பதிவுகளில் தேர்வானவை
1.4.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
கொழுப்பு நல்லதே
கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. இந்த கொலஸ்ட்ரால் வேறுபாட்டை எப்படி அறிவது?
ரத்தக் கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன.
உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
`நல்ல’ - `கெட்ட’ கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன.
அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் ஹெச்.டி.எல்.): அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகைக் கொலஸ்ட்ரால் குறைக்கிறது.
குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (லோ டென்சிடி லிபோபுரோட்டீன் எல்.டி.எல்.): குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
ரத்த மிகைக் கொழுப்பு ஏன்?
பல குடும்பங்களில் ரத்த மிகைக் கொழுப்பு காணப்படலாம். ஆனால், பெரும்பாலும் ரத்த மிகைக் கொழுப்புக்குக் காரணம், ஆரோக்கியமற்ற உணவும் உடலியக்கச் செயல்பாடு இல்லாமையுமே. அறிகுறிகளையோ எச்சரிக்கை சமிக்ஞைகளையோ ரத்த மிகைக் கொழுப்பு அரிதாகவே வெளிப்படுத்துகிறது.
ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். இவை பொதுவாகக் குமிழி போல இருக்கும். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.
சிலவேளை ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு போன்ற கண்டறியப்படாத மருத்துவ நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ரத்த மிகைக் கொழுப்பு இருந்தால்?
ஆரோக்கியமாக உண்ணுங்கள். அவற்றில் பழங்கள், காய்கள் போன்றவை அதிகமாக இருக்க வேண்டும். கொழுப்புச் சத்து குறைந்த மாமிசம், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைந்த அளவு உண்ணலாம்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்.
மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் உங்களுக்கு உள்ள ரத்த மிகைக் கொழுப்பின் அளவு குறையவில்லை என்றால், மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார்.