இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/03/2011

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இஸ்லாமும் அறிவியலும்
தோலில் வலி உணரும் நரம்புகள்

டாக்டர் தாகாதத் தெஜாஸன் அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என உலக மக்கள் முன்பு சான்று பகர்கின்றார்.
இந்த மனிதர் இஸ்லாத்தின் திருக்கலிமாவை மொழிந்து முஸ்லிமாகின்றார். இந்த நிகழ்ச்சி எட்டாவது சவூதி மருத்துவ மாநாட்டில் நடந்தது. அவர்தான் பேராசிரியர் தகாதத் தெஜாஸன் ஆவார்கள். தாய்லாந்திலுள்ள சியாங்க் மாய் பல்கலைக்கழகத்தின் உடல் இயங்கியல் துறையின் தலைவர்.
 அதே பல்கலைக்கழகத்தில் முன்பு அவர் னுநயn ழக வாந குயஉரடவல ழக வாந ஆநனiஉiநெ ஆக இருந்தார்.
உடல் இயங்கியல் துறையில் அவர் நிபுணத்துவம் பெற்ற பிரிவு சம்பந்தமான திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளையும நாம் பேராசிரியர் தெஜஸான் அவர்கள் முன் வைத்தோம். கரு வளர்ச்சி பற்றிய படிநிலைகள் குறித்து புத்த வேதங்களிலும் மிகவும் துல்லியமான விபரங்கள் இருப்பதாக அவர் பதிலளித்தார். அப்படியாயின் அந்த விபரங்களை காணவும் அது பற்றி படிக்கவும் நாம் மிகவும் ஆர்வமும் ஆவலும் கொண்டிருப்பதாக அவரிடம் கூறினோம். ஒரு வருடம் கழித்து பேராசிரியர் தெஜஸான் அவர்கள் வெளிப்புற ஆய்வாளராக மன்னர் அப்துல்அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அவர் ஒரு ஆண்டிற்கு முன்பு சொன்னதை அவருக்கு ஞாபகப்படுத்தினோம். நான் சொன்னது போன்று அதில் இல்லை. உறுதி செய்து கொள்ளாமல் சொல்லி விட்டேன் என்று வருத்தப்;பட்டார். அவர் புத்த வேதங்களை ஆராய்ந்து பார்த்த போது இது சம்பந்தமான எதுவும் அதில் இல்லை என்பதை அவர் கண்டு கொண்டார்.
இதற்குப்பிறகு, திருக்குர்ஆனும் நபி மொழியும் எவ்விதம் நவீன கருவியலுடன் ஒத்துப் போகின்றது என்பது பற்றி பேராசிரியர் மூர் அவர்களால் எழுதப்பட்ட ஒரு சொற்பொழிவை அவருக்கு வழங்கினோம். பேராசிரியர் மூர் அவர்களை உங்களுக்குத் தெரியுமா என்று அவரிடம் கேட்ட போது அவரை நன்றாகத் தெரியும் மேலும் அவர் இந்தத் துறையில் உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற அறிவியலாளர் என்று பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையை பேராசிரியர் தெஜஸான் அவர்கள் ஆராய்ந்த போது மிகவும் வியப்பிற்குள்ளானார். சருமவியல் சம்பந்தமான நவீன கண்டுபிடிப்புக்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளில் ஒன்று தோலின் உணர்வுத் தன்மையாகும்.
டாக்டர் தாஜெஸான் அவர்களிடம் சொல்லப்பட்டது: 1400 அண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட புனிதத் திருமறையான குர்ஆனில் நரக நெருப்பால் நிராகரிப்பவர்கள் தண்டிக்கப்படும் போது அவர்களின் நிலை குறித்து ஒரு குறிப்பு வருகின்றது. அவர்களின் தோல் அழிந்து விட்ட பிறகு அவர்கள் வேதனையை உணரும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு வேறொரு தோலை உண்டாக்குகின்றான் என்று அது கூறுகின்றது. இதன் மூலம் வலி உணரும் அந்த நரம்பு தோலில்தான் முடிகின்றது என்பது குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. அந்த வசனம் பின்வருமாறு:-
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நி';'யமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
தோலில் முடியும் வலி உணரும் நரம்பின் முக்கியத்துவம் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த குறிப்பு சரியென்று தாங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா என்று அவரிடன் கேட்கப்பட்ட போது: ஆம் ஒப்புக் கொள்கின்றேன் என்று டாக்டர் தெஜஸன் அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த உணரும் தன்மை பற்றி வெகு காலத்திற்கு முன்பேயே கூறப்பட்டுள்ளது. எவரேனும் குற்றம் செய்தால் அவர் தோலை எரிப்பதன் மூலம் தண்டிக்கப்படுகின்றார்: அவர் வேதனையை மீண்டும் உணரும் பொருட்டு அல்லாஹ் அவருக்கு புதிய தோலை உண்டாக்குகின்றான். வலி உணர்ச்சி உள்வாங்கி தோலில்தான் இருக்கின்றது என்பது முன்பேயே தெரிந்திருக்கின்றது. அதனால்தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது.
காயங்களை உணரும் மையமாக தோல் செயல்படுகின்றது. (படம் 8.1) அது முழுமையாக எரிக்கப்பட்டு விட்டால் அந்த உணரும் தன்மையை அது இழந்து விடுகின்றது. இதன் காரணமாகத்தான் அல்லாஹ் தோலை ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி நிராகரிப்பவர்களை தண்டிக்கின்றான். உயர்ந்தோனும் புகழ்மிக்கோனுமாகிய அல்லாஹ் இதை தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்:
யார் நம் வேதவ'னங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நி';'யமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
இந்த வசனங்கள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எந்தவொரு மனிதரிடமிருந்தாவது வந்திருக்க முடியுமா என்று நாம் அவரிடம் கேட்டோம். அவைகள் ஒரு போதும் எந்த மனித மூலத்திலிருந்தும் வந்திருக்க சாத்தியமில்லை என்று பேராசிரியர் தெஜஸான் அவர்கள் ஒப்புக் கொண்டார். ஆனால் இன்னும் அவர் அந்த அறிவின் மூலத்தைப் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் முஹம்மது அவர்கள் எங்கிருந்துதான் அதைப் பெற்றிருக்க முடியும்?
அது எல்லாப் புகழிற்கும் உயர்விற்கும் உரியோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து என்று நாங்கள் பதிலளித்தோம். அல்லாஹ்வா? யார் அது என்று அவர் கேட்டார்.
அனைத்தையும் படைத்தவன்தான் அவன். தாங்கள் பேரறிவை கண்டீர்களானால் அது உண்மைதான். ஏனெனில் அது பேரறிவாளனிடமிருந்து வந்துள்ளது. இப் பிரபஞ்சப் படைப்பில் அறிவை கண்டீர்களானால் அது உண்மைதான் ஏனெனில் இப் பிரபஞ்சம் அனைத்தையும் அறிந்தவனால் படைக்கப்பட்டுள்ளது. இப் படைப்புக்களின் ஒன்றிணைப்பில் முழுமையை தாங்கள் கண்டீர்களானால், அது தீர்க்க ஞானமுள்ளவனின் படைப்பு என்பதற்கான ஆதாரமாகும், தாங்கள் கருணையை கண்டீர்களானால் அது அளவற்ற கருணையாளனின் படைப்பு என்பதற்கு சான்று கூறி நிற்கின்றது. அதைப் போன்றே, படைப்புக்கள் ஒரே சீரான ஒழுங்குடனும் ஒன்றுக்கொன்று பிணைந்தும் இருப்பதை தாங்கள் கண்டால் அது ஒரே ஒரு படைப்பாளன்தான் உள்ளான் என்பதற்கான ஆதாரம். எல்லாப் புகழும் மேன்மையும் அவனுக்கே உரித்தானது.
நாங்கள் கூறியதை பேராசிரியர் தாஜெஸன் ஏற்றுக் கொண்டார். அவர் நாட்டிற்குத் திரும்பிப் போய் தான் பெற்ற பல புதிய அறிவுகளையும் கண்டுபிடிப்புக்களையும் பற்றி அங்கே பல சொற்பொழிவுகளாற்றினார். அவருடைய சொற்பொழிவுகளின் விளைவாக அவரின் ஐந்து மாணவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பிறகு, எட்டவாது சவூதி மருத்துவ மாநாட்டில் ஆற்றப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் ஹதீதிகளில் காணப்படும் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட பல்வேறு தொடர் சொற்பொழிவுகளில் பேராசிரியர் தாஜெஸான் அவர்கள்; கலந்து கொண்டார்கள். பேராசிரியர் தாஜெஸான் அவர்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத பல்வேறு அறிஞர்களிடம் நான்கு நாட்கள் உரையாடினார். அவர்களிடம் திருக்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் காணப்படும் இந்த அற்புதங்களைப் பற்றி உரையாடினார். அந்த மாநாட்டின் இறுதியில் பேராசிரியர் தாஜஸான் அவர்கள் எழுந்து நின்று கூறியதாவது:
கடந்த மூன்றாண்டுகளாக திருக்குர்ஆனை ஆராய்ச்சி செய்வதில் நான் ஆர்வம் உள்ளவனானேன். திருக்குர்ஆனை சேக் அப்துல்மஜீது ஜின்தானி அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பேராசிரியர் கீத் மூர் அவர்கள் எழுதிய கட்டுரையை கடந்த வருடம் சேக் அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். அதை தாய் மொழியில் மொழி பெயர்க்குமாறும் தாய்லாந்திலுள்ள முஸ்லிம்களுக்கு (அது பற்றி) பல சொற்பொழிவுகள் ஆற்றுமாறும் என்னை அவர் கேட்டுக் கொண்டார். அவருடைய அந்த வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன். சேக் அவர்களுக்கு அன்பளிப்பாக நான் கொடுத்துள்ள வீடியோ கேசட்டில் அதை தாங்கள் காணலாம். என்னுடைய ஆராய்ச்சியின் மூலமாகவும் இந்த மாநாட்டிலிருந்து நான் தெரிந்து கொண்டவைகள் மூலமாகவும் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் திருக்குர்ஆனில் பதியப்பட்ட ஒவ்வொன்றும் உண்மையென்றும் அவைகளை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியும் எனவும் நான் நம்புகின்றேன். நபி முஹம்மது அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாததால், (மானிட சக்திக்கு அப்பாற்பட்ட) இந்த உண்மையை எத்தி வைத்த முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத்தான் இருந்திருக்க வேண்டும். சக்திவாய்ந்த வாய்ந்த படைப்பாளன் பேரொளியாக இந்த உண்மையை அவருக்கு அருள் செய்தான். அந்தப் படைப்பாளன் அல்லாஹ் அல்லது இறைவன். ஆகவே, லா இலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்; தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்
முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று கூறுவதற்கு இதுதான் நேரம் என நான் நினைக்கின்றேன்.
நான் இந்த மாநாட்டின் மூலம் அறிவியல் அறிவை மாத்திரம் தெரிந்திடவில்லை ஆனால் இதில் கலந்து கொண்ட பல புதிய அறிவியலாளர்களை சந்திக்கவும் மேலும் பல புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் இந்த மாநாட்டிற்கு வந்ததன் மூலம் பெற்றுக்கொண்ட விலை மதிப்பு மிக்க ஒன்று லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று மொழிந்து என்னை நானே இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதுதான்.
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும் அது வல்லமை மிக்க புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள். (திருக்குர்ஆன் 34:6), ,