குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

1.1.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முதன்மை உருவாக்கம்
MASTER CREATION ல் GROUP & LEDGER

இப்போது Gateway of Tally Menuவில் உள்ள Account Info. பற்றி பார்போம்.

Account Info. மெனு பட்டனில் கர்சரை வைத்து என்டர் விசையை அழுத்தினால் படத்தில் உள்ளது போல ஒரு screen தோன்றும்.மற்றொரு துணை மெனு கிடைக்கும்.



இதில் குழுக்கள் (Groups), பேரேடுகள் (ledgers), சீட்டு வகைகள் (Voucher types) என்ற மெனு வகைகள் கிடைக்கும்.

நாம் வரவு, செலவுகளை பதிவு செய்வதற்கு ஒவ்வொரு வரவு செலவிற்கும் தனித்தனி லெட்ஜர்களை உருவாக்கம்(Create) செய்ய வேண்டும்.இங்கே உள்ள லெட்ஜர் பட்டனில் மவுசை வைத்து Double Click செய்தால் படத்தில் உள்ளது போல ஒரு screen தோன்றும்.




இதில் Display வை click செய்தால் இரண்டு லெட்ஜர்கள் இருக்கும். அவை 1. Cash 2. Profit & Loss Account இவற்றை predifined ledgers என்பார்கள் . இந்த இரண்டு லெட்ஜர்கள் அனைத்து Company க்கும் பொதுவானது. எனவே இவை ஒவ்வொரு Company க்கும் default - ஆகவே உருவாகிவிடும். Company க்கு தேவையான மற்ற லெட்ஜர்கள் அனைத்தும் நாம்தான் உருவாக்கம்(Create) செய்ய வேண்டும்.

மற்ற லெட்ஜர்கள் உருவாக்குவதற்கு முன்பு நாம் குரூப்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் லெட்ஜரை உருவாக்கும் பொழுது அந்த லெட்ஜர் எந்த குரூப்பில் சேர்ந்தது எனக் கேட்கும். அங்கே சரியான குரூப்பை தேர்வு செய்தால்தான் நம் நிறுவனத்தின் கணக்கியல் சரியாக இருக்கும். எனவே அனைத்திற்கும் இந்த குரூப்தான் முதன்மையானது. எனவே குரூப்பை பற்றி தெளிவாக காண்போம்.

டேலியில் மொத்தம் 28 குரூப்கள் உள்ளது. அவை




1. முதல் கணக்கு (Capital Account):

நிறுவனத்தின் முதல்(Capital) கணக்கு. இதில் பங்குத் தொகை (Partner's Capital) மற்றும் Drawing A/c (எடுப்பு கணக்கு) ஆகிய லெட்ஜெர்கள் இடம் பெறும். Drawing A/c என்பது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்குதாரர், உரிமையாளர் ஆகியோர் தங்கள் சொந்த செலவிற்கு நிறுவனத்திலிருந்து பணமோ, பணமதிப்புள்ள பொருளோ அல்லது சரக்கோ எடுத்தால் அந்த செலவினங்கள் இந்த குரூப்பில் அடங்கும்.

2. கடன் (பொறுப்புகள் ) Loans (Liability):

இந்த குரூப்பில் பிறரிடம் வாங்கிய கடன்கள் அடங்கும்.

3. நடப்பு பொறுப்புகள் (Current Liabilities):

இந்த குரூப்பில் நாம் செலுத்த வேண்டிய Duties & Taxes, Provisions, Sundry Creditors, Bills Payble ஆகிய லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

4. நிலையான சொத்து (Fixed Assets):

நிலையான (அசையா )சொத்து கணக்கு இந்த குரூப்பில் land & Buildings, Machinaries, Furnitures... போன்ற சொத்துகள் சம்மந்தப்பட்ட லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

5. முதலீடு (Investment):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்தில் அல்லாமல் மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அது Investment எனப்படும். Shares, Bonds, Govt. Securities, other concerns investment சம்மந்தப்பட்ட லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

6. நடப்பு சொத்து (Current Assets): ( Easily converted to Cash)

இந்த குரூப்பில் Stock-in-hand, Deposits(Assets), Loans & Advances (Assets), Sundry Debtors, Cash-in-hand, Cash -at-Bank, Bills receivable போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

7. கிளை/ பிரிவு (Branch/ Divisions):

இந்த குரூப் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகள் உள்ள நிறுவனத்திற்கு பயனுள்ளதாக அமையும். நிறுவனத்தின் ஒரு கிளைக்கும் மற்றொரு கிளைக்கும் இடையிலான நடவடிக்கைகள்(Transactions) இடம்பெறும். இதில் இடம்பெறும் லெட்ஜெர்களை அந்தந்த கிளைகளின் பெயரிலேயே உருவாக்கலாம். அதாவது Salem Branch, Erode Branch, Namakkal Branch

8. இதர செலவுகள் (சொத்து ) Misc. Expenses (Asset):

மற்ற செலவுகள் எல்லாம் செலவின் வகையைச் சார்ந்தது . இந்த குரூப் மட்டும் சொத்து வகையைச் சார்ந்தது ஏனெனில் இது சொத்துகளுக்காக செலவிடப்படும் செலவுகள். Repair of Furnitures, Building Maintenance and lost year Loses
போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

9. தற்காலிக கணக்கு (Suspense A/c):

இந்த குரூப்பில் தற்காலிகமாக நடைபெறும் நடவடிக்கைகளை இடம் பெறச் செய்யலாம். Advance paid, Daily cash difference போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

10. விற்பனை கணக்கு (Sales Accounts):

இந்த குரூப்பில் அனைத்து சரக்கு விற்பனை கணக்கு(Goods Sales) மட்டும் இடம் பெறும். வேறு எந்த பொருட்களோ அல்லது சொத்துகளோ விற்பது இதில் இடம் பெற கூடாது. அது மட்டுமல்லாமல் சரக்கு விற்பனை திருப்பமும் (Sales Return) இதில் இடம் பெறும். Goods Sales, Sales Return போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

11. கொள்முதல் கணக்கு (Purchase Accounts):

இந்த குரூப்பில் அனைத்து சரக்கு கொள்முதல் கணக்கு(Goods Purchase) மட்டும் இடம் பெறும். வேறு எந்த பொருட்களோ அல்லது சொத்துகளோ வாங்குவது இதில் இடம் பெற கூடாது. அது மட்டுமல்லாமல் சரக்கு கொள்முதல் திருப்பமும் (Purchase Return) இதில் இடம் பெறும். Goods Purchase, Purchase Return போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

12. நேரடி வருமானம் (Direct Incomes):

நாம் ஒரு பொருளை விற்று(Sales) அதன் மூலம் நமக்கு வரக்கூடிய வருமானம் நேரடி வருமானம்.

13. நேரடி செலவு (Direct Expenses):

இதை வணிக செலவு (Trading Expenses) என்பர். நம் நிறுவனம் ஒரு தயாரிப்பு நிறுவனம் என்று வைத்து கொண்டால், நாம் உற்பத்தி செய்வதற்கு முதலில் மூலபொருட்கள் (Raw Materials) வாங்கி, நம் நிறுவனத்திற்கு கொண்டு வருவோம். நாம் சரக்கு வாங்கும் இடத்தில் இருந்து நம் நிறுவனத்துக்கு கொண்டு வர சரக்கு கொள்முதல் செலவு, போக்குவரத்து செலவு ஏற்படுகின்றது. அந்த மூலபொருட்கள் (Raw Materials) பயன்படுத்தி உற்பத்தி பொருட்களாக மாற்றுவோம். அப்பொழுது Factory Rent, E.B Charges, Daily Wages, Packing Charges Fright Charges போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

14. மறைமுக வருமானம் (Indirect Incomes):

இதில் Discount received, Interest received, Commission Received, Bank Interest & Incentives போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

15. மறைமுக செலவு (Indirect Expenses):

இதை நிர்வாக செலவு (Administration (Office)Expenses) என்பர். இதில் நம் அலுவலகத்தில் நடைபெறும் Salary, Rent, Advertisement, E.B charges, Phone Bill, Stationary, Printing &Postage, Courier, Audit fee.. போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

16. Reserves & Surplus:

இந்த குரூப்பில் சென்ற நிதியாண்டின் லாபம் இடம் பெறும் மேலும் General reserve, Capital reserve, Investment Allowance Reserve, Share Premium Account போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

17. Bank OD(Over Draft alias OCC) Accounts:

நம் நிறுவனத்திற்கு சரக்குகளின் பெயரில் வாங்கிய கடன் இதில் இடம் பெறும். Cash credit A/c, Export packing Crdit A/c & Packing Credit Limit A/c லெட்ஜெர்கள் இடம் பெறும்.

18. அடமான கடன் (Secured Loans):

இந்த குரூப்பில் வங்கியில் பெறப்படும் கடன்கள் , நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கடன்கள் இடம் பெறும். இவை அனைத்தும் ஏதாவது ஒரு சொத்தினை அடமானம் வைத்து பெறப்படும் கடன்கள்.

19. அடமானமில்லா கடன் (Unsecured Loans):

இந்த குரூப்பில் எந்த சொத்தினையும் அடகு வைக்காமல் நிறுவனத்திடமிருந்து அல்லது நண்பர்கள், உறவினர்களிடமிருந்தோ நம்பிக்கையின் பெயரில் பெறப்படும் கடன்கள் இதில் அடங்கும்.

20. வரிக்கணக்கு (Duties & Taxes):

இந்த குரூப்பில் விற்பனை வரி(Sales Tax), வருமான வரி(Income Tax) மற்றும் சேவை வரி(Service Tax) போன்றவை அடங்கும். VAT, CST,EXCISE DUTY AND CHESS DUTY லெட்ஜெர்கள் இடம் பெறும்.

21. முன்னேற்பாட்டு கணக்கு (Provisions):

இந்த குரூப்பில் பின் செலுத்த வேண்டிய தொகைகளைத் தற்பொழுது ஒதுக்கீடு செய்வதாகும். Provision for IncomeTax, Provision for Bad & Doubtful Debts போன்ற லெட்ஜெர்கள் இதில் அடங்கும்.

22. பற்பல கடனீந்தோர் (Sundry Creditors):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்திற்கு தேவையான சரக்கு (Stock) கடனுக்கு கொடுத்தவர்களின் (Goods Suppliers) லெட்ஜெர்கள் இடம் பெறும்.

23. சரக்கு கையிருப்பு (Stock-in-hand):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்திடம் உள்ள சரக்கின் Closing Balance மதிப்பு இடம் பெரும். இதில் Opening Stock, Closing Stock லெட்ஜெர்கள் இடம் பெறும்.

24. வைப்பு நிதி (சொத்து) Deposits(Assets):

இதில் அனைத்து டெபாசிட்களும் இடம் பெறும். Fixed Deposit, Recurring Deposit, Security Deposit and other concern deposits லெட்ஜெர்கள் இடம் பெறும்.

25. கடன் & முன்பணம் (சொத்துகள்) Loans & Advances (Assets):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்தில் பணி செய்யும் வேலையாட்களுக்கு நாம் கொடுத்த கடன் மற்றும் முன்பணம் தொடர்பான கணக்குகள். இதில் Employees Loan A/c, Employees Advance A/c லெட்ஜெர்கள் இடம் பெறும்.

26. பற்பல கடனாளிகள் (Sundry Debtors):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்திடம் இருந்து கடனுக்கு சரக்கு (Stock) வாங்கியவர்களின்(Goods Buyers) லெட்ஜெர்கள் இடம் பெறும்.

27. கையிருப்பு ரொக்கம் (Cash-in-hand):

இந்த குரூப்பில் நம் நிறுவனத்தின் Cash, Petty Cash & Cash at Branch லெட்ஜெர்கள் இடம் பெறும்.

28. வங்கி கணக்கு (Bank Accounts):

இந்த குரூப்பில் வங்கியின் நடப்பு கணக்கு(Current Account) மற்றும் சேமிப்பு கணக்கு (Savings Bank Account) ஆகியவற்றை உள்ளடக்கியது.
, ,