இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/12/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நிர்வாண பாரதம்
almighty - arrahim
நினைக்கும் போதெல்லாம்
பதைக்கிறது நெஞ்சம்
நிலைத்த மஸ்ஜிதை
குலைத்த நாளெண்ணி

இந்திய இறையாண்மை
இயலாமல் வீழ்ந்த நாள்
மதச் சார்பற்ற அரசின்
மானம் போன நாள்

இந்திய உள்ளம் துடிதுடிக்க
இறை யில்லம் இடிக்கப்பட
இரட்டை வேட அரசாங்கத்தை
இனங்கண்டு கொண்ட நாள்

கடப்பாறை ஏந்தி கரசேவகன்கள்
தடுப்பாரே இன்றி தகர்த்தனன்
காக்கிச்சட்டை காவல்துறையோ
காவிச்சட்டையின் ஏவல்துறையானது

மகாத்மாவை சுட்டதற்குப் பிறகு
மஸ்ஜிதை உடைத்துத்தான்
மறுபடியும் தலைகுணிந்தது பாரதம்
உலகே சிரித்தது; உமிழ்ந்தது

மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்

நாட்டுக்காக தாம் வாழும்
வீட்டையே தியாகம் செய்யும்
வரலாறு சொல்லும் இஸ்லாமியர்
இறையில்லம் இழந்தும் பொறுத்தனர்

எப்படியெல்லாம் இழுத்துப் பிடித்தும்
எல்லா ஓட்டை வழியாகவும்
நழுவிச் சென்றது நாட்டின்
நீதியும் நியாயமும்

இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை உண்மையென்றும்
திரித்துச் சொல்லும் இந்திய வரலாறு
டிஸம்பர் 6ஐ - இந்துக்களின்
ஜனவரி 26 என புணிதப்படுத்தும்

நடப்பது நன்றாகவே நடக்கிறது
என்னும் கொள்கைவாதிகளுக்கு
நரக நெருப்பைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்

தீர்ப்புநாள் வரும்வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
, ,