குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

5.3.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

டேலி உருவாக்கம்
டேலியில் create செய்வது பற்றி பார்போம்.
PIC -1



PIC -2

PIC -3



PIC -4

முதலில் GATEWAY OF TALLY --> ACCOUNTS INFO. PIC-1 செலக்ட் செய்து என்டர் விசையை அழுத்தவும் --> LEDGER PIC-2 செலக்ட் செய்து என்டர் விசையை அழுத்தவும் --> MULTIPLE  LEDGERS CREATE PIC-3 செலக்ட் செய்து என்டர் விசையை அழுத்தவும்  --> LEDGER CREATION PIC-4 நம் நிறுவனத்திற்கு தேவையான லெட்ஜெர்களை உருவாக்கவும்.

அடுத்த பாடத்தில்ACCOUNTING VOUCHERS பற்றி பார்போம்.


   

sson-7

நாம் அதிகம் பயன்படுத்தும் சில லெட்ஜெர்களை டேலியில் பதிந்து உள்ளேன்.



அடுத்து  நாம் டேலியில் இடம் பெற்றுள்ள  ACCOUNTING VOUCHERS பற்றி பார்போம்.

      டேலியில் இடம் பெரும் அனைத்து நடவடிக்கைகளையும் (Accounting transactions ) இந்த வவுச்சர்  வகைகளை பயன்படுத்தியே பதிவு செய்ய இருக்கிறோம். எனவே  வவுச்சர்  வகைகளும் குரூப் போலவே மிக முக்கியமான ஒன்று.
   
     டேலியில் மொத்தம் 18 வகையான வவுச்சர்  வகைகள் உள்ளன. அவற்றில் முதலில் நிதிசார் கணக்குப்  ( Accounts Only) பயன்படும் 10 வகையான வவுச்சர் வகைகள் பற்றிப் பார்போம்.

1. F4   -  CONTRA
2. F5   -  PAYMENT
3. F6   - RECEIPT
4. F7   - JOURNAL
5. F8   - SALES
6. F9   - PURCHASE
7. F10 -  REVERSING JOURNAL
8. CTRL+F8 - CREDIT NOTE
9. CTRL+F9 - DEBIT NOTE
10.CTRL+F10 -  MEMOS

1. F4   -  CONTRA (shortcut key - F4)

        இந்த வவுச்சர் வகை வங்கி கணக்கு (Bank A/c) மற்றும் ரொக்க கணக்கு (Cash A/c) இவற்றிற்கு இடையில் நிதி, பரிமாற்றப்படும்  நடவடிக்கைகளை பதிவு செய்ய பயன்படுகிறது. வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய முடியாது.

பணம் வங்கி கணக்கில் (Deposit) போடப்படுவது அல்லது வங்கியிலிருந்து பணம் எடுப்பது (withdrawal)  மற்றும் இரு வங்கி கணக்குகளுக்கு இடையில் பரிமாற்றப்படுவதும் இந்த வவுச்சரில் பதிவு செய்யலாம்.

Deposit voucher

withdrawal voucher

      நாளை மற்ற வவுச்சர்  வகைகளை பயன்படுத்துவது பற்றி பார்போம்.


lesson-8

அடுத்த வவுச்சர்

 F5   -  PAYMENT


2. F5   -  PAYMENT (shortcut key - F5)

        இந்த வவுச்சர் வகையில் பணம் கொடுப்பது  மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் கொடுப்பதும் மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும்   PAYMENT வவுச்சரில்  பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.

F6   - RECEIPT

3. F6   - RECEIPT (shortcut key - F6)

இந்த வவுச்சர் வகையில் பணம் பெறுவது  மட்டும் பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது கணக்கியலில் நடைபெறும் அனைத்து பணம் வாங்குவது  மற்றும் வங்கி காசோலையாக இருந்தாலும்  RECEIPT  வவுச்சரில் பதிவு செய்ய வேண்டும். வேறு நடவடிக்கைகளை பதிவு செய்ய கூடாது.

F7   - JOURNAL

4. F7   - JOURNAL (shortcut key - F7)

இந்த வவுச்சர் வகையில் சரி கட்டுதல் ( AdjustmentVouchers) பதிவு செய்ய பயன்படுகிறது. அதாவது ஒரு சொத்தை(Asset) கடனுக்கு வாங்குவது அல்லது விற்பது, தேய்மானம்(Depreciation), தள்ளுபடி  பெறுவது (Discount Received)அல்லது தள்ளுபடி கொடுப்பது (Discount Allowed) போன்ற நடவடிக்கைகளை இந்த வவுச்சரில் பதிவு செய்யலாம்.


  F8   - SALES


5.  F8   - SALES  (shortcut key - F8)

 இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை ( Sales ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க விற்பனை (Cash Sales ) அல்லது கடன் விற்பனை ( Credit Sales ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும்.


 F9   - PURCHASE

6.  F9   - PURCHASE (shortcut key - F9)

 இந்த வவுச்சர் வகையில் நிறுவனத்தின் பொருட்கள் கொள் முதல் ( Purchase ) செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளை இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும். அது ரொக்க கொள் முதல் (Cash Purchase ) அல்லது கடன் கொள் முதல் ( Credit Purchase ) எதுவாக இருந்தாலும் இந்த வவுச்சரில்தான்  பதிவு செய்யப்பட வேண்டும்.



, ,