பதிவுகளில் தேர்வானவை
6.11.15
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவு
பொதுவாக, சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய், நுரையீரல், தொண்டைக்குழி, மூச்சுக்குழல், உணவுப்பாதை, சிறுநீர்ப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படுகிறது.
அளவுக்கதிகமாக மது குடிப்பவர்களுக்கு
கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது போன்றவை குடல் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பது இரைப்பை புற்றுநோய்க்கு இலக்காக்குகிறது. தவிர, வாய், தொண்டை, நுரையீரல், இரைப்பை புற்றுநோய் ஆண்களையும், கர்ப்பப்பைப்புற்று (கிராமங்களில் அதிகம்), மார்பகப்புற்று (நகர்புறங்களில் அதிகம்), வாய், தொண்டை, இரைப்பை புற்றுநோய் பெண்களையும் அதிக இலக்காக்குகின்றன.
தக்காளி
உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பப்பாளி
தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.
கேரட்
தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பூண்டு
ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.
காளான்
காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.
நட்ஸ்
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.
அவகேடோ
அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.