பதிவுகளில் தேர்வானவை
12.12.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
தலைமுடி அடர்த்தியாக வேண்டுமா?
பெண்கள், ஆண்கள் அனைவருக்குமே தலைமுடி அடர்த்தியாக,நீளமாக, கருமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் இன்றோ முறையான உணவு பழக்கம் இல்லாததும், கண்ட கண்ட ரசாயனம் கலந்த பொருட்களும் முடியை பாழாக்கிவிடுகின்றன.
இதற்காக என்னதான் செயற்கை முறைகளை பின்பற்றினாலும், இயற்கையான மருந்துகள் மற்றும் யோகாவின் மூலம் நீளமான முடியை பெறலாம்.
சிரசாசனம் (Sirasasanam)
இந்த ஆசனத்தில் ஒட்டுமொத்த உடல் எடையையும் தலையில் சமநிலை படுத்த
வேண்டும், கையின் உதவி மூலம் தலையை கீழே தரையில் ஊன்றி நேராக நிற்க வேண்டும்.
இவ்வாறு தலைகீழாக நிற்பதால் தலைக்கு இரத்தம் சீராக சென்று தலைமுடிகளுக்கு ஊட்டம் அளிக்கும், அதுமட்டுமின்றி உடலுக்கு வலுவையும் தருகிறது.
சர்வங்காசனம் (Sarvangasana)
தரையில் படுத்து கொண்டு, பின்னர் முதுகில் உடல் எடையை சமநிலைப்படுத்தி, கால்களை வானத்தை நோக்கி தூக்கி நிறுத்த வேண்டும்.
இதன் மூலம் தலைக்கு இரத்தம் ஓட்டம் அதிகரித்து முடி வளர செய்யும், மேலும்
முடி கொட்டுவதையும் நிறுத்தும், தைராய்டு குறைபாட்டையும் நீக்கி நன்றாக சுவாசிக்க உதவுகிறது
உஷ்ட்ராசனம்(Ushtrasanam)
இது மற்ற இரண்டை விட மிகவும் எளிதானது. முழங்கால் இட்டு முதுகை பின்புறம் வளைத்து, கைகளை குதிகாலில் தொட வேண்டும்.
இந்த நிலையில் மூச்சை இழுத்து நன்றாக சுவாசிக்க வேண்டும், முடி கொட்டும்
பிரச்னை உள்ளவர்கள் இதனை செய்யலாம், முதுகுவலியால் அவதிப்படும் நபர்கள் இதனை தவிர்க்கவும்.
குறிப்பு: (ஆசனங்கள் ஆண், பெண் இருபாலருக்கும்) மூளை, கண், காது, மூக்கு, வாய் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான உயர் சத்துக்கள் தடையின்றி இரத்த ஓட்டத்தின் மூலம் பெறப்படுவதால் சீராகவும், சிறப்பாகவும் இயங்குகிறது. அதனால் அதை சார்ந்த நோய்களும் குணமடைகிறது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான நல்லதொரு சாதனமாக இந்த ஆசனம் உதவுகிறது. மூளை செயல்களிலுள்ள மூளை நரம்புகளில் தங்கியுள்ள நச்சுக்களை துரிதமாக வெளியேற்றுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீர்படுகிறது.மூக்கில் வாசனையை உணரும் சக்தி இழந்தவர்களுக்கு வாசனை உணரும் சக்தியை மீட்டு தருகிறது. தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். இரத்தம் சுத்தமடைகிறது. ஆதலால் ஞாபக சக்தி மன ஒருமைப்பாடு ஆகியவை அதிகரிக்கிறது. முகப்பொலிவு, நல்ல குரல் வளம் ஆகியவற்றை ஏற்படுத்க்துகிறது.