இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

25/04/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங் களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. அல்குர்ஆன் 2 : 278
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 ”வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2 : 275
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 2 : 276
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 3 : 130
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவ தில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகை யோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
அல்குர்ஆன் 30 : 39
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டியை உண்பவரையும் உண்ணக்கொடுப்பவரையும் அதற்கு எழுத்தராக இருப்பவரையும் சாட்சியாக இருப்பவர்களையும் சபித்தார்கள். இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)
நூல் : முஸ்­ம் (2995)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அழித்தொழிக்கும் ஏழு பாவங்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள். அவை இணைவைப்பு. சூனியம் செய்தல். அல்லாஹ் தடை செய்த உயிரைக் கொலை செய்தல். வட்டியை உண்ணுவது. அனாதையின் பொருளை உண்ணுவது. ஒன்றும் அறியாத பத்தினிப் பெண்கள் மீது இட்டுக்கட்டுவது. போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர­)
நூல் : புகாரி (2767)
குலப்பெருமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறியாமைக்காலத்தில் உள்ள நான்கு விஷயங்கள் இருக்கிறது. அவை விடப்படாது. அவை குலப்பெருமை. வம்சாவழியில் குறை ஏற்படுத்துவது. நட்சத்திரங்களின் மூலம் மழை வேண்டுவது. ஒப்பாரி வைப்பது.
நூல் : முஸ்­ம் (1550)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் யாரும் எவரிடத்திலும் வரம்புகடக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள். யாரும் எவரிடத்திலும் பெருமை அடிக்க வேண்டாம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்துள்ளான்.
நூல் : அபூதாவுத் (4250)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறியாமைக் காலத்தில் இறந்துவிட்ட உங்கள் முன்னோர்களை வைத்துக்கொண்டு பெருமை அடிக்காதீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அந்த இறைவனின் மீதாணையாக தனது மூக்கால் மலத்தை உருட்டிச் செல்லும் வண்டு அறியாமைக் காலத்தில் இறந்து விட்ட உங்கள் முன்னோர்களை விட சிறந்ததாகும்.
நூல் : அஹ்மத் (2603)
பெண் பர்தாவைப் பேண வேண்டும்
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் (24 : 31)
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறுகிறார்கள்
இப்னு அப்பாஸ் (ர­) என்னிடம் சொர்க்கவாசியான ஒரு பெண்மனியை நான் உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் காட்டுங்கள் என்று சொன்னேன். அவர்கள் இந்த கருப்பு நிறப் பெண்மனி தான் அவர். இவர் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் வ­ப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். எனவே நான் அப்போது என் ஆடை திறந்துவிடுகிறது. எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ நினைத்தால் பொருமையாக இருக்கலாம். அதனால் உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்கு குணமளிக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மனி நான் பொறுமையாக இருந்துவிடுகிறேன். ஆனால் (வ­ப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது அப்படி திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புகாரி (5653)
அவர்கள் தங்கள் மார்புகள் மேல் தங்கள் துப்பட்டாக்களைப் போட்டு மறைத்துக்கொள்ளட்டும் (24 : 31) எனும் வசனம் இறங்கிய போது பெண்கள் தங்கள் கீழ் அங்கியின் ஒரத்தைக் கிழித்து அதனைத் துப்பட்டாவாக ஆக்கி மறைத்துக் கொண்டார்கள்.
நூல் : புகாரி (4759)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நரகவாசிகளில் இரண்டு கூட்டத்தினரை இன்னும் நான் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவர் யாரென்றால் அவர்களிடத்தில் மாட்டு வாலைப் போன்று சாட்டைகள் இருக்கும். அதை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தினர். இரண்டாவது வகையினர் ஆடை அணிந்தும் நிர்வாணிகளாக இருக்கும் பெண்கள். தலையை சாய்த்துக் கொண்டு தங்களை காண்பவர்களை வளைத்துப் போடுவார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். அதன் வாடையைக் கூட உணரமாட்டார்கள்.
முஸ்­ம் (3971)
அன்றைக்கும் இன்றைக்கும்
மார்க்க விஷயம் தொடர்பாக தன் பிள்ளைகள் விஷயத்தில் அன்றைக்கு பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள்
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு உயிரை தியாகம் செய்யும் தியாகியாக தன் பிள்ளையை நபித்தோழியர்கள் உருவாக்கினார்கள். உயிர் நீத்த தன் மகனின் மறுமை வாழ்வு எப்படி அமையும் என்ற கேள்விக்கு மகிழச்சிகரமான பதிலை கேட்காத வரை அவர்கள் நிம்மதியாக இருக்கவில்லை. பிள்ளைகளின் மறுமை வாழ்க்கைக்கு அழகான வழியை காட்டுவதை விட அக்கரையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது.
ஹாரிஸா பின் சுராகா (ர­) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹாரிஸாவைப்பற்றி எனக்கு தாங்கள் செய்தி அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ரு போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையை மேற்கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹாரிஸாவின் தாயே சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக்கொண்டார் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : 2809
நல்லகாரியம் தவறியதற்காக கவலைப்பட்டார்கள்
 (முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் ”உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை” என்று நீர் கூறிய போது, (நல் வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.
அல்குர்ஆன் (9 : 92)
தீமையை செய்வதற்கு அஞ்சியவர்கள்
மார்க்கம் தடைசெய்த விசயங்கள் நமக்கு தெளிவாக தெரிந்தும் கூட துணிச்சலாக எந்த விதமான இறைபயமும் இல்லாமல் அந்தக் காரியங்களை செய்துகொண்டிருக்கிறோம். பிறர் தடுக்கப்பட்ட காரியங்களை செய்வதற்கு அழைக்கும் போது அவர்களுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறோம். நாம் இந்தக் குற்றத்தை செய்வது போதாதென்று நல்ல நண்பர்களையும் இந்த காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். பின்வரும் சம்பவம் நாம் படிப்பினை பெற்று திருந்திக்கொள்வதற்கு சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப்பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ர­) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம் ஏன் விரைவாக அதைக் கழற்றிவிட்டீர்கள் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதை அணிய வேண்டாம் என ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார் என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ர­) அவர்கள் அழுதுகொண்டே வந்து அல்லாஹ்வின் தூதரே தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு இதை நான் தரவில்லை. இதை நீங்கள் விற்று (க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன் என்று சொன்னார்கள். எனவே அதை உமர் (ர­) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : முஸ்­ம் (4207)
நபி (ஸல்) அவர்கள் ஒரு விசயத்தை வெறுத்திருக்கும் போது அதை நாம் எப்படி செய்ய முடியும் என்று உமர் (ர­) அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அழுகை கூட வந்துவிடுகிறது. பல விசயங்களில் நபிவழிக்கு மாற்றமாக செயல்படும் நம் மக்கள் உமர் (ர­) அவர்களிடத்தில் படிப்பினை பெற வேண்டும்.
, ,