குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

29.3.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கீரைகளின் அற்புதம்
                                                                        

வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை
அளிக்கும். வயிற்றுப் புண்கள்,
பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.





முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். தளர்ச்சியை போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை: மலச்சிக்களை குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.

அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

மணத்தக்காளி கீரை: வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்பால் பெருகும்.
, ,