குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.12.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பாபர் மசூதி இடிப்பு..மீண்டும் ஒரு பார்வை
almighty - arrahim
 ஆ எஸ் எஸ் தீவிரவாதிகள்
‘‘இந்திய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிரான சக்தியாக மாற்ற பாகிஸ்தான்
உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ. எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் ‘நாங்கள் இந்தியர்’ என்று ஒருங்கிணைந்து நின்றார்கள் இஸ்லாமியர்கள்.பாபர் மசூதிதை இடித்ததன் மூலம் ஐ.எஸ்.ஐ. செய்ய முடியாததை பா.ஜ.க.வும்,
ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து முடித்தன’’ இந்திய உளவு நிறுவனம் ‘ரா’வின் முன்னால் உளவு அதிகாரி ராமனின் வார்த்தைகள் இவை.

‘அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே நாங்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டப் போகிறோம்’ என்ற ‘பழிக்குப் பழி’ பாலிடிக்ஸ்தான் இதன் அடிப்படை. ‘1996&ம் ஆண்டு டிசம்பர் மாதம் பகல் 12.15 மணிக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும்’ என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டுதான் அயோத்தியை நோக்கி கிளம்பினார்கள் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தொண்டர்கள். சுமார் 2 லட்சம் பேர். பெருங்கூட்டமாக குவிந்துவர அயோத்தி குலுங்கியது. வெறியூட்டப்பட்ட கூட்டு நடவடிக்கையின் விளைவு 475 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

அத்வானியும், முரளி மனோகர்ஜோஷியும், உமாபாரதியும் சாட்சியாக இருக்க மசூதி இடிக்கப்பட்டது. அந்த நாள் நவீன இந்தியாவின் துக்க தினம். மும்பை, டெல்லி என பற்றிப் படர்ந்த மதக் கலவரத்தில் நாடெங்கும் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 2 ஆயிரம் பேருக்கும் அதிகம். பாலியல் வல்லுறவு, உறுப்புகளை வெட்டியது, சொத்துக்கள் சூறையாடப்பட்டது... இதற்கெல்லாம் கணக்கில்லை. இந்திய முஸ்லிம்களின் தினவாழ்வை பதற்றத்துக்குள் தள்ளி, அவர்களை நடுங்க வைத்தனர் இந்து தீவிரவாதிகள். ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவே செய்தது. பாபர் மசூதிக்கு முன்பு தேசிய அளவில் அவ்வளவு பெரிய செல்வாக்கு இல்லாமல் இருந்த பா.ஜ.க. அதன்பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது. இப்போதும் அக்கட்சியின் துருப்புச்சீட்டு அரசியல் ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’ என்பதுதான்.

உண்மையில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட்டுவிட்டது என்பதே உண்மை. 92 டிசம்பர் 6&ல் ராமர்கோயில் இடிக்கப்பட்ட சில நாட்களில் இந்துத்துவ அமைப்பின் தொண்டர்கள் அங்கு போயினர். மசூதியின் இடிபாடுகள் ஒரு குன்றுபோல குவிந்துகிடக்க, அதன் மீது ஒரு கூடாரம் அமைத்து ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர். இப்போது வரை அது ஒரு மினி ராமர்கோயிலாகவே தொடர்கிறது. போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆனால் அயோத்தியின் பதற்றப் பகுதியை பாதுகாக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது மத்திய அரசு. ஏனெனில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் எப்போதும் அங்கு பாதுகாப்புக்காக நிற்கின்றனர். டிசம்பர் 6&ம் தேதி இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.

மசூதி இடிக்கப்படும் முன்பு அயோத்தியில் 60:40 என்ற விகிதத்தில் வாழ்ந்த முஸ்லிம், இந்து மக்களின் விகிதம் இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. குறிப்பாக வியாபாரம் செய்த இஸ்லாம் மக்கள் மெள்ள, மெள்ள அயோத்தியில் இருந்து அகன்றுவிட்டனர். இதன் உப விளைவாக அயோத்தியில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அங்கு ஒரு நல்ல மருத்துவ, பொறியியல் கல்லூரிகளோ, தொழிற்சாலைகளோ கிடையாது. நிறுவனங்களும் அங்கு ஆரம்பிக்க முன் வருவதில்லை. ‘எங்கிருந்தோ வந்து எங்கள் ஊரின் அமைதியையும், வளர்ச்சியையும் கெடுத்துவிட்டார்கள்’ என்பதே அயோத்தி மக்கள் கற்றுகொண்டிருக்கும் உண்மை.

மதவாதத்துக்கும், வாக்குப் பெட்டிக்குமான உறவை இறுக்கமாக்கிய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து முடிந்த நான்கே நாட்களில் அதைப்பற்றி விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நிபந்தணை. ஆனால் எடுத்துக்கொண்ட ஆண்டோ 17. அத்வானியின் ரத யாத்திரை, மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றிச் சென்ற வாஜ்பாய், இடிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி பால்தாக்கரே, கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் (‘ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?’ &ஜெயலலிதா) இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இவ்வளவு தாமதம். ஆனாலும் கமிஷனின் அறிக்கையால் குற்றவாளிகளுக்கு எந்தப் பாதகமும் வந்துவிடவில்லை.

‘‘காலத்தை கி.மு., கி.பி. என பிரிக்கிறது உலகம். முஸ்லிம் மக்களைப் பொருத்தவரை ‘இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன், பின்’ என பிரிக்கப்பட்டிருக்கிறது’’ என்ற செய்தியை அழுத்திச் சொல்கிறது அன்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘மை நேம் இஸ் கான்’ திரைப்படம். இது மற்ற நாட்டு முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை ‘பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின்’ என்றே பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவ அமைப்புகள் தொடங்கி வைத்த பழிவாங்கும் அரசியலின் பரிசு... இரு தரப்பில் இருந்தும் வெடிக்கும் குண்டுகள்.



இடுகையிட்டது பாரதி தம்பி
, ,