குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

1.11.19

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

டேலி விண்டோ பொத்தான்களின் செயல்பாடு
1. Select Company, Shut Company
2. Date, Period
3.Company Alter
ஆகியவற்றை பற்றியதே.,

F1.நிறுவன தெரிவு. (Select Company)

நிறுவன உருவாக்கம் முடிவுற்ற பின் ,நாம் தினசரி பயன்படுத்த உள்ள
செயலே இந்த நிறுவன தெரிவு.






மேலே உள்ள COMPANY INFO MENU- வில் இருந்து F1 KEY அல்லது
(SELECT CMP)என்ற MENU-வின் HOT KEY " S" - ஐ அழுத்துவதின் மூலம் நாம் நமது நிறுவனத்தை தெரிவு செய்யலாம்.



மேல் உள்ள படத்தின்படி ,நீங்கள் தெரிவு. செய்ய வேண்டிய நிறுவன
முதலெழுத்து M - என்று கொள்வோம்.
தற்போது NAME -பகுதியில் நீங்கள் M - என்று தட்டச்சு செய்துள்ளீர்
என்றால டேலி M - ல் ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனங்களின் பெயர்களையும் இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும்.

டேலியின் மாற்றி யோசி :

பொதுவாக கணினியில் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த
CURSOR -மேலே செல்வதும் ,கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த
CURSOR -கீழே செல்வதும் வாடிக்கை.ஆனால் நிறுவன தெரிவின் போது  நிறுவ   னங்களின் பெயர்களை இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும் நிலையில் மட்டும் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த CURSOR -கீழே செல்லும்.கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த CURSOR -மேலே செல்லும்.அதாவது,மேல் உள்ள படத்தின்படி கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த - Model Agencies நிறுவனமும்,மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த - Model Traders நிறுவனமும் தெரிவு செய்யப்படும்.

எனவே உங்கள் நிறுவனம் மேற்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா அல்லது கீழ்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா என்பதை பொருத்து எந்த அம்புகுறி KEY உபயோகிக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.

எனவே நிறுவன தெரிவின்போது NAME -பகுதியில் நிறுவனத்தின் பெயர் முழுவதையும் தட்டச்சு செய்ய வேண்டாம்.ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்து பின் ARROW KEY -மூலம் தெரிவு செய்யலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு

பொதுவாக பிற கணக்கியல் மென்பொருளில்( Other Accounting Software) ஒரு சமயத்தில் ஒரு நிறுவனத்தை மட்டுமே OPEN செய்ய இயலும்.OPEN செய்யப்பட்ட நிறுவனத்தை மூடினால் மட்டுமே ,பிற நிறுவனத்தை OPEN செய்ய முடியும்.ஆனால் டேலி மென்பொருளில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களை தெரிவு செய்ய இயலும்.நீங்கள் தற்போது DEMO AGENCIES -என்ற நிறுவனத்தில் இருப்பதாக கொள்வோம்,அதன் GATEWAY OF TALLY - என்ற MENU-வில் இருந்து F1 -Select Cmp என்ற -KEY அழுத்தி MODEL AGENCIES நிறுவனத்தை தெரிவு செய்யுங்கள்.






இப்போது மேலே உள்ள படத்தில் உள்ளப்படி Model Agencies மற்றும் Demo Agencies என்ற இரு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால் இதில் BOLD எழுத்துக்களில் உள்ள Model Agencies -CURRENT WORKING COMPANYஆகும். Demo Agencies - READY TO WORK COMPANY ஆக உள்ளது.

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் வரும் பயன்கள்:

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் இரு பயன்கள் உண்டு.

1.ENTRY SCREEN -னில் இருந்தே நிறுவனங்களை மாற்றலாம்

தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் VOUCHER ENTRY SCREEN -ல் இருப்பதாக கொள்வோம்.



இதன் HELP WINDOW-வில் F3 -COMPANY என்ற KEY அழுத்தி நீங்கள் Model Agencies நிறுவனத்தில் இருந்து Demo Agencies -க்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களிலும் DATA ENTRY - செய்யலாம்.

2. நிறுவனங்களின் REPORT -களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் BALANCE SHEET-ல் இருப்பதாக கொள்வோம்.இதன் HELP WINDOW-வில் ALT+C (C : NEW COLUMN) என்ற KEY அழுத்தி Demo Agencies தெரிவு செய்வதின் மூலம்



இரு நிறுவனங்களின் BALANCE SHEET -களையும் ஒரே திரையில் ஒப்பிட்டு கொள்ளலாம்.




இதனை போலவே மற்ற அறிக்கைகளையும் (PROFIT & LOSS A/C, STOCK SUMMARY ,TRIAL BALANCE ) ஒப்பீடு செய்ய இயலும்

F1 .நிறுவன வெளியேற்றம்.(Shut Company)
பொதுவாக ஒரு நிறுவனத்தில் நமது பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், அந்நிறுவனத்தை விட்டு தற்காலிகமாக வெளியேற நாம் பயன்படுத்துவதே

Shut Company நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENUவில் இருந்து ALT + F1
என்ற -KEY யை அழுத்தி அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறலாம்.

F3 .நிறுவன தகவல் மாற்றம் ( Company creation & Alter)

நிறுவன உருவாக்கத்தின் போது,நாம் அளித்த தகவல்களை மாற்றவோ (அல்லது) அளிக்க மறந்த தகவல்களை சேர்க்கவோ பயன்படுவது தான் நிறுவன தகவல் மாற்றம்.

நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F3

என்ற -KEY யை அழுத்தவும். அதன்பின் வரும் COMPANY INFO MENU -வில் இருந்து ALTER -ஐ தெரிவு செய்யவும்.




பிறகு உங்கள் நிறுவனத்தினை தெரிவு செய்யவும்.



தற்போது நீங்கள் நிறுவன தகவல் மாற்ற திரையில் இருப்பீர்கள்.



இதில் NAME,MAILING NAME,ADDRESS,TELEPHONE,MOBILE,EMAIL.PIN CODE -என அனைத்து தகவல்களையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

இதில் மாற்றக் கூடாத தகவல்கள் FINANCIAL YEAR FROM & BOOKS BEGINNING FROM என்றவையே ஆகும்.இவற்றை மாற்ற முற்பட்டால் தகவல் இழப்பு (DATA LOSS) ஏற்படலாம்.

தகவல்களை மாற்றியபின் ACCEPT செய்வதின் மூலம்,மாற்றியவற்றை SAVE செய்ய இயலும்.

F2 : Date - நிறுவனத்தின் கணக்கு பதிவுகளின் நடப்பு தேதியை கொடுக்கவும் மாற்றவும் பயன்படுகிறது..

F2 : Period - நிறுவனத்தின் கணக்கு பதிவுகளின் நடப்பு ஆண்டை கொடுக்கவும் மாற்றவும் பயன்படுகிறது.
, ,