குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.12.09

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உடல் எடை குறைய
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான்.ஏன்னா ' சிக்கு'ன்னு இருக்க எல்லோருக்கும் தான் ஆசை தான்

உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒருசில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம்.

மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

பூண்டு

உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின்(Allicin) என்னும் பொருள் பூண்டில் உள்ளது.

எனவே ஆண்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம்.

முட்டை

ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று.
ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையையும் குறைக்கும்.

கடுகு எண்ணெய்

உணவுகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியாது. எனவே எண்ணெயில் கடுகு எண்ணெயை சேர்த்து சமைத்தால் அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

பாசிப்பருப்பு

இந்த சிறிய மஞ்சள் நிறப் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதோடு உடல் எடையையும் குறைக்கும்.

மோர்

ஆண்களுக்கு ஒரு சிறந்த உடல் எடையை குறைக்கும் ஆரோக்கிய பானம் என்று சொன்னால் அது மோர் தான்.
அதிலும் ஜிம் அல்லது உடற்பயிற்சி செய்ததும் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உடல் எடை குறைவதோடு உடலில் வறட்சியில்லாமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும்.
அதிலும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள தயிரைக் கடைந்து, மோராக குடிப்பது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்

ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவானது குறையும்.
எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற உணவுப் பொருட்களை சேர்த்தால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களும் கரைந்து உடல் எடை குறையும். எனவே ஆண்கள் இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

ஏலக்காய்

இந்த நறுமணமுள்ள உணவுப் பொருளானது உடல் எடை குறைக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை தடுத்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இஞ்சி

காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை தேனுடன் சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறையும்.
, ,