குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

18.4.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முஹம்மது (ஸல்) என்பவர் யார்?
இதுதான் உண்மை!

திருக்குர்ஆன் எதைப் பற்றி பேசுகின்றது?

முஹம்மது (ஸல்) என்பவர் யார்?

ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்வில் நம்பி செயல்பட வேண்டிய முழு முதற் மூலமானது இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனாகும். ஞானம், கொள்கை, வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், சட்ட திட்டங்கள் போன்ற மனிதர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களைப் பற்றியும் அது விவரிக்கின்றது. ஆனால் அதனுடைய அடிப்படை இலக்கோ மனிதனுக்கும் அல்லாஹ்விற்குமான தொடர்பை கூறுவதுதான். அதே நேரத்தில்

அது நீதியான சமூக அமைப்பிற்கும், சரியான மனித நடத்;தைக்கும், சமத்துவம் நிறைந்த பொருளாதார அமைப்பிற்கும் அது வழி காட்டி விபரமான போதனைகளை வழங்குகின்றது.

திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபியில் அருளப்பட்டது. ஆகவே, எந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் மொழி பெயர்ப்புக்கள் குர்ஆனாகவோ அல்லது குர்ஆனின் பிரதியாகவோ ஆக முடியாது. அது திருக்குர்னிலிருந்து (விளங்கப்பட்ட) அர்த்தங்களின் மொழி பெயர்ப்பே ஆகும். திருக்குர்ஆனின் மூலம் என்பது அரபியில் அருளப்பட்டது மாத்திரமே.

அரேபியத் தீபகற்பத்தில் அமைந்திருக்கும் மக்காவில் கி.பி. 570ம் வருடம் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். அவர் பிறப்பதற்கு முன்பேயே அவருடைய தந்தை இறந்து விட்டதாலும்; அதற்குப் பிறகு வெகு சீக்கிரத்திலேயே அவருடைய தாயார் இறந்து விட்டதாலும் அவர் கண்ணியமிக்க குரைஷிக் குலத்தை சேர்ந்த அவருடைய சிறிய தந்தையால் வளர்க்கப்பட்டார். அவர் எழுதவோ படிக்கவோ தெரியாத கல்வியறிவற்றவராகவே வளர்க்கப்பட்டார். அவர் இறக்கும் வரை அவ்வாறே இருந்தும் வந்தார். அவர் வளர்ந்து வரும் காலையில், அவர் உண்மையாளர் என்றும், நம்பிக்கைக்குரியவர் என்றும், கொடையாளி என்றும் தூய்மையான எண்ணங்களை உடையவர் என்றும் மக்களிடையே புகழ் பெற்றார். மக்கள் அவரை (-அல் அமீன்) நம்பிக்கையாளர்| என்று அழைக்கும் அளவிற்கு அவர் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் சிந்திக்கக் கூடியவராக இருந்தார்கள். அவர்கள் வெகு காலத்திற்கு முன்பேயே அவருடைய சமூகத்தின் வீழ்ச்சியையும் சிலை வணக்கத்தையும் வெறுத்து வந்தார். அவருடைய நாற்பதாம் வயதில் முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய முதல் வேத வெளிப்பாட்டை வானவர் ஜிப்ரயீல் மூலமாக அல்லாஹ்விடமிருந்து பெற்றார். இந்த வேத வெளிப்பாடு இருபத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்தது. அவைகள் மொத்தமாக திருக்குர்ஆன் என்று அறியப்படுகின்றது.

ஹதீஸ் எனப்படும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் இரண்டாம் வகையான வெளிப்பாடாக கருதப்படுகின்றது. ஆனாலும் இந்தப் பொன் மொழிகள் அல்லாஹ்வின் நேரடி வாக்காக கருதப்படுவதில்லை. அவர் திருக்குர்ஆனையும் அல்லாஹ்விடமிருந்து பெற்ற உண்மையையும் பிரச்சாரம் செய்த உடனேயே அவரும் அவரைப் பின்பற்றியோரும் நிராகரிப்பவர்களால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். கி.பி. 622ம் ஆண்டு இறைவன் அவர்களை நாடு துறந்து செல்ல கட்டளையிடும் அளவிற்கு இந்தச் சித்திரவரை கூடிக் கொண்டே போனது. மக்காவிலிருந்து வடக்கில் சுமார் 260 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மதினாவிற்கான இந்த நாடு துறப்பதிலிருந்துதான் முஸ்லிம்களின் வருடம் கணக்கிடப்படுகின்றது.

பல வருடங்களுக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் மக்காவிற்கு திரும்பி வரும் அளவிற்கு வலிமையாயினர். அவ்வாறு அவர் வந்தபோது அவர் தன் எதிரிகளை மன்னித்தார். முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய 63ம் வயதில் மரணமடையும் முன்பேயே அரேபியத் தீபகற்ப்பத்தின் பெரும்பாலான பகுதியிலுள்ள மக்கள் முஸ்லிம்களாகினர். அவர் மரணமாகி ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இஸ்லாம் மேற்கில் ஸ்பெயின் வரையிலும் கிழக்கில் சைனா வரையிலும் பரவியது.

இஸ்லாம் மிகவும் வேகமாகவும் அமைதியான முறையிலும் பரவியதற்கான காரணங்களில் அதனுடைய உண்மையும் தெளிவும் நிறைந்;;த கொள்கைளாகும். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ள ஒரே ஒரு இறைவனை மாத்திரம் நம்பிக்கை கொள்ள இஸ்லாம் அழைக்கின்றது.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நேர்மை, நீதி, கருணை, இரக்கம், சத்தியம், வீரம் ஆகியவற்றிற்கு முழுமையான முன் மாதியாகத் திகழ்ந்தார்கள். தீய குணங்களிலிருந்து மிகத் தூரத்தில் இருந்தார்கள். இறைவனிற்காகவும் மறுமையில் அவனிடமிருந்து பெறப்போகும் வெகுமதிக்காகவுமே அவர்கள் பாடுபட்டார்கள். அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் தொடர்புகளிலும் அவர்கள் இறைச் சிந்தனை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.
, ,