குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.4.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -21
almighty-arrahim.blogspot.com
யூகத்தின் அடிப்படையில் ஒரு மனிதன் இயங்குவது, மற்றவர்களின் வாழ்க்கைக்குள் பிரச்சினையை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.
இது தொழிலுக்கும் உதவாது,குடும்பத்திற்கும் உதவாது. அதனால் தான் "ஜென்' தத்துவங்களில் LIVE IN PRESENT என்ற பயிற்சியே உண்டு.


நாம் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளில் வாழ்கிறோம்,இல்லையென்றால் எதிர்கால நினைவுகளில் வாழ்கிறோம். இதனாலேயே We Forget to Live. மனிதர்களைப் பற்றி நமக்குள் இருக்கும் யூகம் நாமாகவே ஒரு முடிவுடன் அவர்களைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது யூகம் சமயங்களில் தொழிலும்,குடும்பத்திலும் தவறான முடிவு எடுக்கவே காரணமாகிவிடுகிறது. எந்த மனிதனும் தான் நல்லவன் என்றுதான் நினைப்பான்.. மற்றவன் மட்டும்??


சில இன மக்களைப் பற்றி சில கமென்ட்ஸ் நிறந்தறமாக இருப்பதற்கான காரணம் " யூகம்" தான்.


விற்பனைத் துறையில் யூகத்துடன் அனுகுவதை தவறாகவே சொல்லப்படுகிறது.


குடும்பத்தில், தொழிலில் சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் இளையவர்கள் உங்களை பார்த்தவுடன் 'நடிக்க ஆரம்பிக்கலாம்... வாய்ப்பு கிடைத்தால் உங்களின் கண்ணில் படாமல் கம்பி நீட்ட அவர்களுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? . உங்கள் வயதும் அனுபவமும் எப்போதும் விரும்பிக் கேட்கும் விசயமாக இருக்க நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வாங்க , வாங்க என்று கூப்பிட்டு மனதுக்குள் ' என் நேரம் சரியில்லை இன்னிக்கு இவன் கிட்டே மாட்டிக்கிட்டேன்" என்று வாய்க்குள் முனங்குவது மாதிரிநாம் அட்வைஸ் மழை பொழிவதால் எந்த பயனும் இல்லை.


பெரும்பாலான சமயங்களில் நம்முடைய கருத்தை மற்றவர்களிடம் திணிக்க நினைக்கும் ஆட்களின் ரேடியசில் எந்த உயிரினமும் அன்டாது. எதற்கெடுத்தாலும் விவாதம்,எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்று வாழும் மனிதர்கள் "தொடர்ந்து தீர்ப்புவழங்கும் மெசின்" மாதிரி மதிக்கப்படுவார்கள். தொடர்ந்து தீர்ப்பு வழங்குபவர்கள் உண்மையை விட்டு விழகி வாழக்கூடும். இவர்களிடம் காது கொடுத்து கேட்கும் மிகப்பெரிய பலம் இருக்காது. தொழிலில் இருப்பவர்கள் இப்படி இருந்தால்நான் இங்கிருந்தே அவர்களின்'நஷ்ட கணக்கை" எந்த விதமான கேபிளும் இல்லாமல் பார்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் இளையவர்களாக இருந்தால் நிறைய எதிரியையும் ,பெரியவர்களாக இருந்தால் நிறைய வெறுப்பையும் சம்பாதித்தவர்களாக இருப்பார்கள்.


வாழ்க்கையில் நடுவயதை / ரிட்டயர்மன்ட் வயதை நெருங்கும்போது ஒரு insecure Feeling இருக்கும். இறைவன் மீது மனிதனின் நம்பிக்கை குறையும் போதெல்லாம் இதன் மீட்டர் முள்“FULL” காண்பிக்கும். நாம் நல்ல நேரத்தையெல்லாம் தவற விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருக்கும். அனைத்தும் 100 %மாயை. இந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு வளர்த்துவிட்டால் தரித்திரம் டெனன்ட் அக்ரீமன்ட் போடாமல் உங்களுக்குள் குடிவந்து ரேசன் கார்டுக்கு அப்ளை செய்துவிடும்.


வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த சூழல் பெரும்பாலும் கிடையாது... நம்பிக்கை இழந்த மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.


ஒரு தனிமனிதன் பொருளாதார சூழல்களால் முடக்கப்படும் போதுதான் அவன் முன்னேற வேண்டும் என நினைக்கிறான். இன்றைக்கு வாழ்க்கையில் பணக்காரர்கள் ஆன எல்லோருடைய வாழ்க்கை வரலாற்றிலும் இந்த உண்மை இருக்கிறது. மற்றும் உழைத்து முன்னேறியவர்களின் வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி நிச்சயம்தான். நீங்கள் உழைக்க சோம்பேறித்தனப்படாத மனிதராக இருந்தால் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு வரும் கஷ்டம் எல்லாம் ஒரு மலைபோல் தெரிந்தாலும் உடனே விலகி விடும்.


வேசம் போடாமல் எதையும் எதிர்கொள்ளலாம்.


ஒரு மனிதனின் வெற்றியை தூரமாக்குவது அவன் இதுவரை போடும் வேசம்தான். அது சரி நாம் என்ன நாடகத்திலா நடிக்கிறோம் வேசம் போடுவதற்கு என்று நினைக்க வேண்டாம்.


தெரிந்தோ தெரியாமலோ நாம் வளரும் சூழலில் நாம் இப்படித்தான் என்று சில விசயங்கள் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். அதில் சில :
நான் இந்த இனம்,இதனால் இவனிடம் உதவி கேட்க முடியாது.
நான் இந்த குடும்பம் அதனால் இவனிடம் பேச மாட்டேன்.
நான் இந்த மதம், அதனால் அடுத்த மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் என்னுடன் பழக முடியாது.
இது கடைசியில் எங்கே கொண்டு போய் விடும். குடும்பம் கஸ்டத்தில் இருக்கும்போது கூட கெளரவம் பார்த்து கெளரவம் பார்த்து வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டி விட்டு பின்னாலில் தன்னை நம்பியிருக்கும் மனைவி,பிள்ளைகளையும் கஷ்டத்தில் நிறுத்தி இருக்கவே இருக்கிறான் இறைவன், இவனுடைய போலிவேசத்தால் வந்த வினைக்கு குற்றம் சாட்ட.


உங்களுக்கு இறைவனின் கருணை கிடைக்குமா? அனைத்தும் அறிந்த இறைவன் தான் பதில் சொல்ல முடியும். தனக்கு தானாகவே உதவிக்கொள்ள முடியாதவன் மற்றவர்களின் கஷ்டத்தில் மனமுவந்து உதவி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான்.


உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தூக்கி நிறுத்த சிரமப்பட்டால் மற்ற குடும்பத்தை தூக்கி நிறுத்த வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம். கேட்பவர்கள்உங்களை ஈசியாக சந்தேகப்படுவார்கள்.


ஆக முன்னரே பயிற்சிகளில் ஒன்று உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் வேசம் என்ன என்பதை கண்டுபிடிப்பது.


ஒட்டிக்கொண்டிருக்கும் வேஷத்தை வைத்தே கோபமும் ஒரு ஊற்றுபோல் வந்து கொண்டிருக்கிறது, எப்போதும் வற்றாமல்.


கோபத்தின் தாக்கம் உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் பணம் சம்பாதிப்பதில், மாணவப் பருவத்தில் இருந்தால் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் மனிதனாக மாறலாம்.


கோபம் மற்றவர்கள் மீது திரும்பும்போது அது உங்களுக்கு பெரும்பாலும் நஷ்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும். சிலர் சின்ன வயதிலிருந்து தனக்குள் போட்டுக்கொண்ட சிறைக்குள்ளேயே வாழ்ந்து விட்டு அதன் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் போது தன் சிறைக்கு பக்கத்திலேயே இவ்வளவு பெரிய பரந்த உலகம் குதூகலத்தோடு இயங்குகின்றது என்பதை தனது வயதான காலத்தில்தான் தெரிந்து கொள்கிறார்கள். காலக் கடிகாரத்தை மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஓட வைக்க முடியுமா?.


அதனால்தான் சொல்கிறேன் நாம் போட்டுக் கொண்டிருக்கும் வேஷமும் வெறுப்பும் வாழ்க்கையை சிதைத்து விட வேண்டாம். ரோஜா மலர்களை நிலக்கரித் தீயில் எரிப்பது போன்ற உணர்வுதான் எனக்கு வருகிறது. மீண்டும் சொல்ல வேண்டுமென்றால் Do Not Forget to Live.


சில சமயங்களில் நாம் போட்டிருக்கும் வேஷம் நம் ஈகோவை சந்தோசிக்க வைக்கலாம், அவை அனைத்தும் போலி.


மரணமும், நோயும் , வறுமையும் சுத்தமாக ஈகோவை வடித்து எடுத்துவிடும்.


அந்த தருணங்களில் உங்களுக்கு அன்பு தேவை , அப்போது ஏற்கனவே ஈகோ பார்த்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் உங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் உடைந்து போகலாம்.


முன்னாடியே நம் வேசம் எது என்று தெரிந்து விட்டால் ஈகோ தலை தூக்க வாய்ப்பு இல்லை. மனிதர்களும் உங்களிடம் சேர்ந்து அன்பு செலுத்த முடியும்.


இதை தொழில், குடும்பம், நட்பு எதில் வேண்டுமானாலும் பொறுத்தி பார்த்து கொள்ளுங்கள். ரூல்ஸ் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான்.


மனிதனுக்குள் பில்ட்-இன் ஆக இருக்கும் இன்டலிஜென்ட்சி எப்போதும் மாற்றத்தை நோக்கி பயணித்து இருக்கும். இதற்கு துணையாக சுற்றுப்புற சூழல்கள் இருந்தாலும் அப்படி ஒரு சூழல் இல்லாத போது தானாகவே இயங்க ஆரம்பிக்கும். இதனால்தான் புதிய கண்டுபிடிப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதற்கு வயது ஒரு தடை இல்லை.


சிலர் உழைப்பையும் , வயதையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதும் உண்டு.


இனிமேல் நம்ம காலம் முடிஞ்சிடுச்சி... இனிமேல் போன வயது திரும்பி வராது என்ற விரக்தியில் இத்தனை நாள் தான் சேர்த்த இன்டலிஜென்ட்சியை தூர தூக்கி போட்டு விடுவார்கள்.


இன்றைக்கு நகர்ப்புரங்களை ஒட்டி உருவான பல நகர்கள் ஒரு சில மனிதர்களின் இன்டலிஜென்ட்சில் உருவானது. பொட்டலாக கிடக்கும் நிலங்களை மனிதர்கள் வாழ நகர்களாக உருவாக்குவதன் நோக்கம் “Land Banking “வெளிநாடுகளை பொறுத்தவரைமிகப்பெரிய பிஸினஸ். இதை முதலீட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கில் “Land Banking Investments”என்று கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறது.


உழைப்பு என்றால் மண் வெட்டியை கையில் பிடித்து, மண்ணை சட்டியில் அள்ளி, மண்ணை தலையில் சுமந்து மாலையில் வரிசையில் நின்று கூலி வாங்குவது என்று நாம் தவறாக நமது மைன்டை ஃபார்மேட் செய்திருக்கிறோம்.


Hard work some time do not pay!! Some time SMART WORK also pay !!


கடின உழைப்பில் மட்டும்தான் வருமானம் என்றால் உயர்ந்த கட்டிடங்களில் நின்று சிமென்ட் பூசும் கூலித் தொழிலாளியை விட கீழே நின்று சேஃப்டி தொப்பி போட்டு டை கட்டி சில பெரிய தாள்களை பார்க்கும் Engineer க்கு ஏன் அதிக வருமானம்??


ZAKIR HUSSAIN

நன்றி அதிரை நிருபர்
, ,