குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.9.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தோள் சாய தோழன்
almighty-arrahim பாலப்பருவத்தில் படர்ந்த நட்புகொடி!
காலம் கடந்தபின்னும் உயிருடனும் பின்னும் படி!
சாவு வரும் வரையும் தொடரும் படி!
ஆக்கிவைத்த அல்லாஹ்வை புகழும் படி!
எங்கள் நட்பு இருக்குதடி!


நாளுரு மேனியும்,பொழுதொரு வண்ணமும்
நானும், நீயும் சேர்ந்தே வளர்ந்தோம்!

உனக்கான தேவைகளையும்,
எனக்கான தேவைகளையும்
தேடி களையும் போதும் கலையாமல் உள்ளத்தில் கூடிக்கலந்தோம்!


வாழ்கை எந்திரத்தில் நீ ஒரு அச்சிலும்
நான் ஒரு அச்சிலும் இயங்கினாலும்.
நம் நட்பு எந்திரம் மட்டும் உன்மூச்சிலும் என்மூச்சிலும்
இணைந்தே ஓடுகிறது!


தோல் நிறம் பார்த்து வருவதல்ல தோழன் நட்பு!
அது தோள் கொடுக்கும்.

விசம் கொடுக்கும் தேள்"கொடுக்"கும்" விசமில்லாதவாறு மாற்றும் குணம் கொடுக்கும்!


ஆள் கொல்லும் உலகில்,ஆட்கொள்ளும் அன்பே நட்பு!

நன்பா! உன் தோளில் நான் சாய்ந்து அமரும் போதே,

உலகம் எனக்காக படைக்க பட்டதாய் தோனுகிறதே அதுதான் என் அதிர்ஸ்டம்!

நாம் வாழ்ந்து நம் எச்சத்துக்கும் மிச்சம் வைப்போம் நம் நட்பின் சுவடை!

                   Mohamed Thasthagir.
, ,