பதிவுகளில் தேர்வானவை
8.4.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
உயரும் சிறகுகள்
*இப்போதெல்லாம் அமைதியாய்ப்போன சாலைகளில் குயில் கூவும்
சத்தம் வெகு தூரத்துக்கு கேட்கிறது.
சிட்டுக்குருவிகள் கார்களின் சத்தம் கேட்காதலால் அரிசியை அமைதியாகவே எடுக்கிறது.
எப்போதோ பேச நினைத்த தூரத்து தேசத்துக்கும் டெலிபோனில் பேச முடிகிறது.
மழையின் தொடக்கத்து தூரலில் இருந்து கடைசி துளி வரை ரசிக்க முடிகிறது.
தொழிற்சாலைகளின் சுவாசம் காற்று மண்டலத்தில் சேர்த்த அழுக்கை சுத்தம் செய்ய அவகாசம் கிடைத்து இருக்கிறது.
மனிதனின் அட்டூழியம் பிடிக்காமல் மறைந்து போன மேகங்கள் இப்போதுதான் வெள்ளைப்பஞ்சுப்பந்துகள் போல் வானத்தில் ஊர்வளம் போகிறது.
மக்கள் கொஞ்சம் அதிகம் ஆன்மீகம் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.
உலகத்தில் இப்போது "படித்தவர்கள் அதிகம்' என்ற வார்த்தை இன்னும் மதத்தை சண்டை போட பயன்படுத்தும் ஆயுதாமாக்கும்போது காணாமல் போய்விட்டது
கம்ப்யூட்டரும், ஸ்மார்ட் போனும் இன்னும் மனிதனை அடிமையாக்கித்தான் வைத்து இருக்கிறது.
குறைவான உணவிலும் வாழ்வது எளிது என்பது இப்போது நிறைய பேருக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.
சத்தமில்லாத மனதில் நிறைய உண்மைகள் புரிய ஆரம்பிக்கிறது.
ஒரே பாடத்தில் இறைவன் ஒட்டு மொத்த உலகுக்கும் வாழ்க்கையின்
மிச்சத்தையும் கற்றுக்கொடுத்தாகிவிட்டது தெளிவாகிறது.
வாழ்க்கையின் RESET BUTTON கொடுத்த பிறகும் இன்னும் தெளிவாக இறைவன் துணைஇருக்க வேண்டும்.
தனக்கு உணவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும்போது மனிதம் மறுபடியும் உயிர்ப்படைகிறது.
எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்பொதெல்லாம் மனசு லேசாகிப்போகிறது.*
ZAKIR HUSSAIN