இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

08/03/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொப்பைக்கே குட் பையா ?
almighty-arrahim.blogspotcom
தொப்பை குறைவது உறுதி...
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில்
வைக்கவும்
தலை கைகள் கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்க வேண்டும்
பிறகு மூச்சை இழுத்து கொண்டே தலையைத் தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் இரு கால் கட்டை விரல்களைச் சேர்த்து வைத்து அப்படியே மேலே தூக்கவும் சுமார்  60 டிகிரி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்
திரும்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிகால்களை எக்காரணம் கொண்டும் தரையை தொடகூடாது அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்து விடும்     
இப்படி ஒரு நாளைக்கு 10  முறை செய்ய வேண்டும் புதியவர்கள்    முறை செய்தால் போதும் இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொப்பை குறைவது உறுதி...
பெருங்குடல் சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும் இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெரும்; முதுகெலும்பும் மற்றும் தொடை பகுதியும் அதிக வலிமை பெரும்

கஸ்டமா இருக்கா? சரி தொடர்ந்து படிக்க.. மிக எளிய முறை 

காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

. தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

இதை விட எளிய முறை ...?
, ,