குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

15.5.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கைபேசி மூலம் கணினியை இயக்க
இன்டர்நெட் பயன்படுத்தும்
almighy-arrahim.blogspot.com
அனைவருக்கும் 'டீம் வியூவர்'(Team Viewer) மென்பொருள் பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கலாம். பெரும்பாலனோர் இதைத் தங்கள்
கணனியில்
பயன்படுத்தி இருக்கலாம்.  இதை உங்கள் அன்ட்ராய்ட் போனுக்கும் பயன்படுத்த முடியும். 'டீம் வியூவர்' நிறுவனம் அன்ட்ராய்ட் மொபைலுக்கு ஒரு அப்ளிகேஷன் தயாரித்து கூகிள் பிளே ஸ்டோரில் சேர்த்து இருக்கிறது. இந்த ஆப்ஸ் மூலம் உங்கள் கணினியை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த ஆப்ஸ் அப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்ட் கைபேசி வழியே தொடர்பு ஐ.ஒ.ஸ் பயன்பாட்டில் உள்ள ஐபோன், ஐபாட் போன்றவற்றிலும் இது இயங்கும். எனவே இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் ஐ.ஒ.ஸ் அப்பிள் சாதனம் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படும். இதனால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியைத் தொடர்பு ஏற்படுத்தி மொபைலில் இருந்துக்கொண்டே கணினியில் வேலைகளை செய்யலாம். ஆனால் இந்த மொபைல் டீம்வியூவரில் ஒரு சில வேலைகளை செய்யமுடியாது.

குறிப்பாக பைல்களை அனுப்ப (File Transfer) முடியாது. விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயக்க முடியும். கீபோர்டை எளிதாக பயன்படுத்தும் முறையில் இருப்பதால் சிறப்பான ஆப்ஸ் என்றே சொல்லலாம். முதலில் உங்கள் கணினியில் அண்மையில் வெளிவந்த டீம்வியூவர் (Team Viewer Latest edtion) தரவிறக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த டீம்வியூவர் அப்ஸ் அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

கணினியில் தரவிறக்கம் செய்து முடித்தபின் கணினியில் நிறுவுங்கள். அடுத்து உங்கள் மொபைல் மூலம் இந்த பதிவின் கீழே உள்ளே கூகிள் பிளே விட்கெட்டில் இருந்து புதிய டீம்வீவர் ஆப்ஸ் தரவிறக்கிக்கொள்ளுங்கள். ஆப்ஸ் தரவிறக்கி தானாகவே நிறுவிக்கொள்ளும். பின்னர் கணினியிலும் மொபைலிலும் டீம்வீவரை திறந்துக்கொண்டு கணினியில் உள்ள ஐடி மற்றும் கடவுச்சொல்லை மொபைலில் அடித்து கனெக்ட் செய்தால் சிறிது நேரத்தில் இணைப்பு கிடைக்கும். இனி நீங்கள் மொபைலில் இருந்துக்கொண்டு கணினியில் செயற்பாடுகளை கவனிக்கலாம், முடிந்தளவுக்கு அனைத்தும் செய்யலாம்.


, ,