இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

07/09/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறைவனுக்கு நன்றி

இறைவனுக்கு நன்றி... ! 16


ன் இறைவனுக்கு நன்றி செலுத்துவதை அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது... பெரும்பாலும் நம் தொழுகைகளில் அதிகம் கேட்கிறோம் அதைக் கொடு / இதைக் கொடு என்று
[இது தவறு என்று நான் சொல்லவில்லை... அந்த சர்வ வல்லமை படைத்தவனிடம் கேட்காமல் யாரிடம்தான் கேட்பது?] ஆனால் இதுவரை நம்மை ஆளும் அந்த இறைவனுக்கு நன்றி எந்த அளவு செலுத்துகிறோம் என்பதை அவரவர்களின் அனுமானத்தில் விட்டு விடுகிறேன்.

முதலில் நம் உடம்புக்குள் நடக்கும் லேபரட்டரியை கவனித்தால் தெரியும்... இரத்தத்தில் உள்ள சோடியம் குறைந்தாலே பினாத்த ஆரம்பித்து விடுவோம். முன்பு வயதானவர்கள் வீட்டில் புலம்பும்போது 'வயசாயிட்டா  அப்படித்தான்' என ஒரே வார்த்தையில் கருத்து சொல்லிவிட்டு அடுத்த வேலையய் பார்க்க போய் விடும் நாம் டயாக்னைஸ் தெரிந்தால் நமக்கும் இப்படி சொல்ல வருங்காலத்தில் ஆட்கள் இருப்பார்கள் என்ற பயம் வந்து விடும். சுகர் அளவு அதிகம் உடம்பில் இருந்தால் நாளடைவில் பேன்க்ரியாஸிஸ் நொண்ட ஆரம்பித்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் இவர் அறிவாளி நல்லா சிந்திப்பாக...! என்று சொல்லப்படும் ஆட்களுக்கு ரொம்ப உதவி செய்தது சுகர்... ஆம் மூளைக்கு தேவை சுகர் மட்டும். சுகர் அளவு மூளைக்கு போவது குறைந்தால் சினிமாவில் கதாநாயகி அடிபட்ட பிறகு ஹாஸ்பிட்டல் கட்டிலிலிருந்து எழுந்து "நான் இப்ப எங்கே இருக்கேன்?" என கேட்பது போல் அடிக்கடி கேட்பீர்கள்.

அதை விட வித்தியாசமான முறையிலும் பிரைன் ப்ளுட் எப்படி எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இதுவரை யாரும் எட்டாத அறிவில் இறைவன் வைத்திருக்கிறான் என்பதை பார்த்தாலே ஒருவிதமான பயம் வந்து விடும். அந்த நீர் இடம் மாறினான் நீர் இடம் மாறி விடுவீர் என்பது மருத்துவ விதி. [வர..வர.. நானும் கிரவுன் / வாவன்னா சார் மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டேன்]

இறைவன் படைக்கும் போது ஒரு நேர்த்தியாக அழகாக ஒரு சிமட்ரிக்களாக படைத்த இறைவன் மனிதனிடம் எதிர்பார்ப்பது மனிதத்தை. சமயங்களில் மனிதன் கோனபுத்தி கொண்டு குழப்பம் விளைவிப்பதால், வெற்றியடைய தாமதம் ஏற்படுகிறது. இறைவன் எதிர்பார்ப்பதை விட்டு மற்றவனைக் குறை சொல்வது, பசாது பேசுவது போன்ற தேவையற்ற காரணங்களுக்கு இதை பயன் படுத்துகிறோம்.

நாம் சுவாசிக்கும் காற்றின் 21% ஆக்ஸிஜன், ஆக்சிமீட்டரில் 100 காண்பிக்க வேண்டும். 90 ஐ விட குறைந்தால் நிச்சயம் ஆக்ஸிஜன் மாஸ்க்கில் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்..... எப்போதாவது உலகத்தில் இது திடீரென குறைந்தால் என்னவாகும்... எப்போதாவது  இறைவன் அவன் ஆளுமையில் உள்ள இந்த உலகத்துக்கு ஒரு 10% குறைத்து ஆக்ஸிஜன் கொடுத்திருக்கிறானா?... அப்படி குறைத்து கொடுத்தால் உலகத்தின் அழிவுக்கு பிரளயம் தேவையிருக்குமா?.... எந்த எஞ்சினீயரால் இந்த அளவை தொடர்ந்து மேற்பார்வை பார்க்க முடியும்?.

வாழ்க்கையில் நிமிர்ந்து நடக்க எல்லோருக்கும் பிடிக்கும் [இங்கு நிமிர்ந்து என்று நான் சொல்வது உண்மையில் நிமிர்ந்து - ஸ்பைன் எரெக்ட் பொஷிசன்.] ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் தான் இவ்வளவு படித்தவன் / என்னிடம் இத்தனை 'மா தோப்பு' இருக்கிறது / நான் இந்தக் குடும்பம் / இந்தத் தெரு / என் பேங்க் பேலன்ஸ் மற்றவனை விட அதிகம் என்று நிமிர்ந்து நடப்பவர்களும் உண்டு.. அந்த கிறுக்கன் களைப்பற்றி யோசித்தே பார்க்க வேண்டாம்.
நிமிர்ந்து நடக்க வேண்டியதற்கான காரணம் நம் லம்பாஸ்ட் ஸ்ட்ரக்சர் 33 எழும்புகளால் ஆனது... இவை எல்லாம் சின்ன சின்ன எலும்புகளால் நாம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறோம், இந்த 33 எலும்பும் ஒவ்வொன்றும்  50 கிராமில் இருக்கலாம் இறைவன் நினைத்தால் அதில் ஒரு 50 கிராமை நகர்த்தினால் மொத்த 75 அல்லது 80 கிலோ  மனிதன் சரிந்து விழுந்து விடுவான் [சேர்ந்தே தெரு / படிப்பு / தோப்பு எல்லாம் சரிந்துவிடும் என்பது வேறு விசயம்]

நமது நாக்கில் எச்சில் சுரப்பதை  எப்போதும் ஒரு அனிச்சை செயலாக [நமக்கே தெரியாமல் / நம்மிடம் பர்மிஷன் வாங்கி செய்யாமல்]  இறைவன் எல்லோருக்கும் படைத்திருக்கிறான். இது சரியாக சுரக்கவில்லை என்றால் உணவுக்குழாயில் உணவு பயனிக்கும்போது பழைய வீட்டை இடித்துக்கொட்டுவதுபோல் சவுண்ட் சர்வீஸ் தரும். ஏதோ "தூ" னு துப்பும் சமாச்சாரம் அல்ல அது. உணவு வயிற்றுக்குள் விழும் நேரம் 4 - 7 செச்கன்ட் தான் , ஒருக்கால் எச்சில் உருவாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். வயிற்றில் செரிமானத்துக்கு தேவையான என்ஜைம் சுரக்காமல் உணவு அப்படியே நின்று விடும்... பிறகு வயிற்றிலிருந்து உணவை வெளியே தள்ள எந்த லாட்ஜ் / மேன்ஷன் மருத்துவராலும்(!!) முடியாது.

அந்த என்ஜைம் தான் உணவின் பாலிமெரிக் மேக்ரோ  மாலிக்யூளர் ஆக [குழம்ப வேண்டாம்... "சின்ன சின்ன ப்லாக்" ஆக] நமது குடலின் சுவர்களுக்குள் எடுத்து சென்று உடலில் சேர வைக்கிறது.இப்படி சேர்வதால் தான் நாம் திடமுடன் நடக்க முடிகிறது.

இப்போது சொல்லுங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல ஐவேளை தொழுகை மட்டும் போதுமா?.

இப்படியெல்லாம் எழுதுவதால் இது ஏதோ முஸ்லீம் மத சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என மற்ற மத சகோதர, சகோதரிகள் நினைத்து விட வேண்டாம். நம் எல்லோரையும் காப்பாற்றும் இறைவன் ஒருவன் தான். முஸ்லீம்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், மற்ற சமூகத்தினர் இஸ்லாத்தை புரியாமல் பேசினால் உடன் கோபித்துக் கொள்ளாதீர்கள், இன்று நம்மிடம் இண்டர்நெட், நெட்புக், ஐபேட், புத்தகங்கள் அனைத்தும் இருந்தும் எப்படி நாம் இஸ்லாத்தை மற்ற சமுதாயத்துக்கு தெரியப்படுத்த தவறியிருக்கிறோம் என்பதை ஒரு முறை நினைத்துப்பாருங்கள்.

- ZAKIR HUSSAIN
, ,