குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

31.5.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மன அமைதி

 

அமைதி தேடும் போதும் அமைதியாய் தேடும் சூழல் இல்லை

அமைதி அமைவது வரம் என்றால்

அமைதியாய் தியானம் செய்வது வெற்றி

அமைதி பெற உழைத்தல் வேண்டும்

நேர்மை உறுதி கொண்ட உழைப்பே அதை தரும்!

தனிமை அமைதி என கொள்ளல் சரி என நினைத்தால்

தனிமையே அமைதி திண்ணும்!

அமைதி மென்மை அல்ல அது வீரியம்!

அமைதியாய் இருப்பதாய் நடிப்பவர் மனதில்

ஆர்பரிக்கும் கடலே இருக்கும்!

அமைதி தேடும் மார்க்கம் செல்லும்

மனதே அமைதி கொள்ளும் இல்லை எனில் வாழ்வே கொல்லும்”

அமைதி வாழ்வில் இல்லை எனில்

சிலர் அவசரமாய் மாய்த்து கொள்வர்

அதன் பின் இறை தண்டனையில்

நிரந்தர அமைதி இல்லா நிலை!

அமைதி மரணத்திலும் கிடைக்கும் நல் ஆத்மாவுக்கு

அமைதி சமாதிக்குள் அல்ல

இறை நம்பிக்கை, நேர்மை. வணக்கத்தில்

பொறுமை என்பதே அமைதியின் மறு வடிவம்!

பொறுத்தால் இறைவன் கூட இருப்பான் பின் அமைதி தானா அமைந்துவிடும்!

*** முஹம்மது தஸ்தகீர் *

, ,