குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

13.4.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

Duplicate file remover
டூப்ளிகேட் பைல்


டூப்ளிகேட் கோப்புகள்(douplicate files) என்பது ஒரு கோப்பை நகலெடுத்து கணினியில் பல்வேறு இடங்களில் வைத்திருப்போம் அல்லவா? அதுதான் டூப்ளிகேட் பைல். ஒரே கோப்பை காப்பி செய்து பல்வேறு போல்டர்களில் போட்டு வைத்திருப்போம். ஏதாவரு ஒரு காரணத்திற்காக இவ்வாறு கோப்புகளை நகலெடுத்து அங்கங்கு சேமித்து வைத்திருப்போம். ஆனால் நமக்குத் தேவையானது ஒரு கோப்பாகத்தான் இருக்கும். ஒரிஜினல் தவிர மற்ற இடங்களில் இருக்கும் கோப்புகளை டூப்ளிகேட் பைல் என்கிறோம்.


டூப்ளிகேட் பைல்கள் எப்படி கணினியில் சேர்கிறது?

எளிதாக கிடைக்கிறது என்பதால் இணையத்திலிருந்து பல்வேறு

மென்பொருள்கள்(Softwares), Images, Videos, documents, Pdf files போன்றவைகளை தரவிறக்கிப் பயன்படுத்தியிருப்போம். ஒரே கோப்பையும் தெரியாமல் இரண்டு மூன்று முறை கூட டவுன்லோட் செய்திருப்போம். அத்தகைய கோப்புகளை அழிக்காமல் இருப்பதால் ஒரே கோப்பானது இரண்டு, மூன்றாக இருக்கும். பல முறை இவ்வாறு செய்வதால் டூப்ளிகேட் கோப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். இவற்றை கண்டறிந்து நீக்குகிறது இந்த douplicate file remover மென்பொருள்.

இரண்டாவது காரணம் நாமாக நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை ஏதேனும் பாதுகாப்பு கருதியோ, அல்லது மற்ற பயன்களுக்காகவோ அவற்றை நகலெடுத்து பல்வேறு இடங்களில் வைத்திருப்போம்.

இவ்வாறு வைத்திருக்கும் கோப்புகள் ஒரு வீடியோ கோப்பாக இருக்கலாம். ஒரு இமேஜ் பைலாக இருக்கலாம். அல்லது ஒரு மென்பொருளாக இருக்கலாம்.. இவ்வாறு கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்துவிதமாக கோப்புகளிலும் டூப்ளிகேட் கோப்புகளை (Douplicate files) நாமாகவே உருவாக்கி வைத்திருப்போம். காலப் போக்கில் இத்தகைய டூப்ளிகேட் பைல்கள் அதிகரித்துவிடும்.

ஒரே கோப்பானது கணினியில் பல்வேறு இடங்களில் இருப்பதை நாம் கவனக்குறைவாக அல்லது மறதியினாலோ அழிக்காமல் அப்படியே விட்டுவிடுவோம். பிறகு இவற்றைத் தேடிப் பிடித்து அழிப்பது (delete)என்பது சிரமமான காரியம். எனவே இந்த சிரமத்தை குறைக்கவும், நம் கணினியில் அதிகளவு இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிற டூப்ளிகேட் கோப்பை கண்டறிந்து நீக்கவும் இந்த douplicate file remover மென்பொருள் பயன்படுகிறது.

டூப்ளிகேட் கோப்புகள் அதிகளவில் கணினியில் இருந்தால் கணினியில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது Hard Disk -ல் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் கணினியின் வேகம் குறைந்துவிடும். எனவே இந்த டூப்ளிகேட் பைண்டர் அண்ட் ரீமூவர் (Douplicate finder and remover software) தரவிறக்கி உங்கள் கணினியில் உள்ள டூப்ளிகேட் கோப்புகளை நீக்கிவிடுங்கள்.

கணினி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குகட்டாயம் தேவைப்படும் மென்பொருள் இது.

இம்மென்பொருளின் தரவிறக்க: Download (Latest version: 2.7 )

மென்பொருளை நிறுவி, உங்கள் கணினியிலுள்ள டூப்ளிகேட் கோப்புகளை நீக்கி கணினியை வேகப்படுத்திக்கொள்ளுங்கள்.
, ,