பதிவுகளில் தேர்வானவை
7.4.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஜாகிரின் படிக்கட்டுகள் -20
சேமிப்பின் அவசியம்.
சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல்
படுத்தாமல் போவதற்க்கு ஒரு டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.
சேமிப்பின் முதல் விதி:
வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.
Income – Savings > expenses.
ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.
Income – Expenses > Savings.
பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.
தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும்,உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.
Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான், இருப்பினும் சென்டிமென்ட்,அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.
Emergency Fund :
உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்துகொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.
எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.
Emergency Medical Fund
இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.
இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள், பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.
இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம்“பணம்”.
Retirement Fund:
சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு 3 ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது 3 வது மகனும் நல்லபடியாக படிப்பதால் ' உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். ' அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம், அவனுக்கென்று வாகனம், வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்' ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் , இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.
இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.
Child Education Fund
இது 1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள் பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.
இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.
பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல்பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.
எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.
இதற்கும் நான் முன்பு சொன்ன Visualization Technique உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.
சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது,அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும் [கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும் சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம். அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்