ஆயிடும்ல..ஏறக்குறைய உங்கள் வாழ்க்கை ஆடியோ சரியாக ரெக்கார்ட் ஆகாத , கீறல் விழுந்த பிளாக் &ஒயிட்படம் மாதிரிதான் இருக்கும்” என நான் சொன்னவுடன்... தப்பு செஞ்சுட்டேன்னு கண்கலங்கினார்

மனசு முழுக்க பிடிவாதமும், எனக்கு, நான் என்று ஆக வாழும் மனிதர்கள் தொடர்ந்துஏழ்மையில் இருந்து கொண்டு பணக்காரன் ஆக ஆசைப்படுவது லைசன்ஸ் இல்லாத சாஃப்ட்வேர் வாங்கி அப்ட்டேட் செய்ய ஆசைப்படுவது மாதிரி.

சிலரின் மனதில் மதம் குடிகொண்டு மார்க்கம் வெகேட் செய்து போயிருக்கும். இவர்களிடம்என்ன நல்லது சொன்னாலும் கொரலிவித்தைக்காரன் திருப்பி திருப்பி ஒரே விசயத்தைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எது சொன்னாலும் தனது விவாதத்தில் ஜெயிக்கபார்த்து , கல்யாணப் பத்திரிக்கையிலுள்ள "சுற்றமும் நட்பும்" எல்லோரிடமும் சண்டைபோட்டிருப்பார்கள். இவர்களும் மற்றவன் என்ன சொல்கிறான் என்பதை பகுத்துஅறியும் மனதுஇருந்தால் பிரச்சினை இல்லை. இவர்களில் நாக்கில் 'அமெரிக்கன் கெட்டவன்' என்ற போர்டுநிறந்தரமாக தொங்கும்.

இதில் சில பெண்களும் விதி விலக்கல்ல சில சமயங்களில் பொறுமை காக்கதவறுவதும்..மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஆன்டென்னா இவர்களுக்கு சரியாக சிக்னல் அனுப்பிக் கொண்டே இருப்பதால் வாழ்க்கை எனும் மெயின்பிக்சரை தவற விடுவதும் உண்டு.கணவனுக்கு பிடிக்காததை செய்வதன் மூலம் தனது சுதந்திரம் காக்கப்படுவதாக ஒரு‘மனமுடக்க’த்தில் இருப்பவர்கள். அப்படியே இவர்களுக்கு ‘சிலபஸ்’ சரியாக விளங்கவில்லைஎன்றால் இருக்கவே இருக்கிறது டெலிவஷன் சீரியல் எனும் பயிற்சி பட்டறை.

ஜிம்னாசியம் போன்ற இடங்களில் உடற்பயிற்சி கொடுப்பது மாதிரி மனப்பயிற்சி ஏதும் மலிவாககிடைப்பதில்லை. உடல் பயிற்சி செய்யவும் ஒரு ஸ்ட்ராங்கான மனப்பயிற்சி தேவை, அதனால்தான் த்ரெட் மில் வாங்கி சில வீடுகளில் அது பயன்படுத்தபடாமல் டவல், ஜட்டி எல்லாம் அதன்கைப்பிடியில் காயப்போட்டு வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் 'அதுலெ போட்டாத்தான் நல்லாகாயுது' என்றார்.

மனப்பயிற்சியின் சில டெக்னிக்ஸ்:

மனம் அலைபாய்வதை அளக்கும் கருவியாக கண்ணை சொல்கிறார்கள். ஒரு நிலையில்இல்லாத மனம் உள்ளவன் கண் தொடர்ந்து உங்களைப் பார்த்து பேசாது. சுழலும்... அவனை ஒருமுகப்படுத்த ஒரு அரை மணி நேரம் சுவற்றுக்கு முன்னால் 1/2 மீட்டர் இடைவெளியில் உட்காரவைத்து மன ஓட்டத்தை கவனிக்க சொல்வார்கள். மொத்தத்தில் இது நம்மை நாம்கண்ணாடியில் பார்ப்பதற்கு சமம்.

இந்த பயிற்சியில் "சும்மா' உட்கார்ந்திருந்தாலும் உடம்பு வலிக்கும்.

ஜிப்ரைஸ் டெக்னிக் என்று ஒரு ரஷ்யன் டெக்னிக் உண்டு ...ஒரு பெரிய ரூமில் உங்களைதனியாக விட்டு உங்களை மனம் போன போக்கில் கத்த / பேச சொல்வார்கள். ஒரு 15நிமிடத்துக்கு பிறகு உங்கள் மனதில் மிகப் பெரிய வெற்றிடம் தோன்றுவதை உணரலாம்.

வாழ்க்கையில் அதிக ஒட்டுதல் [State Of Attachments] நிறைந்த மனம் தொடர்ந்து சோதனைகளைசந்திக்கும், பிரச்சினைகளை தன்னுடன் ஒட்டாமல் பார்க்கும் பக்குவம் [ State of Detachment]மனிதனை மகானாக வளர்ச்சி அடைய செய்கிறது, இதை புரிந்து கொள்ளும் சூழல்புத்தகத்திலிருந்தோ , அல்லது வலைப்பூவிலோ கிடைக்காது.

மனத்தின் மீதான விசயங்களில் கவனம் செலுத்தும்போது Metaphysics / Quantum physics போன்றவிசயங்களில் ஆர்வம் தோன்றும் இது அனைத்தும் முஸ்லீமாக இருப்பவர்களுக்குமார்க்கத்தின் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். இந்தசமாச்சாரங்கள் இன்னும் ஆழமாகஇஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல் “இவன் எந்த குரூப் ஆலு”எனபார்ப்பதில் ஆர்வம் இருப்பதால் மெயின் சப்ஜெக்டை கோட்டைவிட்டு விடுபவர்கள் அதிகம்.

மற்றும்…

நீங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை தவற விட்ட அத்தனை சம்பவங்களிலும் உங்கள்மனதின் வலிமை குறைந்த தருணம்தான்.

- ZAKIR HUSSAIN
, ,