இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

19/03/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பர்மாவில் இஸ்லாமியர்கள்
almighty-arrahim.blogspot.com
almighty-arrahim
மதச் சிறுபான்மையினர் உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து தாக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. ரொஹின்யா இஸ்லாமியர்கள் பர்மாவில்
தாக்கப்பட்டு வருவது குறித்து ஏராளமான செய்திகள் கடந்த ஒராண்டுக்கு மேல் வெளிவந்தவண்னம் உள்ளது.

ஐநா சபை உலகின் மிக வரிய சிறுபான்மையினர் என ரொஹின்யா இஸ்லாமியர்களை வரையறுக்கிறது. பர்மாவின் ஜனத்தொகையில் 5% பேர் இஸ்லாமியர்கள், அவர்கள் அங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகிறார்கள். எண்ணிக்கையில் 30 லட்சம் மட்டுமே உள்ள ரொஹின்யா இஸ்லாமியர்கள் அரக்கன் மாகாணத்தின் ராகைன் பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களை ஒரு புறம் வங்கக் கடல் சூழ்ந்துள்ளது என்றால் மறுபுறம் பெரும்பான்மை தெர்வாடா பவுத்தர்கள் மற்றும் ஹிந்துக்கள் உள்ளனர்.ராகைன் பகுதியின் மேற்கே வங்கதேசத்தின் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. ரொஹின்யா மொழி பேசுவதால் அவர்கள் அவ்வாறு அழைக்கபடுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்து ரொஹின்யா இஸ்லாமியர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1942 மார்ச் 28 அன்று மின்பயா மற்றும் ம்ரோஹாவும் நகரங்களில் ராகைன் தேசியவாதிகளால் 5000 ரொஹின்யா இஸ்லாமியர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.பர்மா அரசும் இவர்களின் மீது பெரும் தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்தது. பர்மாவை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த பொழுதும் ஜப்பானிய படைகள் ரொஹின்யாக்கள் மீது கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்டார்கள்.


ஐநா சபையின் அகதிகளுக்கான பிரத்யேக அமைப்பு ரொஹின்யா இஸ்லாமியர்களின் நிலை குறித்த பல்வேறு ஆய்வுகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. நூற்றாண்டுகளாக அந்த நிலத்தில் வாழும் இவர்களுக்கு இன்னும் குடியுரிமையை அந்த நாடு வழங்கவில்லை என்பதை ஐநா பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளது. 1982ல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால சட்டம் இவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துவிட்டது. குடியுரிமை கிடைக்காததால் அவர்கள் அந்த நாட்டின் இரண்டாம் பிரஜைகளாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களால் பர்மாவில் சுதந்திரமாக நடமாட இயலாது, கல்வி பெற இயலாது, நிலம் வாங்க இயலாது, பலாத்காரம், கொலைகள், சித்திரவதை, இனப்படுகொலை என்பதாக அவர்களின் துயரச்சூழலை சொல்லில் விவரிக்க இயலாது.

பர்மா அரசும் ரொஹின்யா இஸ்லாமியர்களை ராணுவ முகாம்களிலும், நாடெங்கும் சாலைகள் போடவும் கொத்தடிமைகளாகவே பாவித்து வருகிறது. இந்த திட்டங்களில் ரொஹின்யா இஸ்லாமியர்கள் சம்பளம் பெறாமல் கட்டாயக் கூலிகளாக வேலை செய்ய வேண்டும்.

இப்படியான நெருக்கடியில் கடந்த காலங்களில் மூன்று லட்சம் பேர் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர், 24 ஆயிரம் பேர் மலேசியாவிற்கு அகதிகளாக சென்றுள்ளனர், இதே போல் 1,10,000 பேர் தாய்லாந்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். வங்கதேசமும், தாய்லாந்தும் அவர்களை இனி அகதிகளாக ஏற்பதில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர், ஏற்கனவே வந்தவர்களை திருப்பி அனுப்பும் பேச்சு வார்த்தையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்திற்கு சென்ற பல படகுகளை அகதிகளுடன் நடுக்கடலில் மூழ்கடித்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதே போல் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து தலைநகர் தில்லியின் பல சேரிகளில் ரொஹின்யா இஸ்லாமியர்கள் கூலித் தொழிலாளர்களாக வசித்து வருகிறார்கள்.

பர்மாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, அங்கு ராணுவத்தின் பிடி தளர்ந்து ஜனநாயகம் துளிர்விட தொடங்கிவிட்டது என்று மகிழ்ச்சியான செய்திகள் வந்தாலும், உண்மை அவ்வாறாக இல்லை, பர்மா இப்பொழுதும் ஒரு பெரும் குழப்பத்தின் குறியீடாகவே திகழ்கிறது.ஆன் சான் சுயியும் அவரது சில ஆயிரம் தொண்டர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் இருப்பினும் சமூக வாழ்வில் ராணுவத்தின் பிடி அங்கு இன்னும் தளரவேயில்லை. பவுத்தர்களின் மேலாதிக்கத்தின் கீழ் கொத்தடிமைகளாகவே அவர்கள் தங்களின் வாழ்வை போக்கி வருகிறார்கள்.

இன்றும் நீங்கள் பர்மாவில் மின்னஞ்சலை அரசியலுக்காக பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு 15 ஆண்டு சிறைவாசம் காத்திருக்கிறது, அதிலும் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்ஞல் கணக்குகள் வைத்திருந்தால் ஒரு மின்னஞ்ஞலுக்கு 15 ஆண்டுகள் தண்டனை கூடிக் கொண்டே போகும். பவுத்த இனவெறியின் வன்முறையை பற்றி அங்கு யாரும் வெளிப்படையாக எழுதவோ பேசவோ இயலாது, அப்படி எழுதப்படும் வெளிநாட்டு சஞ்சிகைகளுக்கு கூட நாட்டிற்குள் அனுமதியில்லை, அந்த அளவிற்கு தணிக்கை ਍ഀ நிறைந்த சமூகமாகவே பர்மா திகழ்கிறது.

கடந்த 2012 ஜுன் - ஜுலை மாதங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஒரு வதந்தியே காரணம். ஒரு ராகைன் பவுத்த பெண்ணை ரொஹின்யா பையன் பலாத்காரம் செய்து விட்டான் என்பது தான் அந்த வதந்தி. அந்த இஸ்லாமிய பையன் கொலை செய்யப்பட்டான், அவனுக்கு உறுதுணையாக இருந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட உள்ளது. இது மட்டும் இல்லாமல் 650 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், 1200 பேர் காணாமல் போனார்கள், 1,20,000 பேரின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு அவர்கள் வெட்ட வெளிகளில் வீடுகள் இழந்தவர்களாக சில தினங்களில் மாற்றப்பட்டார்கள். ஜூன் 2012 ல் ராகைன் பகுதியையே நெருக்கடி நிலையை அரசு அறிவிக்கும் அளவிற்கு கலவரங்கள் கட்டுப்பாட்டை இழந்தது.


ரொஹின்யா இஸ்லாமியர்களின் மீது கொலைவெறி தாக்குதல் தொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ரொஹின்யா இஸ்லாமியர்களுக்கு உடன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் மற்றும் வன்மம் நிறைந்த பிரச்சாரஙகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் உலகம் முழுவதும் உள்ள பர்மாவின் தூதரகங்கள் முன்பு பல மனித உரிமை அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினார்கள். இத்தனை பெரும் இனப்படுகொலைக்கு਍ഀ இன்று வரை மேற்குலக நாடுகள் மற்றும் ஊடகங்கள் பெரிதாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்பது வருத்ததிற்குரியது.

பிரித்தானியர்கள் ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் அவர்கள் பிரிவினையின் விதைகளை தூவிச் சென்றார்கள், பல ஆசிய நாடுகளில் உள்ள மதவெறி சக்திகள் அந்த விதைகளை பெரும் கலவர விருட்சங்களாக தொடர் மதக்கலவரங்களாக வளர்த்து வருகிறார்கள். இரு தினங்கள் முன்பு காந்தி ஜெயந்தி அன்று கூட பர்மாவில் ஒரு 94 வயது மூதாட்டியை கொன்று, 70 வீடுகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது, இது மீண்டும் அந்த பகுதியை பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

பர்மாவின் அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சி அங்கு தடையில்லாமல் நடைபெற பர்மிய தேசியவெறி மற்றும் தேர்வாடா பவுத்தம் தான் அஸ்திவாரமாக திகழ்ந்தது. பர்மாவின் பவுத்த அரசு இந்த தேசிய வெறியை வளர்த்து அதில் தங்களின் சுயநலத்தை அறுவடை ਍ഀ செய்து வருகிறது. ஆட்சி மாற்றத்தால் ராணுவத்தின் உடை மட்டுமே மாறியுள்ளது என்பது தான் அங்குள்ள அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. பர்மா மீண்டும் ஒரு முழு ராணுவ ஆட்சியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்காவும் - பிரிட்டனும் அதையே விரும்புகின்றன.

http://www.amuthukrishnan.com
, ,