குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

19.5.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உழைப்பே உயர்வு
Labor is the rise

விடிகிறது மற்றொரு நாள் சகோதரா
முடிகிறது ஓய்வுநேரம் விழித்திடு
வடிகிறது இலைநுனியில்பனித்துளி
மடிநீங்க குளிர்நீரில் குளித்திடு

காரிருள் உழைத்துக் களைத்து விலக
கதிரவன் கதிர்பரப்பி உழைக்க
ஊரெலாம் விழித்துழைப்பைத் துவக்க
உனக்கும்தான் விடிகிறது ஊனுழைக்க

தூக்கமே பாய்களில் பற்றினால்
தாக்குமே நோய்கள் தொற்றினால்
உறக்கம் கலையனும் தோழரே
உழைத்து நிலைக்கனும் வாழ்விலே

உழைக்காமல் வயிற்றை வளர்த்தால்
தழைக்காது உன்றன் உடல்நிலை
மழைக்கால மண்குடில் போல
குலைந்திடும் நின்றன் தலைமுறை

ஓரிறு பருக்கைக ளாயினும்
ஓருழைப்பினில் கிடைத்த தாகனும்
ஒருவாய்க் கஞ்சியே யாயினும்
ஓருழைப்பின்றி கிடைக்காது சாகனும்

ஓசியில் வளர்க்கின்ற குடலும்
தாசியின் வகைகெட்ட உடலும்
காலத்தின் பிடிதனில் சிக்கிடும்
கடும் நோய்கண்டு சிதைந்தே போய்விடும்

சிற்றெரும்புச் சாரைகள் காண்பீரே
சிறகடிக்கும் நாரைகள் காண்பீரே
சிறுதுரும்பென உணவுக்குக் கூட​
சுறுசுறுப்பாய் உழைத்துபின்உண்ணும்

உழவனின் உழைப்பின்றிப்போனால்
உலகுக்கு ஏதையா உணவு
உழைத்து வழிகின்ற வியர்வையில்தானே
உருவாகும் உனக்கென்று வாழ்வு

கரும்பச்சையம் முதலீடு செய்து
கரியமில வாயுவும் சேர்த்து
கதிரவக் கதிர்களின் சாட்சியில்
கானகத்தின் உழைப்பே கனிகள்

கண்களின் உழைப்பே காட்சிகள்
கால்களின் உழைப்பே கடவுகள்
இருவரின் உழைப்பே இல்லறம்
இதயத்தின் உழைப்பே இவ்வுயிர்!

உயிர்வாழும் அர்த்தமே உழைப்புத்தான்
உயர்வாகும் வாழ்க்கையே உழைத்துத்தான்
உழைக்கின்ற வர்க்கத்தினுள் நுழை
உன்கரங்களை நம்பியே உழை!
, ,