குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

31.8.19

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

டேலி பதிவியல் ஏடு
கணக்கு பதிவியலின் மொத்த செயல்பாடுகள்
கணக்கு பதிவியலில் பயன்படுத்தும் ஏடுகள் (Books of Accounts)

1. குறிப்பேடு - Journal Entry
2. ரொக்க ஏடு - Cash Book
பணம் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
3. விற்பனை ஏடு - Sales Book
சரக்கு விற்பனை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

4. கொள்முதல் ஏடு - Purchase Book
சரக்கு கொள்முதல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
5. வங்கி ஏடு - Bank Book
வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
6. இருப்புச் சோதனை - Trial Balance
ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் கணக்கு ஏடுகளிலுள்ள பற்று (Debit) வரவு (Credit) இருப்புகளின் பட்டியலே இருப்புச் சோதனை ஆகும்.
7. இலாப & நட்ட கணக்கு - Profit & Loss Account
அனைத்து இலாபங்களும், வருமானங்களும் மற்றும் அனைத்து செலவினங்களும், நட்டங்களும் இடம்பெறும்.
8. இருப்பு நிலைக் அறிக்கை - Balance Sheet
அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் மதிப்பை அறிவதற்கு வணிக ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்ற பட்டியலே இருப்பு நிலைக் அறிக்கை ஆகும்.

பொதுவாக கையினால் எழுதபடுகின்ற கணக்கு பதிவிற்கு முதலில்

நடவடிக்கைகள்( Transactions) --> குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) --> பேரடு ( Ledgers) --> இருப்புச் சோதனை(Trail Balance) --> வியாபார கணக்கு (Trading Account) --> இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account) --> இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet) தயார் செய்வார்கள். இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தால் மொத்த அறிக்கையும் தவறாகிவிடும்.

ஆனால் இதே விஷயம் டேலியில் செய்வதென்றால் Groups --> Ledgers (பேரடு)--> Accounting/ Inventry voucher Entry(குறிப்பேடு பதிவுகள்) செய்தால் போதுமானது. இதில் நீங்கள் குறிப்பேடு பதிவுகளில் ஒரு தவறு செய்தாலும் அந்த தவறை சரி செய்தால் அனைத்து அறிக்கைகளும் தயார் நிலையில் இருக்கும். மேலும் நீங்கள் டேலியில் பணி புரியும் போது இருப்புச் சோதனை(Trail Balance) --> வியாபார கணக்கு (Trading Account) --> இலாப & நட்ட கணக்கு ( Profit & Loss Account) --> இருப்பு நிலைக் அறிக்கை ( Balance Sheet) இந்த அறிக்கைகளை டேலி மென் பொருளே தயார் செய்துவிடும்.

எப்படி இருந்தாலும் குறிப்பேடு பதிவுகள்(Journal Entries) நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடத்தில் இருந்து டேலி மென் பொருளில் பணி புரிவதை பற்றி பார்போம்.


இரட்டை பதிவு முறை

 சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில் எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்போம்.

இரட்டை பதிவு முறை என்பது ஒவ்வொரு நடவடிகையிலிருந்தும் இரண்டு விஷயங்களை எடுத்து ஏற்கனவே சொன்ன மூன்று விதிகளில் எந்த கணக்கில் எந்த விதியில் வருகின்றது என்று பார்த்தால் இரண்டு விஷயங்களில் ஒன்று பற்றாகவும் ஒன்று வரவாகவும் இருக்கும்.

1. மோகன் என்பவர் ரூ.5,00,000 ரொக்கத்தை முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கினார்.

ரொக்க க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

மோகன் முதல் --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு

                         
                                             ரொக்க  க/கு                        ப       5,00,000.00
                                             மோகன் முதல்                 வ                            5,00,000.00


2. ராஜ் என்பவரிடம் ரூ. 1,00,000 ரொக்கத்திற்கு பொருளை கொள்முதல் செய்தார்.
கொள்முதல் க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு

                                             கொள்முதல் க/கு            ப    1,00,000.00
                                             ரொக்க  க/கு                       வ                         1,00,000.00

3. செல்வன் என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு கொள்முதல் செய்தார்.

கொள்முதல் க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

செல்வன் க/கு --> ஆள்சார் க/கு --> கொடுப்பவர் --> வரவு

                                                   கொள்முதல் க/கு            ப    2,00,000.00
                                                   செல்வன்  க/கு                 வ                         2,00,000.00
   
கடன் கொள்முதல் என்பதால் நபரின் பெயரை எடுத்து கொள்கிறோம்.


4. ரூ. 50,000 ரொக்கத்தை SBI வங்கியில் நடப்பு கணக்கு ( Current Account ) துவங்கினார்.

SBI வங்கி க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று

ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிச்செல்வது --> வரவு

                         
                                                          SBI வங்கி  க/கு           ப       5,00,000.00
                                                         ரொக்க  க/கு                வ                            5,00,000.00


5. விளம்பரத்திற்காக ரூ. 25,000 ரொக்கமாக செலவு செய்தார்.
விளம்பரம் க/கு --> பெயரளவு க/கு --> செலவுகள் --> பற்று

ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிச்செல்வது --> வரவு


                                                          விளம்பரம்  க/கு          ப         25,000.00
                                                           ரொக்க  க/கு                வ                            25,000.00

6. அறைகலன்கள் ரூ. 75,000 ரொக்கத்திற்கு வாங்கினார்.

அறைகலன்கள் க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு

                                            அறைகலன்கள்  க/கு            ப    75,000.00
                                             ரொக்க  க/கு                              வ                         75,000.00

7. ரமேஷ் என்பவரிடம் ரூ. 2,00,000 த்திற்கு பொருளை கடனுக்கு விற்றார்.

ரமேஷ் க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று

விற்பனை க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு

                                                ரமேஷ்  க/கு                         ப    2,00,000.00
                                                விற்பனை  க/கு                 வ                         2,00,000.00

8. ராஜா என்பவரிடம் ரூ. 3,00,000 த்திற்கு பொருளை ரொக்கத்திற்கு விற்றார்.

ரொக்க க/கு --> சொத்து க/கு --> உள்வருவது --> பற்று

விற்பனை க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு


                                                ரொக்க  க/கு                        ப       3,00,000.00
                                               விற்பனை  க/கு                 வ                            3,00,000.00

9. சம்பளமாக ரூ. 12,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்.

சம்பளம் க/கு --> பெயரளவு க/கு --> செலவுகள் --> பற்று

ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிச்செல்வது --> வரவு


                                                          சம்பளம்   க/கு                ப         12,000.00
                                                           ரொக்க     க/கு                வ                            12,000.00


10. பொருள் வாங்கியதற்காக செல்வன் அவர்களுக்கு ரூ.2,00,000 ரொக்கமாக கொடுத்துள்ளார்


.செல்வன் க/கு --> ஆள்சார் க/கு --> வாங்குபவர் --> பற்று
ரொக்க க/கு --> சொத்து க/கு --> வெளிசெல்வது --> வரவு

                                                செல்வன் க/கு            ப    1,00,000.00
                                             ரொக்க  க/கு                       வ                         1,00,000.00

இன்று நாம் சில அடிப்படை குறிப்பேடு பதிவுகள் இரட்டை பதிவு முறையில் எப்படி பதிய படுகின்றது என்று சில எ.கா (example) மூலம் பார்த்தோம்.
, ,