இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/04/2014

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குஜராத் பின்தங்கிய மாநிலம்
almighty-arrahim.blogspotcom
குஜராத் வறட்சி 
மோடி வளர்ச்சியின் நாயகன், குஜராத் இந்தியாவின் ரோல் மாடல் என்றெல்லாம் பி.ஜே.பி யும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் மாயையை உருவாக்குகின்றன. 
குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர். குஜராத்தில் நடப்பது என்ன ? என்ற உண்மையை ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு இதோ உங்கள் முன் வைக்கிறோம். 

படியுங்கள்…. சிந்தியுங்கள்! மோடியின் முகமுடியை கிழித்தெறிய வாருங்கள்!

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

gujrat from mannu on Vimeo.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.

கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.

வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.

மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.

கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!

இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். கிராமப்புறத்தில் 86ரூபாய் ! இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான் !

எதில் குஜராத் முதலிடம்?
69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !

சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !

69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !

சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் – குஜராத் வாபி நகரம் !
5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் 
முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!

ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !

தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!
, ,