குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

10.10.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பச்சை பயறு - கொலஸ்ட்ரால் குறைய
Green-lentils
நாம் தினசரி உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பது என்பது அவசியமானது.

அத்தகைய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது தான் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றிக்கு கிடைத்ததை உட்கொள்ளலாம் எனும் போது உடநலப் பிரச்சனைகள எட்டி பார்க்க தொடங்குகிறது.

தற்போதைய சூழ்நிலையில் சரியான ஆலோசனை, மாறிவரும் சமூகத்தால் போதிய நேரமின்மை ஆகியவை உண்ணும் உணவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு என்பது கேள்விக் குறியாகி விடுகிறது.

இத்தகைய சுழலில் நாம் தினசரி சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அதிலும் பச்சை பயறு உடல்நல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பச்சை பயற்றின் நன்மைகள்:-

1) ஒரு பவுல் வேக வைத்த பச்சை பயறில் 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது. இவை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

2) பச்சை பயறு, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் உதவுகிறது. பச்சை பயறு நீண்ட நேரம், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது.

3) பச்சை பயறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் சப்பாத்தி சாப்பிடும் போது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

4) சரும புற்றுநோயில் இருந்து பச்சை பயறு பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் சுற்றுவோர், பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.

5) ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

6) அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளும் போது உடலில் இரும்புசத்து கூடும்.
, ,