குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.10.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கூகுல் டிரைவ் பற்றிய குறிப்புகள்
almighty - arrahim
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.

இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

1. இணைய இணைப்பு இல்லாமல்:

கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.

இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.

குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை (https://chrome.google.com/web store/detail/googledrive/apdfllckaahabafndbhieahigkjlhalf) இன்ஸ்டால் செய்திடவும்.

அடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Offline” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.

2. உங்கள் ஹார்ட் ட்ரைவுடன் கூகுள் ட்ரைவ்:

இணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம்.

இதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம்.

இந்த வசதியினைப் பெற, https://tools.google.com/dlpage/drive என்ற தளத்தில் கிடைக்கும் புரோகிராமினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைக்க வேண்டும்.

இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றை, கம்ப்யூட்டர் + கூகுள் ட்ரைவ் இருவழிப் போக்குவரத்திற்கென தனியே அமைக்க வேண்டியதிருக்கும். இதனை மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் அமைக்கலாம்.

3. கூகுள் ட்ரைவ் டாகுமெண்ட் ஒருங்கிணைப்பு:

மேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல.

அந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது.

இதற்கான வழி ஒன்றுhttp://www.syncdocs.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளது. இங்கு, நம்முடைய கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டிற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் ஓர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் வேர்ட் டாகுமெண்ட் கூகுள் டாக்ஸ் பார்மட்டிலும், அவை நம் வேர்ட் பார்மட்டிலும் மாற்றிக் காணலாம்.

4. பைல்களை இழுத்துப் போட:

கூகுள் ட்ரைவிற்கு பைல் ஒன்றை வேகமாக மாற்ற வேண்டுமா? அப்லோட் கட்டளை என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு இழுத்து வந்து விட்டுவிடவும். ட்ரைவ் தானாக, அப்லோட் செயல்பாட்டினை மேற்கொண்டு, உங்கள் ஸ்டோரேஜ் பகுதியில், பைலை பதிந்து நிறுத்திவிடும். வேறு எந்த கூடுதல் வேலையும் மேற்கொள்ள வேண்டாம்.

5. படங்களை எளிதில் செருக:

கூகுள் டாக்ஸ் டாகுமெண்ட்டினை திருத்துகையில், திரையின் மேலாக உள்ள, அதன் கமாண்ட் பாரினைப் பயன்படுத்தி, எந்த ஒரு இமேஜையும் இடைச் செருகலாம்.

அதனைக் காட்டிலும் எளிதான வழி தேவை எனில், இமேஜை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே இழுத்து வந்து, கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவான டாகுமெண்ட்டில் விட்டுவிடலாம். உடனே, அங்கு இமேஜ் அளவினை மாற்றி அமைக்க டூல் ஒன்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தி, இமேஜை உங்கள் விருப்பப்படி சரி செய்திடலாம்.

therinjikko.blogspot.com
, ,