குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.6.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

எங்கிருந்தும் தகவல் நம் பிரிண்டருக்கு அனுப்ப
almighty-arrahim.blogspotcom
நமது கணிணியில் தகவல்களை அச்சிட கணிணியில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டரைப் பயன்படுத்துவோம்.
நாம் வெளியில் எங்கேயாவது செல்லும் போது நண்பரின் கணிணியில் அல்லது இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் படிக்கிறிர்கள். அதனை அச்சிட்டு எடுத்துக் கொண்டால் பயன்படும் என்று நினைப்பீர்கள். அங்கே பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால் அந்த தகவலை நீங்கள் மறந்து போகலாம்.
இதற்கென கூகிள் நிறுவனம் ஒரு அற்புதமான சேவையை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் பெயர் Google Cloud Print. முதலில் கிளவுட் அல்லது மேகக்கணிணி என்பது எந்தவொரு கணிணிப் பயன்பாட்டையும் இணையம் மூலம் பயன்படுத்துவது எனப்படும். நமது கோப்புகளை இணையத்தில் சேமித்துக் கொள்வது ஒரு கிளவுட் பயன்பாடாகும்.

இந்த வரிசையில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரிண்டரை ஒருமுறை இணையத்தில் இதற்கென இணைத்துவிட்டால் போதும். பின்னர் உலகில் எங்கிருந்தும் தகவல்களை நமது பிரிண்டருக்கு அனுப்பிவிடலாம். பிரிண்டர் மின்சார இணைப்பில் இருப்பின் அப்போதே அச்சிடப்பட்டு விடும். இல்லாவிட்டால் எப்போது ஆன் செய்கிறோமோ அப்போது அந்த தகவல்கள் அச்சிடப்படும். இந்தப் பயன்பாடு முதலில் ஆண்டிராய்டு மொபைல் பயன்பாடாக மட்டுமெ கொடுக்கப்பட்டது. இப்போது கூகிளின் குரோம் நீட்சியாக வழங்கப்படுகிறது. நீங்கள் மொபைலில் இருந்து கூட அச்சிட தகவலை அனுப்பலாம். இதில் doc, pdf, txt போன்ற பெயர்களில் முடியும் இணையமுகவரியைக் கொண்ட கோப்புகளை மட்டுமே அச்சிட முடியும்.
நமது பிரிண்டரை எப்படி Google Cloud Print இல் இணைப்பது?
1. குரோம் உலவியில் உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து கொள்ளவும். கீழே உள்ள சுட்டியில் சென்று உங்களிடம் இருக்கும் பிரிண்டரைத் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளவும். http://www.google.com/landing/cloudprint/win-enable.html


2. கீழே உள்ள சுட்டியில் சென்று குரோம் கிளவுட் பிரிண்ட் நீட்சியை Install என்பதைக் கிளிக் செய்து நிறுவிக் கொள்ளவும்.
https://chrome.google.com/extensions/detail/ffaifmgpcdjedlffbhenaloimajbdkfg?hl=en

3. பின்னர் இணையத்தில் நீங்கள் எதாவது ஆவணங்களைப் பார்க்கும் போது குரோம் உலவியின் மேல் வலது புறம் பிரிண்டர் குறும்படம் (Printer Icon) இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் அந்த ஆவணம் அச்சிட அனுப்பப் படும்.

நீங்கள் எத்தனை பிரிண்டரை வேண்டுமானாலும் இந்த சேவையில் இணைத்துக் கொள்ளலாம். பிரிண்டர்களை நிர்வாகம் செய்ய, தகவல்களை கேன்சல் செய்ய குரோம் உலவியின் Settings -> Options -> Under the Hood -> Google cloud Print என்பதில் சென்று பார்த்துக் கொள்ளலாம்

, ,