குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கண்களே ...கண்களே ...
கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு
வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்ம்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே . வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணேய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக்
கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

குழந்தைப்பருவம் முதல் கண்களை பாதுகாப்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டியது. மிகவும் அவசியம். கண்களின் நலனுக்கு அடிப்படையாக அமைவது வைட்டமின் ‘A’ சத்து ஆகும். எனவே குழந்தைப்பருவதிலேயே மற்ற நோய்களுக்கு வைத்தியம் செய்வதைப் போலவே உடலில் வைட்டமின் ‘A’ சத்து சேரும் வகையிலும் வைத்தியம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு தரும்பொழுது ஆரஞ்சு, தக்காளி போன்ற பழங்களின் சாறையும் கொடுக்கலாம். இப்பழச்சாற்றில் வைட்டமின் ‘A’ சத்து நிறைய உள்ளது
காரட் கிழங்கை சாறாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம், வளர்ந்த குழந்தைகளுக்கு காரட் கிழங்கை சுத்தம் செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளின் வயதைப்பொருத்து வைட்டமின் ‘A’ சொட்டு மருந்து, வைட்டமின் ‘A’ மாத்திரை, மற்றும் குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் ‘A’ ஊசி மருந்து கொடுக்கலாம்
குழந்தைககளுக்கு தாய்பாலூட்டும் தாய்மார்கள் மீன் எண்ணெய், மீன் உணவு, ஆகியவைகளை உணவுடன் சேர்த்துக்கொள்ளும் பொழுது தாய்பாலின் வழியாக வைட்டமின் ‘A’ குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பாக அமையும். ஒவ்வொரு பெற்றொரும் தங்கள் குழந்தைகளை முறையாக கண் மருத்துவரிடம் சிசு கண் பரிசோதனை, கண் அசைவு இவைகளை பரிசோதித்து எளிமையான முறையில் பார்வைக் குறைவு இருப்பின் சரிசெய்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு, தாய்பால் ஊட்டும் தய்மார்களுக்கும் உணவுடன் கீரை வகைகள் , சிகப்பு முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, சாத்துக்குடி, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி பழம், போன்றவைகளை நிறைய சேர்துக்கொள்ளுவது சிறப்பாகும்.
குறிப்பாக கீரைவகைகளில் குப்பைமேனிக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லிக்கீரை ஆகியவைகளை சூப்பாக தயாரித்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொடுக்கலாம். தொடர்ந்து வைட்டமின் ‘A’ நிறைந்த உணவுகளை பழங்களை கொடுக்கும்பொழுது வைட்டமின் ‘A’ ச்த்து குறைபாடு களைந்து நல்ல ஆரோக்கியமான பார்வை வாழ்நாள் முழுவதும் பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்பியூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்க்ளுக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம்.

கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்படலாம்
கண்களி வலி
கண் சிவத்தல்
கண்களில் நீர் வடிதல்
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி
கண்களில் எரிச்சல்
பார்வையில் குழப்பம்

 பிரச்சனைகள் ஏற்படக்காரணங்கள்

கண்களுக்கும் கம்பியூட்டர் திரைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் நெடுநேரம் திரையை பார்த்து கொண்டிருத்தல். 

நெடுநேரம் கண்களை இமைக்காமல் பார்வையை செலுத்துதல். 1 நிமிடத்திற்கு குறைந்த பட்சம் 18 முறை இமைக்காமல் மூடி திறக்க வேண்டும், அப்பொழுதுதான் கருவிழி ஈரமாக இருக்கும். மேலே கண்ட குறைபாடுகளில் இருந்து கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் 

கம்பியூட்டரின் திரைக்கும் நமது கண்களுக்கும் இடையிலான தூரம் 2(அ)3 அடி தூரம் இருக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை கண்பார்வை மாற்றி பிறகு தொடரலாம். 

அரை மணிக்கு ஒரு முறை மற்றும் மணிக்கு ஓரு முறை கண்ணிற்கு ஓரிரு நிமிடம் ஓய்வு கொடுப்பது நல்லது.
கண்களை அடிகடி மூடித்திறப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

சின்ன பயிற்சி 

ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தொலைவில் உள்ள ஒரு பொருளை பார்க்கவும், பேனா (அ) பென்சிலை கண்களுக்கு நேராக ஒரு கை தூரத்தில் உயர்த்தி பிடித்து அதன் முனையின் மீது நமது பார்வையை செலுத்துவும் மெதுவாக அதை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து இரட்டை உருவம் தெரியும் தூரத்தில் பொருளின் முனையை நிறுத்திக் கொள்ளவும் இப்பொழுது பேனாவின் நுனி மிகத் தெளிவாகத் தெரியும். குறைந்தபட்சம் 30 வினாடிகள் வரை பார்க்கலாம். மீண்டும் மெதுவாக பழைய இடத்திற்கே கொண்டு சென்று 30 வினாடிகள் பிறகு மறுபடியும் செய்யவும் இப்பயிற்சியை 10 முறை செய்து விட்டு மீண்டும் தூரத்தில் உள்ள பொருளின் முனையை பார்க்கவும் , காலையில் இந்த பயிற்சியை 5(அ) 10 நிமிடம் வரை செய்யலாம், ஆரம்பத்தில் இந்த பயிற்யை செய்யும்பொழுது சிறிது தலைவலி இருப்பது போல தோன்றினாலும் சில வாரங்கள் சென்ற பின் முழுநிவாரனம் கிடைக்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது கண்ணின் தசை நார்களுக்கு பலமும் உறுதியும் கிடைக்கும்.
EYE-Fi OPTICIAN-ஐ ஃபை ஆப்டிசியன்

, ,