இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

01/03/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜைத் பின் தாபித் (ரலி)
திருக்குர்ஆன் தொகுப்புப் பணியில் ஜைத் பின் தாபித் (ரலி)
உதவிய நூல் : நம்பிக்கை தமிழ் இஸ்லாமிய மாதாந்திர சஞ்சிகை (மலேசியா)
ஆக்கம் : போராசிரியர் ஸைய்யது முஹம்மது (ஆ.டுவைவ) மதினா.

ஜைத் பின் தாபித் (ரலி) பற்றி - நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார்.


எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்ப அண்ணலார் (ஸல்) அவர்களின் அறிவுரைக்கேற்ப யூதர்களின் மொழியை 15 நாட்களிலும், சிரிய மொழியை 17 நாட்களிலும் கற்றுத் தேர்ந்தார்கள்.

இவ்வாறு நபித்தோழர்கள் மத்தியில் மாபெரும் அறிஞராகவும், அண்ணலார் (ஸல்) அவர்களின் மொழி பெயர்ப்பாசிரியராகவும் விளங்கிய ஜைத் (ரலி) அவர்ளக் நம்பிக்கையிலும், நாணயத்திலும் சிறந்து விளங்கினார்கள். இதனால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை (வேத வெளிப்பாடு) எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நியமித்திருந்தார்கள். ஏதேனும் ஒரு வசனம் இறங்கி விட்டால் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி அவ்வசனத்தைப் பதிவு செய்வார்கள். அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருக்கும் வசனங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். வசனங்கள் இறங்க இறங்க, இறங்கிய மாதிரி அண்ணலார் (ஸல்) அவர்களிடமிருந்து வாயோடு வாயாகக் கேட்டுத் தெரிந்து எழுதினார்.

எந்த வசனம் எப்பொழுது இறங்கியது? ஏன்? எதற்காக இறங்கியது? என்பதெல்லாம் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுக்குக் கை வந்த கலை. சுருங்கக் கூறின் இவர் ஓர் அறப் போர் வீரர், திருக்குர்ஆனின் நல்லாசிரியர். திருக்குர்ஆனைப் பார்க்காமல் ஓதும் ஹாபிஸ், இனிமையாக ஓதும் காரி, அறிவு ஞானம் மிகுந்த சட்ட மேதை, பல மொழிகள் தெரிந்த பன்மொழிப் புலவர், வஹி எழுதும் எழுத்தாளர், கலீஃபாக்களின் ஆலோசகர்.

தற்காலிக கலீஃபா

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய அலுவலகப் பொறுப்பைக் கவனிக்க இவரை தற்hகாலிகக் கலீஃபாவாக நியமித்திருக்கிறார்.

சிரியாவுக்கு பயணமான போதும் இவரையே தற்காலிக கலீஃபாவாக உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நியமித்து விட்டுச் சென்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களும் இவரை அவ்வாறு நியமித்திருக்கிறார்கள்

திருக்குர்ஆனைத் தொகுத்தவர் :

திருக்குர்ஆன் ஒரே தடவையில் இறங்கியது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி 20 க்கும் கூடுதலான ஆண்டுகளில முழுமையடைந்தது. திருக்குர்ஆன் இறங்கும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். தம் தோழர்களில் நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். எழுதி முடிந்ததும் அவர்களிடம் வாசித்துக் காட்டப்படும். எழுதியவர்கள் சரியாக எழுதினார்களா இல்லையா என்று சரி பார்த்து உறுதி செய்யப்படும்.

அக்காலத்தில் காகிதங்களாக அறியப்பட்டிருந்தவற்றில் எழுதச் செய்து பிறகு அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்கச் செய்தார்கள். ஒவ்வொரு தடவை மாமறை திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கும் போது எழுத்தாளர்களை கூப்பிட்டு இந்த வசனத்தை அல்லது இன்னின்ன வசனங்களை எந்த அத்தியாயத்தில் எப் பகுதியில் எழுத வேண்டுமோ அப்பகுதியில் எழுதச் செய்வார்கள். சிலர் திருக்குர்ஆனை தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்தும் பாதுகாத்தனர்.

எழுதியும், மனனம் செய்தும், பாதுகாத்தவர்களில் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் மிக முக்கியமானவர்.

மேலும், அலிய்யி பின் அபீ தாலிப் (ரலி), உபய்யு பின கஃபு (ரலி), முஆவியா (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) முதலிய நபித்தோழர்களெல்லாம் இந்த வரிசையில் எண்ணப்படுகின்ற முக்கிய எழுத்தாளர்களும், ஹாஃபிஸ்களுமாவார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்த போது திருக்குர்ஆன் வௌ;வேறு சுவடிகளில் எழுதப்பட்டும் பலரது நெஞ்சங்களிலும மனனம் செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டது. வசனங்கள் மற்றும் அத்தியாயங்கள் யாவும் தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் தினச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது. ஒரே ஏட்டில் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டதாக இருக்கவில்லை. அதற்குரிய தேவை அன்று ஏற்படவில்லை. ஏனெனில் வஹி (வேத வெளிப்பாடு) அன்று தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அதன் வரத்து அன்று நின்று விடவில்லை.

அபூபக்கர் சித்திக் (ரலி) காலத்தில்.. ..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தில் மதமாற்றம் பற்றிய கொந்தளிப்பு எழுந்த போது இஸ்லாத்தை ஏற்றிருந்தத சிலர் அதை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியது. மதம் மாறியவர்களுடன் போரிடுவதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் முஸ்லிம் படைகளைத் திரட்டிக் கொண்டு ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு யமாமா போர் நடத்தினார். அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் த ங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து கொண்டனர்.

ஜைத் பின் தாபித் (ரலி)

ஜைத் பின் தாபித் (ரலி) போன்றவாள் அந்த யுத்தத்தில் காயமடைந்தவர்களில் ஒருவராவார். நபித் தோழர்கள் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தது உமர் கத்தாப் (ரலி) அவர்களை பெரிதும் வாட்டியது. யமாமா யுத்தம் முடிந்ததும் உமர் கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து இது போன்ற யுத்தத்தில் கலந்து எஞ்சிய ஹாபிஸ்கள் யாவரும் உயிர் நீப்பதற்குள் திருக்குர்ஆனை ஒருங்கிணைத்து பாதுகாத்துக் கொள்ளும் பணியை துவக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இம்மாதிரி யுத்தம் நடைபெறும் பட்சத்தில் திருக்குர்ஆன் மனனம் செய்தவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ என்ற அச்சம் தெரிவித்தார்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் கூறிய விசயத்தில் உடன்பாடு கொள்ளவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள செய்யாத ஒரு பணியை நாம் எவ்வாறு செய்வது, நீங்கள் என்னிடம் அதை எவ்வாறு செய்யச் சொல்வீர்கள்? என்ற ரீதியில் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய சிந்தனை ஓடியது. உமர் (ரலி) அவர்கள் மீண்டும் எடுத்துக் கூறி, அபூபக்கர் (ரலி) அவர்களை ஏற்கச் செய்தார்கள். பிறகு, அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி திருக்குர்ஆனை தொகுத்து தரும் பொறுப்பை ஏற்கும் படி வேண்டிக் கொண்டார்கள்.

ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களின் உயர் தகுதி :

இதற்குத் தகுதியானவர் ஜைத் பின் தாபித் (ரலி) எனபது அபூபக்கர் (ரலி0 அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிpந்தவர். காணாமல் பாடம் பண்ணியவர். எழுத்தறிவு பெற்றவர், சிந்திப்பதிலும், புரிந்து கொள்வதிலும் நிகரில்லாதவர். அதுமட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கடைசி வரையிலுமிருந்து திருக்குர்ஆனை இறுதியாகச் சரி பார்த்தவர்.

ஆகவே, இம்மாதிரித் தகுதிகள் அவரிடம் இருப்பதைத் தெரிந்து கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் கூறினார்கள் :

ஜைதே! நீர் ஓர் இளைஞர், உமது சிந்தனையிலும், ஆற்றலிலும் நாங்கள் சந்தேகம் கொள்ள மாட்டோம். நீர் முன்பு வஹீயை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது குர்ஆனின் பிரதிகள் யார் யாரிடம் இருக்கின்றன என்பதும் உமக்குத் தெரியும். ஆகவே, அதை ஒருங்கிணைத்து ஒன்றாகத் தொகுத்து விடும் என்றார்கள்.

முதலில் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் பிறகு இப்பொறுப்பை நிர்வகிக்கத் தயாரானார்கள். திருக்குர்ஆன் அத்தியாயங்களும் வசனங்களும் யார் யாரிடம் இருக்கின்றன என்று ஆய்வு செய்ய முற்பட்டடார். இஸ்லாமிய மார்க்கம் எந்த திருக்குர்ஆனை அடிப்படை வேத நூலாக ஏற்கிறதோ அந்தக் திருக்குர்ஆன் அன்று பற்பல ஏடுகளில் எழுதப்பட்டிரு;நதது. அவற்றை ஒரே தொகுப்பில் கொண்டு வருவதென்றால் அது அன்று மட்டுமல்ல என்றுமே சிரமமான வேலை தான். அம்மாதிரியான பொறுப்பை அன்று ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் செய்து முடித்தார். இப்பொறுப்பின் கம்பீரத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒரு தடவை ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்:

இன்ற நான் திருக்குர்ஆனின் சுவடிகளை திரட்டி மனனம் செய்தவர்களையும் கொண்டு ஓதி சரிபார்த்து ஒரே ஒரு தொகுப்பில் ஒருங்கிணைத்து தர வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கின்றேன். இறைவன் மீது ஆணையாக என் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்புக்குப் பதிலாக ஒரு மலையைப் பெயர்த்து இன்னொரு இடத்தில் வைத்துவிட வேண்டுமென்று என்னிடம் பணித்திருப்பார்களேயானால் அது எனக்கு மிகவும் இலகுவாக இருந்திருக்கும்.

அதாவது, திருக்குர்ஆன்அத்தியாயங்களைத் தேடிப் பிடித்து தொகுத்து வழங்கும் போதும், மேலும் திருக்குர்ஆன் வசனங்களைக் கண்டறிந்து சரிபார்த்து அதனுடைய இடத்தில் வைக்கும்போதும் ஏற்படுகின்ற சிரமங்கள் ஒரு மலையைப் பெயர்த்து இடமாற்றம் செய்வதனால் ஏற்படும் கஷ்டத்தை விட கடினமானதிது. திருக்குர்ஆன் பால் கொண்ட மதிப்பச்சத்தின் காரணமாக அவர்கள் அப்படிக் கூறினார்கள்.

இறுதியில் இப்பொறுப்பை சரிவர நிறைவேற்ற இறைவனின் பேருதவி ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுக்கு கிடைத்தது.

திருக்குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே அதனைப் பாதுகாப்போம் என்று இறைவன் கூறியதற்கேற்ப ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுடைய பணி அமைந்தது. அவர் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். முழு வெற்றியும் ஈட்டினார். தம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை செம்மையாகச் செய்து முடித்தார். திருக்குர்ஆன் பகுதிகள் எங்கெங்கு யார் யாரால் பாதுகாக்கப்ட்டனNh மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைப்படி அவர்கள் சொனன மாதிரி எங்கெங்கு எழுதி i வக்க்பட்டிருந்ததோ அவற்றையே ஜைத் பின தாபித் (ரலி) அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். பிறகு ஹாபிஸ்களில் யார்யார் தத்தம் இதயங்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்தார்களோ அந்த ஹாபிஸ்களிடமிருந்து அவற்றை ஓதக் கேட்டு, பிறகு அவற்றை ஓதக் கேட்டு, பிறகு எழுதப்பட்டிருந்தவையுடன் ஒத்துப் பார்த்து சரி செய்து கொண்டார்கள் ஜைத் பின் தாபித் (ரலி). புனிதமான இப்பணியை ஏனை நபித்தோழர்கள் அங்கீகரித்துப் பாராட்டினர். அன்று சமூகத்திலுள்ள எல்லா ஹாபிஸ்களும் காரிகளும் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களுடன் ஒத்துழைத்தனர். திருக்குர்ஆன் தொகுத்து வழங்குவதில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகும் இது. நபித்தோழர்கள் மத்தியல் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் இப்பணியை முழு ஈடுபாட்டடன் செய்து முடித்தார்.

பேணுதலும் கவனமும்:

மனனம் செய்து கொண்ட ஹாபிஸ்களின் மனன ஆற்றல் மீது மட்டும் சார்ந்து நிற்காமல் அது மட்டுமே போதுமானது என்று கருதிக் கொள்ளாமல் எழுதிப்பதிவு செய்து வைத்திருந்தவர்களின் எழுத்துச் சுவடிகளுடன் மனனம் செய்தவர்களின் ஓதுதலையும் ஒப்பிட்டுப் பார்த்து தொகுப்புப் பணில் ஈடுபட்டார். ஜைது (ரலி) அவர்களே நன்றாக மனனம் செய்த ஹாஃபிஸ்களில் ஒருவராக இருந்தும் அவர் தன்னுடைய மனன ஆற்றல் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், மனனம் செய்திருந்த ஏனைய நபித்தோழர்கள் ஓதிக் காட்டியதற்கேற்பவும் சரி பார்த்துக் கொண்டார் எனில், அது அவருடைய பேணுதலுக்கு எடுத்துக் காட்டாகும். ஆக எழுதி வைக்கப்பட்டவை அனைத்தும் மனனம் செய்யப்பட்டிருந்த வசனங்களுடன் ஒத்திருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார். ஆக எந்தளவு அவர்கள் கவனத்தோடும் பேணுதலோடும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகளாகும்.

மாமறைக்கு முஸ்ஹஃப் என்ற பெயர்.

அபுபக்கர் (ரலி) திருக்குர்ஆன முதலில் ஒரே தொகுப்பில் ஒருங்கிணைப்பதற்காக வேண்டி முயற்சித்த முதல்கலீஃபா ஆவார். அன்று முதல் திருக்குர்ஆனுக்கு முஸ்ஹஃப் ஒரே ஏட்டில் தொகுக்கப்பட்டது. அடுத்தபடியாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அதை ஒருங்கிணைக்க ஆவனச் செய்தார். அவருடைய ஆணைக்கேற்ப ஜைத் பின் தாபித் (ரலி) தொகுத்து வழங்கிய முஸ்ஹஃபானது அபூபக்கர் (ரலி) அவர்களிடமே இருந்தது.

ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டு அவர்ள் மரணமடைந்த போது உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் வரை அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி0விடம் குர்ஆன் எழுததுப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டன.

உஸ்மான் (ரல) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாதிற்கு வெற்றிகள் குவிந்த வண்ணமிருந்தன. பல ஊர்களில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. கூட்டம் கூடடமாக மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிமல்லாத பல ஊர்கள் வெற்றி கொள்ளப்பட்டன.

திருக்குர்ஆனை நன்றாகமனனம் செய்திருந்த ஹாபிஸ்களும் அதை நன்றாக ஓதத் n தரிந்த கரிகளும் புதிய இஸ்லாமிய ஊர்களில் குடியேறினர். அங்குள்ள மக்கள அந்த ஹாபிஸ்கள், காரிகளிடமிருந்து திருக்குர்அனை ஓதக் கற்றுக் கொண்டனர். மொழிகள் யாவும் உச்சரிப்பதிலும் பேச்சு வழக்கிலும் நகரத்துக்கு நகரம் மாறுபடும், வட்டாரத்துக்கு வட்டாரம் வித்தியாசமாக இருக்கும்.

இது விஷயத்தில் அரபி மொழி விதிவிலக்கல்ல. திருக்குர்ஆன் மக்காவில் அரவி மொழியில் இறக்கியருளப்பட்டாலும் பல கோத்திரங்களைச் செர்ந்த அரபிகள் அதை அவரவர் பாணியில் அவரவர் மொழி வழக்கத்தில் ஏழு விதமான (வழக்கில்) பாணியில் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டிருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளக்கிக் கூறினார்கள் (புகாரி).

இவ்வாறு ஓதுவதனால் திருக்குர்ஆனின் கருத்துக்கோ பொருளுக்கோ எந்த மாறுதலும் ஏற்படாது. அன்று ஏற்படவும் இல்லை. அதன் பிறக இஸ்லாம் பரவத் தொடங்கிய போது அரபியல்லாத மக்கள் அரப் மக்களுடன் சேர்ந்து புது சமூக அமைப்பு உருவாக்கி;னர். அரபி மொழியையும் பேசத் தொடங்கினர். இதனால் அம்மொழியிலும் அதன உச்சரிப்பு விததத்திலும் சிற்சில மாறதல்கள் உண்டாயின. ஒவ்வொருவரும் அவரவர் உச்சரிப்புக்கு ஏற்ப திருக்குர்ஆனை ஓதினர்.

பிரபல நபித்தோழர் ஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்கள் அன்று ஈராக்கில் தங்கியிருந்தார். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற வேறு நபித்தோழர்களும் தங்கியிருந்தனர். அவ்வூர் மக்கள் ஆளுக்கு ஆள் வித்தியாசமாக திருக்குர்ஆனை ஓதுவதை அவர் கவனித்தார். சிலர் தவறாக உச்சரித்து ஓதுவதையும் கவனித்தார். இப்படியே போனால் காலப் போக்கில் பிரச்னைகள் பல உருவாகக் கூடும் எனக் கருதினார். அரபி மொழியில் உள்ள உச்சரிப்பின் அழகும் இனிமையும் போய்விடும் என்று அவர் அஞ்சினார். ஆங்காங்கே உள்ள வட்டார வழக்கங்களின்படி திருக்குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்படும் பட்சத்தில், திருக்குர்ஆனில் குளறுபடிகள் தோன்ற வாய்ப்பு உண்டு என உணர்ந்து அமீரில் முஃமினீன் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இவர் தம் கருத்தைத் தெரிவித்தார்.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் உதவி கோரிய பிறகு மேலும் ஏனைய நபித்தோழர்களிடம் கலந்தலோசித்து விட்டு கீழ்க்காணும் முடிவுக்கு வந்தார்.

1. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் முன்னர் ஜைத் பின்தாபித் (ரலி) அவர்களுடைய உதவியால் தொகுத்து வழங்கிய திருக்குர்ஆனை அடிப்படையாக வைத்து ஒரே மாதிரியாக மொழி மரபைப் பேணி ஒரே ரீதியிலான உச்சரிப்பில் பிரதிகள் எடுப்பது.

2. அதை மட்டும் மக்கள் ஓதுவதில் கடைபிடிக்க வேண்டும் எனவும், அதிலுள்ளபடி (காரிகள்) ஓதுகிறவர்கள் யாவரும் ஓத வேண்டும் எனவும் எல்லா ஊர்களிலும் அறிவிப்புச் செய்வது.

அதற்கேற்ப அன்னை ஹப்ஸா (ரலி) அவர்களிடமிருந்த முஸ்ஹஃபை வாங்கி பிரதிகள் எடுத்தனர்.

அப்துல்லா பின் ஸுபைர், ஸயீது பின் அல் ஆஸ், அப்துர் ரஹ்மான் பின அல் ஹாரிஸ் (ரலி) போன்றோர்களையும் வரவழைத்து அவர்கள் பிரதிகள் எடுக்க வெண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். குறைஷிகளின் உச்சரிப்பு முறையும் பாணியுமே பின்பற்றப்பட வேண்டும். ஏனெனில் அவர்களின் பாணியிலும் மொழி வழக்கிலுமே திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்த முடிவின்படி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் மூலப்பிரதி திருப்பிக் கொடுக்கப்பட்டது. மக்கா, ஈராக், பஸரா, யமன், சிரியா போன்ற இஸ்லாமியப் பிரதேசங்களுக்கு பிரதிகள் அனுப்பப்பட்டன. இது ஹிஜ்ரி 25 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும். முன்பு எழுதி வைக்கப்பட்டிருந்த திருக்குர்ஆன் ஏனைய சுவடிகள் அழிக்கப்பட்டன.

அனைத்துப் பிரதேரசங்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள இவ்வாறு கடிதம் எழுதினார்கள் :

முஸ்லிம்களே! நான் இதோ அனுப்பித் தருகின்ற திருக்குர்ஆனின் சுவடிகளை மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள். பழைய சுவடிகள் ஏதேனும்இருப்பின் அதை தீயிட்டு அழித்து விடுங்கள். நானும் அவ்வாறே செய்கிறேன்.

இன்று உலக முஸ்லிம்களின் கைவசமிருக்கும் திருக்குர்ஆனை இதே மாதிரியான அமைப்பில் தொகுத்து வழங்கியவர் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள்.

வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றார்கள்:

இரண்டு விஷயத்தில ஜைத் (ரலி) அவர்களுடன் போட்டியிட்டு வெல்ல எவராலும் இயலாது.

ஒன்று: திருக்குர்ஆன் தெளிவு

இரண்டு: வாரிசுரிமைச் சட்டம், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட சட்டத் தெளிவு

இவ்விரு விஷயங்களிலும் ஜைது (ரலி) அவர்கள் தன்னிகரற்று விளங்கினார்.

மஸ்ரூக் (ரலி) சொல்கின்றார்:

நான் மதினாவிற்கு வந்த போது ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களைக் கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் அறிஞர்களில் ஒருவராகக் கண்டேன். (அல்இஸ்தீஆப் 2:539)

மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மதினாவில் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்குப் பிறகு மக்களின் தலைவராக கருதப்பட்டவர் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் தான்.

ஸாபித் பின் உபைத் சொல்கிறார்ளகள்: ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்கும் போது மிகவும் கலகலப்பாக இருப்பார். மக்களுடன் அமர்ந்திருக்கும் போது அமைதியாக இருப்பார். கபீஸா (ரலி) அவர்கள சொல்கிறார்:

ஜைத் பின்தாபித் (ரலி) அவர்கள் ஷரீஅத் நீதிமன்றத்தின் மாபெரும் நீதிபதியாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் முஃப்தியாக, நன்றாக மாமறை திருக்குர்ஆனை ஓதத் தெரிந்த காரியாக, பாகப்பிரிவினைச் சட்ட நிபுணராக இருந்திருக்கின்றார். ஆக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், பிறகு அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் காலத்திலும் பின், உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்திலும், பின் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்திலும் திருக்குர்ஆன் மனனம் செய்து பிறகு அதைத் தொகுத்து சரிபார்த்து வழங்கிய பெருமை இநத நபித்தோழருக்கு உண்டு. இதை விடச் சிறந்த ஒரு பணி வெறு இருக்கவே முடியாது.

திருக்குர்ஆனுடன் இவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தினாலும், மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் நெருங்கி தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலும், சமூகத்தில் தர்க்கமும் கருத்து மோதல்களம் உண்டாகுமிடங்களில ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்பவராக இருந்திருக்கின்றார். நபித் தோழர்களிடையே சர்ச்சைகளும் விமர்சனங்களும் உருவாகும் போது சமூகத்தில் நெருக்கடிகள் தோன்றும் போது ஏனைய சஹாபாக்கள் இவரிடமே ஆலோசனை கேட்டனர்.

ஜைது பின் தாபித் (ரலி) அவர்களுடைய மரணம்.

ஹிஜ்ரி 45 ஆம் ஆண்டு இந்த உத்தம ஸஹாபி தன் 55 வது வயதில் இவ்வுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவருக்காக பலர் இரங்கல் செய்திகளைக் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இரங்கல் செய்தியில், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முஸ்லிம் உம்மாவின் மிகப் பெரிய அறிவு ஜீவி இன்றைய தினம் மரணமடைந்து விட்டாரே! என்று குறிப்பிட்டார். மர்வான் (ரலி) ஜைத் பின்தாபித் (ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஸஹாபிகளில் மிகப்பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) போன்றவர்கள் இவர் மீது இரங்கற்பாக்களைப் பாடி தங்களின் மனக்கவலைகளை வெளிப்படுத்தினர். வல்ல அல்லாஹ் ஜைத் பின் தாபித் (ரலி) அவர்களது பணிக்கு மறுமையில் உயரிய பரிசினை இன்ஷா அலலாஹ் வழங்கிச் சிறப்பிப்பானாக!
, ,