இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

03/10/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மோடியை திரை கிழிக்கும்மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில் குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி ! டாடா – அம்பானிகளின் எடுபிடி ! இந்துமதவெறி பாசிஸ்ட் ! இந்தியாவின் ராஜபட்சே ! மோடியின் முகமூடியை கிழிக்கும் பொதுக்கூட்டம் என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.


இந்துத்துவத்தின் கொலைகாரத் தளபதி என்ற முறையில் மோடியை பலருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய பாசிஸ்ட்டை தரகு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஏன் முன்னிறுத்துகிறார்கள்

அன்று காங்கிரசையும் மன்மோகனையும் தூக்கிப்பிடித்தவர்கள் இன்று மோடியை ஏகமனதாக ஆதரிக்க என்ன காரணம், மோடியின் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கு சொந்தமானது, மற்றொரு புறம் அது உழைக்கும் மக்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும் விரிவான சான்றுகள், ஆதாரங்கள், வாதங்களுடன் தோழர் மருதையன் முன்வைக்கிறார். மதவெறியும், மறுகாலனியாக்கமும் ஒன்றிணைந்து மக்கள் தாக்கவருவதற்கான முன்னோட்டம்தான் மோடி குறித்த மாயைகளை கார்ப்பரேட் ஊடகங்கள் பொய்களோடும், பித்தலாட்டங்களோடும் பிரச்சாரம் செய்து வருவது என்பதையும் அவர் விளக்குகிறார். திராவிட மற்றும் தமிழினவாதக் கட்சிகள் மோடியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கும் அயோக்கியத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகிறார். மோடி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் எதிரி என்பையும் அவரையும் சங்க வானரங்களையும் வீழ்த்துவதற்கு இசுலாமிய மக்கள் சிறுபான்மை அமைப்புகளில் அணிதிரள்வது தீர்வல்ல, மதச்சார்பற்ற புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டியது அவசியம் என்பதையும் ஏற்கச் செய்கிறார். மோடி குறித்த மாயைகளையும், ஜோடனைகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்துகிறது இந்த உரை. இதை நண்பர்கள அனைவரும் பொறுமையுடன் கேட்குமாறும் விரிவாக கொண்டு செல்லுமாறும் கோருகிறோம்.


Thanks vinavu.com


, ,