இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

08/04/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நட்பு, அதுக்கும் மேலே...
Pigeon
கடந்து போன
ஒரு புனிதநாளில்
இவனை நான்
கண்டெடுத்தேன்
இந்த
சந்தணக் கணற்றின் வாசனை

அன்று தான் எனக்கு
எட்டியது போலும்

இவன்
இதயத்தின் மூலம்
நான் சுவாசித்த
அந்த விலாக் காலங்கள்
அவற்றின் சுவடுகளை
ஆங்காங்கே விட்டுவிட்டு
மறைந்து விட்டன, ஆயினும்
இவன் கண்களில், அந்த
கடந்த காலங்களின்
காலடிச் சுவடுகளை, காணும் போது
 நான் பிரகாசமாகிறேன்

அவன் முன் விரிந்திருக்கும்
கரடு முரடான பாதையை சரி செய்யாமல்
என் பாதையில்
மலர் விரித்து
அதை கண்கானிப்பது
அவன் வேலைகளில் ஒன்று...
இதனால் தான்
என் உயிரில்
ஒரு பங்கை
அவனுக்கு உயிலெழுதிட்டேன்

உன் முன்னுள்ள முட்களை
உன்னாலேயே விலக்கிக் கொள்ள
உனக்கே இயலும்
அதனால்,
உன் பின்னால் இருந்து
உன்னை பிடித்து தள்ள முயலும்
வெறிபிடித்த கைகளுடன்
போராடுவதிலேயே நான்
சுகம் காண்கிறேன்

என்னில் இவனை
நீங்கள் தேட வேண்டியதில்லை
இன்னும் சற்று
நெருக்கமாக வந்து பாருங்கள்...
ஆம்...
இந்த கண்களில் தான்
இவனை நான்
பாதுகாத்து வருகிறேன்
எனவே தான்
இவன் நெஞ்சை யாராவது
கிள்ளினால்
என்
கண்கள் கலங்குகின்றன

இவனும் ஜாகிரை போலவே
என் பாதங்களில்
முள் பட விடமாட்டான்
ஆகவே தான்
நான்
இவர்களின் பாதங்கள் கொண்டே
நடக்கிறேன் நிதானமாக

அன்றைைய
சூரிய உதயங்களில் கிடைத்த
சந்தோஷங்கள்
இன்றைய
வெள்ளிக் கிழமைகளில்
கிடைக்கின்றன-அவை
ரியா எனும்
நந்தவனத்தை
கொண்டு வருவதால்
சவுதியின் பாலைவனங்கள்
ரியா வந்த பிறகும்
குளிரவில்லையே
என்பதில் எனக்கு
இந்த ஆச்சரியம் உண்டு

புனிதம்...
இவன் பார்வையிலும்
நேர்மை. .
இவன் நெஞ்சிலும் தான்
குடிலமைத்துள்ளன.

இன்று
திருமணமாகிவிட்ட
இந்ந குழந்தை
கண்களில் கனவுகளைத்
தேக்கி கொண்டு
தள்ளாடி தத்தளிகையில்,தீர்வு
வழியறியாமல்
நெஞ்சில் சேர்த்த பாரத்தை
கண்ணீர் நதிகளில்
கரைக்க முயலுக்றேன்- தனியே

இந்த
வெள்ளை மனதில்
குடிவந்திருக்கும்
புதிய உறவு
அந்த
கனவு ஓடங்களை
கரை சேர்க்கட்டும்

    - 'இளங்கவி' சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
, ,