குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

28.4.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அரபு இலக்கணம் பிரதிப் பெயர்
தொகுப்பு மற்றும் தமிழாக்கம்
கே.கே.பிஸ்மில்லாஹ் கான் ஃபைஜி
பிடிஎஃப் ஃபைல் தமிழில்  பதிவிறக்க

பிரதிப் பெயற்சொல் 

"பிரதி" என்றால் பதிலாக(பகரமாக) என்று பொருள். பெயற்சொல் என்றால், ஒரு மனிதன், அல்லது ஒரு கால்நடை, அல்லது ஏதாகிலும் ஒரு பொருளைக் குறிக்கும் வார்த்தைக்கு பெயற்சொல் என்று சொல்லப்படும்.
ஒரு பெயருக்கு பதிலாகப் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு பிரதிப் பெயற்சொல் என்று சொல்லப்படும். உதாரணத்திற்கு , ஜைத் பள்ளிவாசலுக்கு வந்தான், தொழுதுவிட்டு அவன் சென்றுவிட்டான் என்று நாம் கூறுவதைப் போன்று, இந்த வாசகத்தில் "அவன்" என்ற வார்த்தை யாரைக்குறிக்கும்?
ஜைதைக் குறிக்கும், ஸைத் என்ற பெயருக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ள "அவன்" என்ற வார்த்தைக்கு பிரதிப் பெயற்சொல் என்று சொல்லப்படும். தமிழில் அவன், அவள், அவர்கள், நீ, நீங்கள், நான், நாங்கள், அது, அவைகள் போன்ற வார்த்தைகளும் இதில் அடங்கும், இவைகளுக்குத்தான் பிரதிப் பெயற்சொற்கள் என்று சொல்லப்படும்.

இப்பாட நூலில் அரபியில் பிரதிப் பெயற்சொற்களின் வடிவமைப்புகள் என்னென்ன? அவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும், குர்ஆனில் என்னென்ன பிரதிப் பெயர்ச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதுபற்றியும் அறியவிருக்கின்றோம். இதில் நமது திறமைகளை பயிற்சிப் பகுதியும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூலில் உள்ள பாடங்களை கவனமாக கற்றுக்கொள்வதின் மூலம்,இன் ஷா அல்லாஹ் குர்ஆனில் உள்ள நூற்றுக்கணக்கான வார்த்தைகளுக்கு இலகுவாக அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அத்துடன் அரபு மொழியியலில் முக்கியமான இடத்திலுள்ள "ஸர்ஃப்" எனப்படும் வார்த்தைகளை வடிவமைத்தல் என்ற பாடத்தை இலகுவாக கற்றுக்கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும். முழுமையாக அறிந்து கொள்ள
பிடிஎஃப் ஃபைல் தமிழில்  பதிவிறக்க 
அல்லாஹ் அருள்புரிவானாக!

குறிப்பு: இந்த பாடத்தை அறிந்து கொள்வதற்கு முன் "அரபி மொழி எளிய முறையில் கற்க" அறிவது அவசியம்
, ,